குவைத்திலுள்ள இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Image: Indian Embassy
குவைத்திலுள்ள இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது:
குவைத்தில் உள்ள இந்திய பொறியாளர்கள் இந்திய தூதரகத்தில் உங்கள் பெயர் விவரங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று(08/12/2022) வியாழக்கிழமை இரவு அதிகாரபூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கான கூகுள் ஃபோம் வழியாக பதிவு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னர் நீங்கள் பதிவு செய்துள்ள விபரங்களை புதுப்பித்தல் செய்வதே இதன் முக்கிய நோக்கம். முன்னதாக ரெஜிஸ்டர் செய்துள்ள பொறியாளர்களும் மற்றும் இதுவரையில் விபரங்கள் பதிவு செய்யாத புதிதாக வந்துள்ள பொறியாளர்கள் என்று குவைத்தில் வேலை செய்கின்ற அனைத்து தரப்பு பொறியாளர்களும் மீண்டும் உங்கள் பெயர் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்காக நீங்கள் பின்வரும் Link https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSqg_T5O0Zg08frG60e_yK8wFophMqiA5NPCqN3wvLHDOAQw/viewform -ஐ Click செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் பதிவேற்ற வேண்டு்ம். குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மீண்டும் நெருக்கடி எழுந்துள்ள சூழ்நிலையில் இந்திய தூதரகம் மீண்டும் புதிதாக பொறியாளர்கள்(இஞ்சினியர்களின்) விபரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர்-2020 லும் இதே பிரச்சனை காரணமாக குவைத் இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களின்(பொறியாளர்கள்) பெயர் விபரங்களை சேகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Image: Embassy Press Release
Kuwait Job | Kuwait Engineers | Kuwait Indians