சவுதி கப்பற்படை இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரை இதுவரை சூடானில் இருந்து மீட்டுள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
Image : வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி
சூடானில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட முதல் குழு சவுதியை வந்தடைந்தது
உள்நாட்டு போர் காரணமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை சவுதி வழியாக இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் சவுதிக்கு சென்றுள்ளது. ஆனால் போர் கடுமையாக நடைபெற்று வருவதால் விமானங்களை சூடானின் விமான நிலையங்களில் பாதுகாப்பாக இறக்கும் சூழல் தற்போதைய நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேரடியாக சென்று இந்தியர்களை மீட்க எடுக்க வேண்டிய மற்ற வழிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய உள்ளிட்ட பல நட்பு நாடுகள் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாடுகளை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்க சவுதிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சவுதி வழியாக சூடானில் சிக்கியுள்ள நபர்களை மீட்பது என்பது எளிது. இதற்கு காரணம் ஜித்தா துறைமுகம் மிகவும் அருகில் உள்ளது . இதையடுத்து சவுதி கப்பற்படையின் முதல் கப்பல் தன்னுடைய நட்பு நாடுகளான இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த சூடானில் சிக்கியிருந்த நபர்களை மீட்டெடுத்து ஜித்தாவை வந்தடைந்தது. சூடானின் பிரச்சினைகள் குறைவாக உள்ள, எளிதாக மிக்க முடிந்த பகுதியில் இருந்து இவர்களை மீட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியர்கள் சிலரும் பத்திரமாக சவுதி வந்தடைந்தனர். சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள்.
சவுதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 91 குடிமக்களையும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 பேரையும் பத்திரமாக வெளியேற்றியதாக அறிவித்துள்ளது. இதில் குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், இந்தியா, பல்கேரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Saudi Navy | Sudan War | Evacuation Sudan