BREAKING NEWS
latest

Saturday, November 6, 2021

குவைத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைபட்ட விசிட் விசாக்கள் வழங்கும் பணிகள் நாளை முதல் மீண்டும் துவங்குகிறது

குவைத்தில் நாளை முதல் அனைத்து வகையான விசிட் விசாக்களும் வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகிறது என செய்தி வெளியாகியுள்ளது

Image : விசா நகல் செய்தி பதிவுக்காக

குவைத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைபட்ட விசிட் விசாக்கள் வழங்கும் பணிகள் நாளை முதல் மீண்டும் துவங்குகிறது

குவைத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து வகையான விசிட் விசாக்களும் வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகிறது எனவும், இது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட் மையங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உ‌ள்துறை அமை‌ச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் நாளிதழ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.மனைவி மற்றும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Enter விசா பெறவும்,வணிக விசிட் விசா மற்றும் அரசாங்க விசிட் விசாவுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும். குடும்ப விசிட் விசா பெறுவதற்காக முந்தைய நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச சம்பள வரம்பு உட்பட நிபந்தனைகளுடன் வருகை தருகின்ற நபர்கள் குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழையும் இணைத்து விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பத்தை ஏற்கும் அதிகாரிகளுக்கு இது தெளிவாக தெரியும் விதத்தில் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் www.moi.gov.kw வழியாக முன்கூட்டியே விசா விண்ணப்பம் சமர்ப்பிக்க செல்ல Appointment எடுக்க வேண்டும். நீண்ட 20 மாத இடைவெளிக்குப் பிறகு தகுதியான வெளிநாட்டவர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் குடும்ப விசா வழங்கும் பணிகள் துவங்கியது அதேநேரம், விசிட் விசா வழங்கும் பணிகள் அதே தேதியில் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் அது நடைமுறைக்கு வராத நிலையில் நாளை(07/11/21) முதல் அனைத்து வகையான விசிட் விசாக்களும் வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி ஆகும்.

Add your comments to குவைத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைபட்ட விசிட் விசாக்கள் வழங்கும் பணிகள் நாளை முதல் மீண்டும் துவங்குகிறது

« PREV
NEXT »