குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
(Image Credit : புகைப்படம் செய்தி பதிவுக்காக மட்டுமே)
குவைத்தில் இன்று பெண் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது
குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று அதிகாலையில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றும் நிகழ்வு அரசு வழக்கறிஞர் தலைமையில் நடந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 7 பேரில் குவைத் நாட்டை சேர்ந்த குடிமகன்கள் 4 பேர், ஒரு சிரியா நாட்டை சேர்ந்த ஆண், ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் ஒரு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த பெண் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் நீதிமன்ற தீர்ப்புக்கு இறுதி முடிவாக அமீர்(மன்னர்) ஒப்புதல் அளித்ததை அடுத்து, இன்று புதன்கிழமை அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசியாக குவைத்தில் கடந்த ஜனவரி 2017-இல் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது மீண்டும் ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.