குவைத் நாட்டிற்கு வெளியே உள்ள வீட்டு தொழிலாளர்(வீட்டுப் பணியாளர்கள்) பிரிவை சேர்ந்த அனைவரின் பணி அனுமதியையும் 3 மாதங்களுக்குப் பிறகு, ஸ்பான்சர் ரத்து செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது
Image : துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்
குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்
குவைத் உள்துறை அமைச்சகம் இன்று(29/10/23) ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் நாட்டிலிருந்து வெளியேறிய வீட்டுப் பணியாளரின்(Article-20) குடியிருப்பு அனுமதியை(விசாவை) 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஸ்பான்சர்(குவைத்தி) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகின்ற நவம்பர்-5,2023 முதல் இது அமலுக்கு வரும் என்று முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் அஹ்மத் அல் சபாவை மேற்கோள்காட்டி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'SAHAL' செயலி மூலம் தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யலாம். அது முடியாவிட்டால், குடியிருப்பு விவகாரத் துறையின் அலுவலகம் ஒன்றுக்கு சென்று தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். விசா Validity உள்ள ஒரு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறி 6 மாதங்களுக்குப் பிறகு குவைத்தில் நுழையத் தவறினால், தொழிலாளியின் குடியிருப்பு அனுமதி தானாக(Automatically) முன்வந்து ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய உத்தரவு 6 மாத கால தாமதத்தை தவிர்க்க உதவும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதில் பிரச்சனை என்னவென்றால், பணம் கொடுத்து வெளியே விசா அடித்து சட்டவிரோதமாக(இப்படி செய்வது தொழில் சட்டவிரோதமான செயல்) ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் குவைத்தில் வேலை செய்து வருகி்ன்றனர். இந்த வகை விசா உள்ள நபர்கள் குவைத் விமான நிலையம் வழியாக தாயகம் செல்லும் போது சம்பந்தப்பட்ட ஸ்பான்சருக்கு(குவைத்திக்கு) குறுந்தகவல் போகும். புதிய உத்தரவை பயன்படுத்தி 90 நாட்களுக்குள் நீங்கள் திரும்பவில்லை என்றால் உங்கள் விசாவை ஸ்பான்சர் கேன்சல் செய்தால் யாரையும் கேள்வி கேட்க முடியாது.
எனவே இப்படிப்பட்ட நபர்கள் குவைத் திரும்பும் முன்னர் உங்கள் விசா Validity ஐ சோதனை செய்த பிறகு குவைத் திருப்புவது நல்லது. இல்லை என்றால் குவைத் விமான நிலையம் வரையில் வந்து குவைத்தில் நுழைய முடியாமல் மீண்டும் டிக்கெட் போட்டு தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்...இல்லை ஏற்படுகிறது. உங்களுக்கு இப்படி வெளியே விசா அடித்து தருகின்ற நபர்கள் இப்படி பலரை ஏமாற்றுகின்றனர். இதிலும் ஒருபடி மேலே சென்று உங்கள் மேல் வழக்கு பதிவும் செய்கின்றனர். அப்படிப்பட்ட நபர்கள் என்றால் கைது செய்து Finger வைத்தே அனுப்புவார்கள். பிறகு குவைத் வரவே முடியாது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Domestic Worker | Kuwait Visa | Visa Cancel