குவைத்தில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான தினார்கள் சம்பாதித்த கும்பலை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்
Image credit: நகராட்சி வாகனம்
குவைத்தில் நகராட்சியின் கழிவு சேகரிப்பு துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குவைத் நகராட்சியின் கழிவு சேகரிப்பு துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சி வாகனங்களில் கழிவுகளை சேகரித்து, அவற்றில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை கழிவுகளை பிரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்று வழங்குவதற்கு முன் திருடி மறுவிற்பனை செய்யும் குழுவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள், இவர்களுக்கு தேவையான வசதிகளை பேரூராட்சி துறையின் அதிகாரி(குவைத்) ஒருவர் செய்து கொடுத்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
இதில் முக்கியமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் இருந்து அட்டைப்பெட்டிகளை சட்டவிரோதமாக மறுவிற்பனை செய்வது. இதற்காக தானியான வாகனங்கள் மூலம் இப்படிப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வது,ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் மாதம் ஒன்றுக்கு குறைந்தது 20,000 தினார்கள் வரை வருமானம் ஈட்டியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதேநேரம் ஒரு குப்பை சேகரிப்பாளருக்கு மாதத்திற்கு 600 தினார் வரை ஊதியம்(கையூட்டு) வழங்கப்பட்டதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். தற்போது அவர்களை கூடுதல் நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சி இயக்குநர் ஜெனரல் அகமது மனஃபூஹி கூறுகையில் உடந்தையாக இருந்த இவர்களின் முதலாளிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்