குவைத்தில் புதிய குடும்ப விசா நிபந்தனையில் இருந்து குறிப்பிட்ட சில பிரிவினருக்கு நிபந்தனை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளன
Image credit: குவைத் உள்துறை
குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது
குவைத்தில் குடும்ப விசா பெற விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பள வரம்பு 800 தினார்கள் மற்றும், பல்கலைக்கழக பட்டம் போன்ற விதிமுறையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஆக்டிங் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகள் உடைய ஃபஹத் அல் யூசெப் அவர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் என்று குவைத்தின் தினசரி நாளிதழ் இன்று(26/01/24) சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. பின்வரும் பிரிவினருக்கு இந்தத் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அரசுத் துறையில் வேலை செய்கின்ற ஆலோசகர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள்
- மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள்
- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள்
- பள்ளி முதல்வர்கள், அவர்களின் பிரதிநிதிகள், கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை துறையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் உட்பட அரசுத்துறையில் வேலை செய்கின்ற ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்
- நிதி ஆலோசகர்கள்
- பொறியாளர்கள்
- இமாம்கள், போதகர்கள், மசூதிகளில் பாங்கு அழைப்பவர்கள், குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள்
- அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வேலை செய்கின்ற நூலகர்கள்
- செவிலியர்கள், துணை மருத்துவர்கள், அதே துறையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் வேலை செய்பவர்கள், அத்துடன் சமூக சேவை வேலை செய்கின்ற அமைச்சகத்தின் கீழ் நர்சிங் துறையில் வேலை செய்கின்ற ஊழியர்கள்
- அரசுத் துறையில் வேலை செய்கின்ற சமூகப் பணியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள்
- பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் நிருபர்கள்
- கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள்
- விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள்
- கல்லறை தோட்டங்களில் இறந்த உடல்களை பராமரிப்பவர்கள் மற்றும் தகனம் செய்பவர்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Family Visa | Kuwait Visa | Kuwait Workers