குவைத்தில் சாதனை பெண்மணியாக வலம்வருகின்ற சரண்யா அவர்களின் மபரூக் குறும்படம் முதல் முறையாக திரையரங்கில் வெளியானது
Image : சாதனை பெண்மணி சரண்யா
சாதனை பெண்மணி சரண்யா;குவைத் திரையரங்கில் வெளியான முதல் குறும்படம்-மபரூக்
குவைத்தில் உள்ள ஓசோன் திரையரங்கில் மபரூக் குறும்படத்தின் பிரீமியர் ஷோ இன்று(05/02/2021) சனிக்கிழமை காலை 11:15 மணியளவில் திரையிடப்பட்டது. இந்த குறும்படம் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட டி.கே.சரண்யா தேவி இயக்கத்தில், மகேஷ் செல்வராஜன் தயாரித்து, முஹம்மத் ரபீக் திரைக்கதை, ரதீஷ்.C.V அம்மாஸ் ஒளிப்பதிவு செய்து, ரம்பிரசாத் நாச்சிமுத்து இசையமைத்து தன்யா,அன்சீன், அம்ருதா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த குறும்படத்தில் அம்ருதா அவர்களின் நடிப்பு உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த குறும்படம் குழந்தை இல்லாத பெண்மணி ஒருவர் சமூகத்தில் சந்திக்கின்ற பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
Image : குறும்படம் பார்க்க வந்தவர்கள்
கோவிட் பாதுகாப்பு விதிமுறைகள் நிலுவையிலுள்ளதால் நெருக்கமான நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே பிரீமியர் ஷோவுக்காக அழைக்கப்பட்டனர். இந்த குறும்படத்தை பார்த்த அனைவரும் இவர்களின் இந்த சிறந்த படைப்பை பாராட்டினர். மேலும் சரண்யா தேவி அவர்கள் பல துறைகளில் சாதனைகள் செய்துள்ளார். குவைத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார், இதன் காரணமாக குவைத்திலுள்ள இந்தியர்கள் மத்தியில் பிரபலமானார் ஆவார். அதுபோல் ஆசிரியர் ஆகவும் தன்னுடைய சேவையை செய்து வருகிறார், RJ ஆகவும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள பெண்மணி ஆவார். சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள சரண்யா விஸ்மயா உள்ளிட்ட பல அமைப்புடன் இணைந்து தன்னாலான சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
Image credit: சரண்யா குறும்பட குழுவினர்களுடன்
இப்படிப்பட்ட பன்முகத்தை கொண்டவர் அவர் தற்போது இயக்குனராக தன்னுடைய புதிய முத்திரையை பதித்துள்ளார். குவைத் அளவில் நடைபெற்ற குறும்படங்களுக்கான போட்டியில் "மபரூக்" பல விருதுகளை பெற்றுள்ளது. இவருடைய இந்த பல சாதனைகளுக்கும் அவருடைய கணவரும் மற்றும் இந்த குறும்படத்தை தயாரித்தவருமான மகேஷ் செல்வராஜன அவர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார். அவருடைய இந்த சாதனை குவைத்திலுள்ள இந்தியர்களாக, அதிலும் குறிப்பாக தமிழர்களுக்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
Image credit:குறும்படம் திரையிடப்பட்ட அந்த நிமிடம்