சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பதாக சவுதி தூதரகம் ஏஜென்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது
Image credit: கைரேகை பதிவு VFS மையம்
சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக செல்வோருக்கு பணி விசா வழங்க கைரேகை கட்டாயம் என்ற விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விசா விண்ணப்பிப்பவர்கள் விஎப்எஸ் மையத்துக்குச் சென்று கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக கடந்த 23-ஆம் தேதி சவுதி துணைத் தூதரகம் தெரிவித்திருந்தது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு(அதாவது நேற்று இரவு) சவுதி தூதரகம் தற்காலிக முடக்கம் குறித்து ஏஜென்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
மேலும்அதில் ஜூன்-28,2023, ஈத்-உல்-அதா(தியாகத் திருநாள்) வரை அறிவிக்கப்பட்ட சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பண்டிகை விடுமுறைக்குப் பிறகு தூதரகம் செயல்படத் தொடங்கும் போது இது பற்றிய கூடுதல் தகவல்கள் தெளிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், விசிட் விசாவுக்கு விஎப்எஸ் மையத்திற்குச் சென்று கைரேகைகளை வழங்க இம்மாத தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சட்டம் தொடரும். இது தொடர்பாக சவுதி தூதரகத்திடம் இருந்து எந்த புதிய தகவலும் இல்லை. பணி விசா முத்திரை பதிக்க விண்ணப்பதாரர் கைரேகை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முடிவும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.