குவைத்தில் பிராண பிரதிஷ்டை தினத்தன்று இனிப்பு வழங்கிய இந்தியர்கள் நாடு கடத்தபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது
Image : செய்தி பதிவுக்காக மட்டும்
இந்தியாவில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்புகள் வழங்கிய இந்தியர்கள் குவைத்தில் இருந்து திருப்பி அனுப்பபட்ட தகவல் வெளிவந்துள்ளது
இந்தியாவில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்புகள் வழங்கிய இந்தியர்கள் குவைத்தில் இருந்து விமானம் மூலம் தாயகத்திற்கு திரும்பி அனுப்பபட்டதாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து செய்திகளை வெளியிடும் இந்திய மீடியா ஒன்று சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில் ஒன்பது இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி இருந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களை வேலையில் இருந்து நீக்கி நாட்டை விட்டு அனுப்பியதாக மேலும் தெரிவித்துள்ளது. பிரதிஷ்டை தினமான நேற்று(22/01/24) திங்கள்கிழமை தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இனிப்புகளை இவர்கள் வழங்கினர் எனவும், இதையடுத்து அவர்கள் மீது நிறுவன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர் எனவும் செய்தியில் தெரிவித்துள்ளது. ஒன்பது பேரும் திங்கள்கிழமையான நேற்று இரவே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களை மீடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த விஷயம் தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை என்று தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் ஆகும். குவைத்திலுள்ள எந்த பத்திரிகையிலும் இந்த நேரம் வரையில் இந்த விஷயம் தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்