குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில் இந்தியாவை சேர்ந்த ஹவுஸ் டிரைவர் மற்றும் மந்திரவாதி கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில்,இந்திய ஹவுஸ் டிரைவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்:
குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில்,இந்திய ஹவுஸ் டிரைவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மந்திரவாதியை இரகசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். குவைத்திலுள்ள பணக்காரரான தொழிலதிபரை(குவைத்தி) சூனியம் செய்து இருவரும் ஸ்பான்சரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பான்சரின் சகோதரர்கள் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் வருமாறு:
தொழிலதிபரான(குவைத்தி) தன்னுடைய அண்ணனை ராஜு என்ற இந்திய ஹவுஸ் டிரைவர் முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவர் மாந்திரீகம் மூலம் தன்னுடைய அண்ணனை தன்வசம் வைத்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக சகோதரர்கள் புகார் அளித்தனர். 150 தினார் மட்டுமே சம்பளம் பெறும் டிரைவர் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை பயன்படுத்துவதாகவும், அவர் தினமும் அணியும் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் காலணிகள் சராசரியான ஓட்டுநரின் வாழ்க்கைத் தரத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் சகோதரர்களின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில் இவர்களது அண்ணன் மட்டுமல்லாமல் வீடு முழுவதும் இப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும். அவர்(ஓட்டுநர்) சமீபத்தில் First-class விமான டிக்கெட்டில் நாட்டிற்க்கு பயணம் செய்து பிறகு குவைத் திருப்பினார் எனவும்,தங்கள் சகோதரரின் பெரும் மதிப்பிலான பணத்தை கொள்ளையடிப்பதாக சந்தேகிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சகோதரர்களின் புகாரின் பேரில் உளவுப்பிரிவு அதிகாரிகள் டிரைவரை கடந்த பல நாட்களாக கண்காணித்தனர்.
தொடர்ந்து ஓட்டுநர் அவ்வப்போது சொகுசு குடியிருப்புக்கு ஒன்றுக்கு சென்று வருவதும், அங்கு வேறு யாரோ தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு டிரைவரை அதிகாரிகள் பிடித்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஸ்பான்சரை மயக்க இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பிரபல மந்திரவாதி தான் மாந்திரீகம் செய்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்பான்சரின் வீட்டு முற்றத்தில் பல இடங்களில் மந்தீரிக தகட்டை புதைத்து வைத்ததாகவும் ஓட்டுநர் விசாரணையின் போது வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஸ்பான்சரிடம் இருந்து நிறைய பணத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விசாரணைக் குழுவினர் இருவரையும் கைது செய்தனர்.
கூடுதல் விசாரணைக்காக ஸ்பான்சரான தொழிலதிபரை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். காவல் நிலையம் வந்த ஸ்பான்சர் தனது ஓட்டுநரை கைது செய்ததைக் கண்டதும் மயங்கி விழுந்தார். பல வருடங்களாக சொந்த மகனைப் போல் நேசித்த ராஜு அப்படிப்பட்ட நபர் இல்லை எனவும்,அவரை விடுவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகளிடம் ஸ்பான்சர் கெஞ்சியதால் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். புகார் அளித்த சகோதரர்கள் கூறுகையில் தங்கள் சகோதரர் பலத்த மந்தீரிக வலையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.