குவைத்தில் வாகனம் ஓட்டும் போது Original ஓட்டுநர் உரிமம் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்;இல்லையெனில் போக்குவரத்து சட்டம் மீறலாக கருதப்படும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
Image : Digital Mobile I'd Copy
குவைத்தில் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை மீண்டும் நடைமுறையில் வந்துள்ளது
குவைத்தில் இனிமுதல் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவிய சூழலில் விதிவிலக்குகள் வழங்கப்பட்டன மற்றும் எனது Kuwait Mobile I'd-யில் உள்ள உங்கள் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினால் போதும் என்ற தற்காலிகமான சலுகை நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்த தற்காலிக வசதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட குவைத்தின் அதிகாரபூர்வ ஆவணங்கள் பலவற்றையும் டிஜிட்டல் மயமாக்க உள்துறை அமைச்சகம் முன்பு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போதைய போக்குவரத்துச் சட்டத்தின்படி, ஓட்டுநர் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கவில்லை என்றால் அது போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படுகிறது.இதை மாற்றம் செய்ய சட்டத்தில் திருத்தம் செய்து அமைச்சரவை ஒப்புதல் பெற வேண்டும் அதன் பிறகே Kuwait Mobile I'd-யில் உள்ள உங்கள் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினால் அது சட்டபூர்வமாக கருதப்படும்.