குவைத் விமான நிலைய பயணிகளுக்கான பயண விதிமுறையில் மாற்றங்கள் எதுவும் இல்லை சுகாதாரத்துறை விளக்கம்
Image : Kuwait Airport
குவைத்தில் காலரா நோய் கண்டறியப்பட்ட நிலையில் பயண நடைமுறைகளில் மாற்றம் இல்லை என சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது:
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது நிலைமை சீராக கட்டுக்குள் உள்ளது எனவும், ஆனால் எந்த அவசரச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் நோய் பரவும் நாடுகளுக்குச் செல்பவர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் காலரா நோய் கண்டறியப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் பத்திரமாக அடைக்கப்பட்ட பாட்டிலில் வரும் சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் நன்கு சமைத்த சூடான உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் எனவும்,பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை மக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு(வெள்ளிக்கிழமை) ஈராக்கில் இருந்து குவைத் திரும்பிய குவைத் குடிமகன் ஒருவருக்கு காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பரவிய சில வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கையை குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளன.