சவுதி அரேபியாவில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை வரும் ஞாயிறு முதல் போக்குவரத்து கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் கண்காணிக்க முடிவு என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
Image : சவுதி சாலை
சவுதியில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு
சவுதி அரேபியாவில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு. வரும் ஞாயிறு முதல் கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் இவை கண்காணிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்.ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி தெரிவித்தார்.
மஞ்சள் கோடுகளுக்கு அப்பால் சாலை ஓரங்களில் உள்ள இடங்கள், நடைபாதைகளிலும், வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்ட பாதைகளிலும் வாகனங்கள் ஓட்டுவது, இரவு நேரங்களிலும், வானிலை மாற்றம் காரணமாக பார்வையை குறைக்கும் நேரங்களில் வாகனத்தின் விளக்குகளை எரிய விடாமல் இருப்பது, டிரக்குகள் மற்றும் கனரக வாகனங்கள் இரட்டைப் பாதையின் வலதுபுறத்தில் ஒட்டி செல்லாமல் இருப்பது, பொதுச் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை மதிக்காமல் இருப்பது, சேதமடைந்த அல்லது புரிந்துகொள்ள முடியாத எண் கொண்ட நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுதல், பார்க்கிங் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், தானியங்கி கேமராக்கள் வாகனங்களின் எடை மற்றும் அளவையும் பதிவு செய்யும் மற்றும் சோதனைச் சாவடிகளில் நிற்காதது ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் கண்காணிப்பு கேமராக்களுடன் போக்குவரத்து போலீஸ் மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் புதிதாக சேர்க்கப்பட்ட விதிமீறல்கள் கண்காணிக்கப்படும். பாதுகாப்பான வாகன போக்குவரத்தை உறுதி செய்தல் மற்றும் வாகன விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி அவர் மேலும் கூறினார்.