குவைத் தொழிலாளர் சந்தையில் உள்ள மொத்த பணியாளர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image:Indian Community
குவைத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்
குவைத் தொழிலாளர் சந்தையில் உள்ள மொத்த பணியாளர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிட்டுள்ள தகவல்படி 1,45,000 பெண்கள் மற்றும் 7,12,000 ஆண்கள் உட்பட மொத்தம் 8,57,000 இந்தியர்கள் நாட்டில் பணிபுரிகின்றனர். நாட்டின் தொழிலாளர் சந்தையில் மொத்தம் இருபத்தி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 23,000 இந்தியத் தொழிலாளர்கள் புதிதாக தொழிலாளர் சந்தையில் நுழைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 2022 இறுதி நிலவரப்படி, குவைத் தொழிலாளர் சந்தையில் 8,34,678 இந்தியர்கள் உள்ளனர்.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் ,இரண்டாவது பெரிய தொழிலாளர் சக்தியாக உள்ளனர். குவைத்தில் நான்கு லட்சத்து எண்பத்தாறாயிரம் எகிப்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சற்று பின்னால் நான்கு லட்சத்தி நாற்பத்து நாலாயிரம் பேர்களும் குடிமக்கள்(குவைத் குடிமக்கள்) 3வது இடத்தில் வேலை செய்து வருகின்றனர். மேலும் நாட்டில் வேலை செய்கின்ற அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பட்டியலில் பிலிப்பைன்ஸ் 4வது இடத்திலும், வங்கதேசம் 5வது இடத்திலும், இலங்கை 6வது இடத்திலும் உள்ளது. குவைத் தொழிலாளர் சந்தையில் பணிபுரியும் பிற நாடுகளின் நிலவரம் நேபாளம் 7-வது இடத்திலும்), பாகிஸ்தான் 8-வது இடத்திலும், சிரியா 9-வது இடத்திலும், ஜோர்டான் 10-வது இடத்திலும் உள்ளனர்.