சீனாவை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியா கொரோனாவின் புதிய மருபணுமாற்ற வைரஸ் காரணமாக நடவடிக்கை
Image : Chennai Airport
இந்தியா வருகின்ற விமானப் பயணிகளுக்கு மீண்டும் ரேண்டம் கோவிட் பரிசோதனை:
சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் ரேண்டம் கோவிட் பரிசோதனை. இன்று முதல் தொடங்கும் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவ்யா நாட்டில் கோவிட் நிலைமையை மதிப்பிடுவதற்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நிலைமை மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு கோவிட் நோயிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. கடுமையான கண்காணிப்பைத் தொடர வேண்டும் எனவும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சீனாவை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியா கொரோனாவின் புதிய மரபணுமாற்ற வைரஸ் BF-7 பாதிக்கப்பட்ட மூன்று நபர்களிடம் நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன.குஜராத்தில் இருவர் மற்றும் ஒடிசாவில் ஒருவரும் கொரோனாவின் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த மாறுபாட்டின் முதல் பாதிப்பு அக்டோபர் மாதம் குஜராத் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிட் பாதிப்பு விகிதம் தற்போது நாட்டில் அதிகரிப்பு இல்லை என்றாலும், புதிய மரபணுமாற்ற வைரஸ் BF-7 க்கு எதிராக விழிப்புடன் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Search_tags