உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் சாதனையை முறியடிக்க குவைத் தயாராகி வருகிறது என்ற புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image: மூன்று கட்டிடங்களின் புகைப்படம்
உலகின் உயரமான கட்டிடம் கட்ட போட்டி போடும் வளைகுடா நாடுகள்
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் சாதனையை முறியடிக்க குவைத் தயாராகி வருகிறது. நாட்டின் கனவுத் திட்டமான சில்க் சிட்டியில் 'புர்ஜ் முபாரக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கட்டிடத்தின் கட்டுமான பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புர்ஜ் முபாரக்கின் உயரம் 1001 மீட்டராக இருக்கும். அதாவது புர்ஜ் கலீஃபாவை விட புர்ஜ் முபாரக் 172 மீட்டர் உயரம் கூடுதலாக இருக்கும். சில்க் சிட்டியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டிலேயே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புர்ஜ் முபாரக் கட்டிடம் கட்டி முடிக்க குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில்க் சிட்டியின் நகரத்தின் முக்கிய ஈர்ப்பு புர்ஜ் முபாரக்காக இருக்கும். இதன் காரணமாக புர்ஜ் முபாரக் இருக்கும் இடம் திட்டத்தின் மைய பகுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சற்றே வளைந்த வடிவத்தில் மூன்று கோபுரங்கள் ஒன்றாக நிற்பது போல் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றையும் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் முபாரக்கின் உயரம் புர்ஜ் கலீஃபாவின் உயரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.ஆயிரத்தியோரு மீட்டர் உயரம் தேர்வு செய்ய மற்றொரு காரணம் உள்ளது. இதற்குப் பின்னால் ஆயிரத்தொரு இரவுகளை நினைவுபடுத்தும் அரேபிய நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு உள்ளது. 234 மாடிகள் கொண்ட புர்ஜ் முபாரக்கில் ஒரே நேரத்தில் 7,000 பேர் தங்க முடியும். ஹோட்டல்கள், குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்குக்கு சிறப்பு மையங்கள் என்று கட்டிடத்தின் உள்ளே உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும்.
புர்ஜ் முபாரக் கட்டுமானத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி தினார்கள்(6.69 லட்சம் கோடிகள்) செலவு எதிர்பார்க்கப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிக உயரமான கட்டிடமாக இது இருக்கும் புர்ஜ் கலீஃபாவின் தற்போதைய சாதனையை புர்ஜ் முபாரக் மாற்றி எழுதும். இதற்கிடையே சவுதியும் புரூஜ் கலிபாவைவிட உயர்ந்த கிங்டம் டவர்(ஜித்தா டவர்) என்ற கட்டிடத்தை கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் 1.6 கிலோமீட்டர் உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் அவ்வளவு உயரமான கட்டிடம் கட்ட வசதி இல்லாததால் 1 கிலோமீட்டருடன் நிறுத்திக் கொண்டுள்ளனர்.
கிங்டம் டவர் கட்டிடத்தை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவை வடிவமைத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் தான் வடிவமைத்துள்ளார். இந்த இரண்டு கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே தெரியவரும் உலகின் உயரமான கட்டிடம் எதுவென்று. அதுவரையில் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
Jeddah Tower | Burj Mubarak | Burj Khalifa
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்