குவைத் விரைவில் குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகளை துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன
Image:(Visa Copy)
குவைத்தில் இடைநிறுத்தபட்ட குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகள் வரும் தினங்களில் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன:
குவைத்தில் வேலை செய்து வருகின்ற வெளிநாட்டு தொழிலாளர்களில் குடும்ப விசாக்கள் பெறுவதற்கு தகுதியான நபர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவருவதற்கான விசாக்கள் வழங்குவதற்கான அனுமதியை வழங்கும் அறிவிப்பு வரும் சில தினங்களில் வெளியாகும் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக குழந்தைகளுக்கும், அடுத்தகட்டமாக உள்துறை அமைச்சகம் வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மனைவி, தாய்,தந்தை உள்ளிட்டவர்களை அழைத்துவர வழங்குவதற்கான அனுமதியும் அளிக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே குவைத் கட்டுப்பாடுகள் விதித்துள்ள ஒருசில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் குவைத்தில் வேலைக்கு வருவதற்கான Work Permit எந்த தடையுமின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் குவைத்தில் வசிக்கின்ற மக்கள்தொகை சதவீதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த பல மாதங்களாக குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகள் இடைநிறுத்தபட்டு இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளன.