சவுதியில் சிறையில் இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு சவுதி குடிமகன் இரண்டு கோடி வசூல் செய்த நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
Image : அவதேஷ் சாகர் மற்றும் ஹாதி பின் ஹமூத்
இந்தியரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இடையேயும் நினைத்ததை முடிந்த மாமனிதர்
கார் விபத்து வழக்கில் சவுதி அரேபிய சிறையில் ஐந்தரை ஆண்டுகளாக இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு சவுதி பிரஜை ஒருவர் முன்வந்துள்ளார். சமூக வலைதளப் பிரச்சாரம் மூலம் சொந்த சமூகத்திடம்(சவுதி குடிமக்களிடம்) இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடி ரூபாயை Blood Money திரட்டிய ஹாதி பின் ஹமூத், நாடு, மொழி, மதம் கடந்து நன்மைக்கும் கருணைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜாப்பூரைச் சேர்ந்த அவதேஷ் சாகர்(வயது-52) சவுதி குடிமக்களின் கருணையால் பலருக்கும் உதவி வருகிறார். சவுதியின் குவையாவில் உள்ள அலஹ்சா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிஷா அருகே ரியாத்-துவைஃப் சாலையில் நடந்த கார் விபத்தில் அவர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். தண்ணீர் வினியோகம் செய்யும் லாரி ஓட்டுவது இவரது வேலை. இவர் சவுதியில் தங்கிஓட்டுநர் உரிமம் மற்றும் இகாமா இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தார். ஒரு நாள் மாலை, ஒருவழிப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வளைவில் வேகமாக வரும் வாகனங்களைத் தவிர்ப்பதற்காக, பக்கவாட்டாகச் சென்ற அவரது லாரியின் மீது சவுதி இளைஞன் ஒருவரின் பிக்கப் பலமாக மோதியது
இந்த பயங்கரமான விபத்தில் வாகனம் அருகில் இருந்த பாறை குவியல் மீது விழுந்ததில் வாகனத்தில் இருந்த மூன்று பெண்களும் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர். அவருடன் இருந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உரிமம் மற்றும் இகாமா இல்லாததால் அவதேஷ் சாகர் முழு குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். உயிரிழந்த நால்வருக்கும், காயமடைந்த சிறுமிக்கும் இழப்பீடாக விதிக்கப்பட்ட தொகை 9,45,000 ரியால்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவதேஷுக்கு இந்தத் தொகை நினைத்துப் பார்க்க முடியாதது.
இந்த மனிதனால் சிறையில் தனது தலைவிதியை நினைத்து தினமும் அழுது புலம்புவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவரது மனைவி சுசீலா தேவி மற்றும் 10 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு சொந்தமாக தங்க வீடு கூட இல்லை. இதற்கிடையில், அவதேஷின் இரண்டு பெண்கள் இறந்தனர். வாழ வழியின்றி அலைந்து கொண்டிருந்த அவதேஷின் குடும்பம், அவரது விடுதலைக்காக தட்டாத கதவுகள் இல்லை.ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
அவதேஷின் குற்றமற்ற தன்மையை அறிந்த சிறையிலுள்ள போலீசார் சிலர் உள்ளூர் சமூக சேவகர் ஹாதி பின் ஹமூத் என்பவரிடம் இதனைத் தெரிவித்தனர். ஹாதி பின் ஹமூத் சிறைக்கு சென்று அவதேஷை சந்தித்து தகவல் சேகரித்தார். வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தாலும் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்கவே முடியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது இயலாமையை உணர்ந்த ஹாதி பின் ஹமூத்,அவதேஷுக்கு உதவ முன்வந்தார்.
அவதேஷின் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக தளங்கள் மூலம் சவுதி சமூகத்தில் பரவலாகப் பரவியுள்ளன. மேலும் ஹாதி பின் ஹமுதின் உதவிக்கான வேண்டுகோள் தொடர்பான ஒவ்வொரு வீடியோ இடுகையிலும், அவர் இந்தியர்களுக்கும் சவுதிகளுக்கும் இடையிலான பாரம்பரிய நல்லுறவு பற்றி நினைவுபடுத்தினார்.
இதனால், சமூக வலைதளங்கள் மூலம் பணம் வசூலிப்பதாக சிலர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் உண்மையை உணர்ந்த சவுதி அதிகாரிகள் அவருக்கு தொண்டு நிறுவனத்துக்காக சிறப்பு வங்கிக் கணக்கு தொடங்க அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, ஊர் மக்கள் உதவ முன்வந்தனர். ஹாதி பின் ஹமூத் என்ற நல்ல மனிதர் வசூலித்த 9,45,000 ரியால்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் கட்டப்பட்டன. இதையடுத்து அவதேஷ் நாளை மறுநாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற மகிழ்ச்சியாக செய்தி வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்