விமானத்தில் தீபாவளி வெடிப்பொருட்களுடன் வளைகுடா புறப்பட விமான நிலையம் வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே
இந்தியா வந்து விடுமுறை முடித்து வளைகுடா திரும்பிய இந்தியர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது
இந்தியா,கேரளா மாநிலம் திருச்சூர் சாவக்காட்டைச் சேர்ந்த அர்ஷாத் என்பவர் தன்னுடைய விடுமுறை முடித்து மீண்டும் வளைகுடா திருப்புவதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதனையும் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த தீபாவளி தினத்தில் பயன்படுத்திய வானவேடிக்கை வெடிப்பொருட்களில் மீதி வந்ததை வளைகுடாவில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க எண்ணி அவர் இதை தன்னுடைய உடைமையுடன்(பையில்) எடுத்து வந்துள்ளார்.
தொடர்ந்து அவர்களுடைய உடைமைகளை விமான நிலைய ஸ்கிரீனிங் மிஷினில் லக்கேஜ் பரிசோதனை செய்த நேரத்தில் வெடிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அதனை தொடர்ந்து அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்து நெடும்பாசேரி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் மீது விமானத்தின் பயணத்தின் போது சட்டவிரோதமாக வெடிபொருட்களை கைவசம் வைத்திருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான பயணத்தில் எடுத்துச்செல்ல கூடாத பொருட்கள் என்னென்ன என்பதை பயணிகள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.