குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கடுமையான சோதனைகளை தொடர்ந்து கணிசமாக குறைந்துள்ளது
Image credit:Kuwait Police Official
குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது
குவைத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் சுமார் 150,000 பேர் வரையில் குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியிருந்தனர். ஆனால் இது தற்போது 136,000 ஆக குறைந்துள்ளது என்று தினசரி நாளிதழ் ஒன்று உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. வீட்டுவசதித்துறை மற்றும் மனிதவளத்துறை தலைமையில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளின் விளைவாக சட்டவிரோதமாக தங்கியிருந்த நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஆனால் சமீபத்தில் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட சிலர் மீண்டும் குவைத் திரும்பியுள்ளனர். இவர்கள் மதுபானம் தயாரித்தல் தொடர்பான சட்டத்தை மீறியதைத் தொடர்ந்து மீண்டும் பிடிபட்டுள்ளனர். குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் நாட்டின் சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பொது மன்னிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.