BREAKING NEWS
latest

Thursday, January 25, 2024

குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட பிரச்சினை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது

குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட இந்த சம்பவம் கம்பெனி எடுத்த தனிபட்ட நடவடிக்கையாக தெரிகிறது

Image : குவைத் விமான நிலைய நுழைவாயில்

குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட பிரச்சினை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது

குவைத்தில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்த இந்தியர்கள் தங்கள் முதலாளிகளால் இந்தியா அனுப்பப்பட்ட பிரச்சனையின் பின்னனி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இதையடுத்து குவைத் இந்திய தூதரகம் இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தியது. விசாரணையில் கிடைத்த தகவல் வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும்.

நாட்டின் எண்ணெய் தொடர்பான தொழில் நிறுவனமான ஈக்விட்க்கான இரண்டு நிறுவனங்களில் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு பணிபுரிந்து வந்த இந்தியர்கள் 13 பேர் நிறுவன உரிமையாளர்களால் பணி நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் வேலை செய்கிற நிறுவனங்களில் முழக்கங்கள் எழுப்பியதுடன் இனிப்பு வழங்கியதாகவும், இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிற பாகிஸ்தான் குடிமக்கள் சிலர் இந்தக் காட்சிகளை படமாக்கி நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடும் அழுத்தத்திற்கு உள்ளான நிறுவன அதிகாரிகள், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர் எனவும் ஒன்பது பேர் திங்கட்கிழமை அன்று இரவே வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அடுத்த தினத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும் இதே நேரத்தில் கொண்டாத்தில் ஈடுபட்ட மற்ற சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவமாகும், குவைத் உள்துறை அமைச்சக நடவடிக்கையாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட பிரச்சினை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது

« PREV
NEXT »