குவைத்திற்கான புதிய தூதர் ஜிலீபில் உள்ள தூதரக துணை சேவை மையத்தின் செயல்பாடுகளை நேரடியாக பார்வையிட்டார்
Image : தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா அவர்கள்
குவைத் இந்திய தூதர் பதிவியேற்ற பின்னர் ஜிலீப் பாஸ்போர்ட் சேவை மையத்தை பார்வையிட்டார்:
குவைத்திற்கான புதிய இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா அவர்கள் ஜிலீப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் விசா சேவை மையத்தை பார்வையிட்டார். அங்குள்ள ஊழியர்கள் அவரை மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தூதர் பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவை மையத்தின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து சேவை மைய அதிகாரிகள் மற்றும் அங்கு சேவைகள் பெறவந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினர்.
மேலும் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா அவர்களுடன் முதன்மை செயலாளர் வினோத் கெய்க்வாட், மூத்த தூதரக அதிகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பழைய இந்திய தூதராக இருந்த சிபி ஜார்ஜ் அவர்கள் மாறுதல் பெற்று சென்ற நிலையில் குவைத்தின் புதிய தூதராக ஆதர்ஷ் ஸ்வைகா நியமிக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் வருட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக தேர்ச்சியான ஆதர்ஷ் ஸ்வைகா, முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை குவைத் வந்தடைந்த அவர் ஞாயிற்றுகிழமை அன்று குவைத் இந்திய தூதரகத்திற்கு வந்து அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டு தன்னுடைய பணிகளை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Adarsh swaika | Indian Ambassador | Indian Embassy