குவைத்தில் கோவிட் மூலம் விதிக்கப்பட்ட பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன பிப்ரவரி-20 முதல் அமலுக்கு வருகின்றன
Image : செய்தி தொடர்பாளர்
குவைத்தில் கோவிட் மூலம் நாட்டில் நுழைய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன,விரைவில் நடைமுறையில்
குவைத் கோவிட் சூழலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறியப்பட்டன. நாட்டின் சுகாதார நிலை மேம்பட்டு வருவதால் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று(14/02/2022) திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய முடிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. அதன் விபரங்கள் பின்வருமாறு:
குவைத் அங்கிகாரம் வழங்கியுள்ள தடுப்பூசி டோஸ் முடிந்த பிறகு நாட்டிற்குள்(குவைத்திற்குள்) நுழையும் பயணிகளுக்கான புறப்பாடு நாட்டில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் எடுத்துவர வேண்டும் என்ற முடிவு ரத்து செய்யப்பட்டது. இதன் பொருள் இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் எடுத்துவர வேண்டாம்
ஆனால் அவர்கள் குவைத்தில் நுழைந்து 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். இருந்தாலும் இவர்கள் நாட்டை(குவைத்தை) அடைந்தவுடன் பி.சி.ஆர் பரிசோதனை செய்தி முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால் அன்றைய தினம் தனிமைப்படுத்தலை உடனடியாக முடித்து கொள்ளலாம்.
புதிய முடிவின்படி தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத நபர்களுக்கும் குவைத்தில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இருப்பினும், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு குவைத்தில் நுழைவதற்கு 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை எதிர்மறை(Negative) சான்றிதழ் எடுத்துவர வேண்டும் மற்றும் 7 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும்.
பொது போக்குவரத்து முழுமையான(100 சதவீதம்) அளவில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
வணிக வளாகங்களுக்குள் நுழைவதற்காக பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.
மேலும் வருகின்ற மார்ச்-13,2022 முதல் அரசு சார்ந்த நிறுவனங்கள் முழு அளவில்(100 சதவீதம்) ஊழியர்களுடன் செயல்படும்.