குவைத்திற்கு விடுமுறை முடிந்து திரும்பிய நண்பரிடம் இறைச்சி என்ற போர்வையில் கஞ்சா கொடுத்து முயற்சி
Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி
மாட்டிறைச்சி என்ற போர்வையில் குவைத் திரும்ப இருந்த வெளிநாட்டவரின் பயணப் பொதிகளில் கஞ்சாவை அனுப்ப முயற்சி. மலப்புரம் கொண்டோட்டி ஓமனூரை சேர்ந்த பைசல் என்பவரை ஏமாற்ற முயன்ற 2 பேர் வாழைக்காடு போலீசாரிடம் சிக்கினர்.
குவைத்தில் உள்ள ஹர்ஷாத் என்ற நபர் விடுமுறை முடிந்து திரும்பவிருந்த இவரிடம் மாட்டிறைச்சியை கொடுத்து அனுப்புமாறு கூறினார். மாட்டிறைச்சி போல் பாட்டிலில் இறைச்சியை நிரப்பி அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து வழங்கப்பட்டன. சந்தேகமடைந்த அவர் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது அது கஞ்சா என தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிபுராயா பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷமீம் மற்றும் அவரது உதவியாளர் ஃபீனு ஃபாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
தயவு செய்து விடுமுறை முடித்து அல்லது முதல் முறையாக வெளிநாடுகளுக்கு வரும் போது முடிந்த வரையில் நண்பர்களுக்கு, உறவுகளுக்கு என்று உங்களுக்கு தெரிந்த அல்லது இன்னொரு தெரிந்த நபர் சொன்னார் என்றோ யாரவது எதாவது கொடுத்து அனுப்ப முயன்றால் எதாவது காரணத்தை சொல்லி முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள் அல்லது யார் பொருள் தருகிறர்களோ அவர்கள் முன்னர் வைத்ததே அந்த திறந்தது முற்றிலுமாக பிரித்து சோதனை செய்யுங்கள்.
இந்த நபருக்கு அதிஷ்டம் இருந்தது பிரித்து பார்த்தார் தப்பித்து கொண்டார். இதுபோல் ஏமாற்றப்பட்ட விமான நிலையங்களில் பிடிபட்ட அப்பாவிகள் நூற்றுக்கணக்கான பேர் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் செய்யாத குற்றங்களுக்காக என்ன சொல்ல அவர்களின் தலைவிதி என்று தான் சொல்ல முடியும் எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் .செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Gulf Worker | Kuwait Airport | Gulf jail |