Sahel செயலியில் ஆங்கிலம் எப்படி வரவழைப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்
Image : Sahel Application Front View
குவைத்தில் Sahel செயலியில் ஆங்கிலம் இல்லை என்ற பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு
குவைத்திலுள்ள வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் தங்களுடைய அடையாளம் உள்ளிட்ட அனைத்து விதமான சேவைக்கும் ஆதாரமாக Sahel செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் உள்ள ஒரே குறைபாடு தற்போதைய நிலையில் அதில் அரபு மொழி மட்டுமே உள்ளது என்பதாகும். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி தேர்வு வசதி அதில் இல்லை வரும் காலங்களில் பிற மொழிகளும் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் ஆங்கிலம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான நபர்கள் அரபு மொழி தெரிந்த பிறருடைய உதவியை பயன்படுத்தியே அதை login செய்து மற்றும் பிற வசதிகளை இணைப்பது போன்றவற்றை செய்ய முடிகிறது. இதற்கான தற்காலிகமான தீர்வு ஒன்றை உங்களுக்கு தெரிய படுத்தலாம் என்று நினைக்கிறேன். பலருக்கும் தெரியலாம், தெரியாத நபர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள். இந்த trick ஆனது Android Mobile யில் Work ஆகும், ஆனால் I-phone யில் work ஆகாது.
அரபு மொழியயை ஆங்கில மொழிக்கு மாற்ற முதலில் உங்கள் கைபேசியில் உள்ள Sahel செயலியை Open செய்ய வேண்டும் பிறகு அந்த பக்கத்தை Close செய்யாமல் Minimise செய்த பிறகு அப்படியே phone Setting ஐ open செய்து Language Option தேர்வு செய்து அதில் UK or US உள்ளிட்ட எதாவது ஒரு English Language தேர்வு ஆகி இருக்கும், அதில் எது தேர்வாகி இருந்தாலும் அதற்க்கு எதிர்மறை Change செய்யுங்கள். UK English என்றால் US English எனவும், US என்றால் UK English என மாற்றலாம்.
இது மட்டுமல்ல Indian English இப்படி எதாவது ஒரு English language ஐ மாற்றுங்கள் அப்போது சில நொடியில் Language change ஆகும். இந்நிலையில் அதை அப்படியே Minimise செய்து Sahel செயலி பக்கத்தை மாற்றி பாருங்க அரபு மொழி English ஆக மாறும். கண்டிப்பாக இதை செய்யும் போது செயலி பக்கம் Setting பக்கம் இரண்டும் Close ஆக கூடாது. ஒவ்வொரு முறையும் செயலியில் எதாவது அறிய வேண்டும் என்ற இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். இதுபோல் மற்றொரு தகவலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Sahel Application | Kuwait Id | Civil Id