குவைத்தில் இந்திய பெண்மணி ஒருவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
குவைத்தில் இந்திய பெண்மணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி இன்று(30/05/23) செவ்வாய்கிழமை வெளியாகியுள்ளது. மரணமடைந்த பெண்மணியின் பெயர் ப்ரீதா(வயது-47). தன்னுடைய குடியிருப்பில் வைத்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீதா இந்தியா கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த விதுரா பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடைய கணவர் பெயர் லாலிச்சன், இவர்களுக்கு ஆலன் மற்றும் அமல் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சட்ட நடவடிக்கை முடித்த உடலை தாயகம் கொண்டு செல்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த ப்ரீதா குவைத்திலுள்ள அமிரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image credit: மரணமடைந்த பீரீதா(வயது-47)
குவைத்தில் இந்திய பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்தார்
Add your comments to
குவைத்தில் இந்திய பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்தார்