BREAKING NEWS
latest

Sunday, December 18, 2022

குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

குவைத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

Image : Kuwait Airport

குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

குவைத்தில் பத்து மாதங்களில் 47,000க்கும் மேற்பட்ட பயண தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை நீதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இத்தனை பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடத்தின் ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான இடைவெளியில் மொத்தம் 47,512 பயணத்தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டினர் மற்றும் குவைத் குடிமக்களும் அடங்குவார்கள்.

கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன்(ஜனவரி முதல் அக்டோபர்) ஒப்பிடுகையில் பயணத் தடை விதிக்கப்பட்ட விகிதம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 30,689 பயணத்தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டிருந்தன. குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 46 லட்சம் பேர். இதில் 34 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்பது குறி்ப்பிடத்தக்கது.இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவைத் நிறுத்தி வைத்திருந்த குடும்ப விசா வழங்குவதை மீண்டும் துவங்கியது. முதல் இருபது நாட்களில் குடிவரவுத்துறை நாட்டின் அனைத்து கவர்னரேட்டுகளிலும் சேர்த்து 3000 விசாக்களை வழங்கியதாக அதிகாரப்பூர்வ செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

குவைத் உட்பட உலகை உலுக்கிய கோவிட் காலத்திற்குப் பிறகு வெளிநாட்டினருக்கான குடும்ப விசாக்கள் வழங்க தொடங்கினாலும் அத்தகைய விசாக்களுக்கான புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியதன் ஒரு பகுதியாக அது மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலே நிறுத்தி வைக்கப்பட்ட இத்தகைய விசாக்கள் நவம்பர் முதல் வழங்குவது மீண்டும் துவங்கியது. அறிக்கைகளின்படி,முதல் கட்டத்தில் இத்தகைய விசாக்கள் முக்கியமாக ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.

குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் இதை பயன்படுத்தி குழந்தைகளை குடும்ப விசாவில் நாட்டிற்கு அழைத்து வரலாம். பெற்றோர் இருவரும் குவைத்தில் இருந்தால் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு குடும்ப விசா வழங்கும் முடிவு நவம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டது.இத்தகைய விசாக்கள் இடைநிறுத்தப்பட்டதால், வெளிநாட்டு தம்பதிகள் தங்களுடைய சிறு குழந்தைகளைக் கூட தங்கள் சொந்த நாட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்காக குவைத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை விசா பெற்றவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் இருந்து குவைத்தில் வேலை செய்கின்றவர்களாக இருந்தாலும், இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இதை பயன்படுத்தியுள்ளனர்.

Kuwait Airport | Travel Banned | Kuwait Workers

Add your comments to குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

« PREV
NEXT »