வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குவைத் மனித உரிமை ஆணையம்
Image : கண்டனம்
குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு கண்டனம் எழுந்துள்ளது:
குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்துள்ளது. குடியுரிமை பெறாதவர்களின் குடியிருப்பு ஆவணத்தைப் புதுப்பிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் சிறப்பு மருந்து கட்டணம் வசூலிக்க முடிவு அனுமதிக்க முடியாது என்று குவைத் தேசிய மனித உரிமைக் குழுவின் உறுப்பினரும் ஆலோசகருமான ஹம்தான் அல் நிம்ஷான் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முடிவு குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கும். புதிய கட்டணத்தை செலுத்த முடியாத வெளிநாட்டு தொழிலாளிகள் நோய் வாய்ப்பாட்டு வேதனையையும் அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். முற்றிலும் மனித உரிமை மீறலான இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றார.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். அகமது அல் அவாடி புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது சுகாதார நிலையங்களிலும், பாலிகிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் வெளிநாட்டவர்களுக்கு 5 தினார்களும், வெளிநோயாளர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுபவர்கள் மருந்து கட்டணமாக 10 தினார்களும் செலுத்த வேண்டும். பொது சுகாதார நிலையங்களில் தற்போது 2 தினார்கள் வெளிநோயாளிளுக்கு வசூலிக்கப்படுகிறது கிளினிக்குகளில் வசூலிக்கப்படும் 10 தினார்களுக்கு கூடுதலாக மருந்துக்கான இந்த புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital