நண்பர்களின் துரோகம் தொடர்கிறது சவுதி விமான நிலையத்தில் மற்றொரு இந்திய இளைஞர் நேற்று மாலை பிடிபட்டார்
Image: Abha Airport
சவுதி விமான நிலையத்தில் இந்திய இளைஞர் பிடிபட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் இருந்து கால்பந்து வீரர்கள் 5 பேர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்திய அமைப்பு ஒன்று நடத்திய கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சவுதி சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் பெரும் அளவிலான(குவியலாக) சர்வதேச மதுபானங்களின் ஸ்டிக்கர் குவியலுடன் பிடிபட்டார். நேற்று(16/06/24) மாலையில் அபக விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்கத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் உடமைகளை சோதனை செய்யும் போது இவர் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் இந்தியா,கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டதை சேர்ந்த மாநில அளவில் பிரபலமான கால்பந்து வீரர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்ற கால்பந்து வீரர்கள் குழுவினரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது ஒரு வீரரின் உடமைகளுக்குள், மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று மாலை 3:30 மணி அளவில் சவுதி சென்ற எர்-அரேபியா விமானத்தில் இவர்கள் சவுதிக்கு புறப்பட்டு சென்றவர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
ஊரில் உள்ள நண்பன் ஒருவர் இதை வழங்கினார் என்றும், தான் சவுதியில் நடத்தி வருகின்ற ஜூஸ் கம்பெனிக்கு தேவையான ஸ்டிக்கர்கள் என்று கூறி நம்ப வைத்து ஊரில் உள்ள விமான நிலையத்தில் வைத்து இதை வழங்கியதாக அவரை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சவுதி சென்றதும் தன்னுடைய கம்பெனியின் ஊழியர்கள் இதை பெற்று கொள்வார்கள் என்று கூறி இதை அவரிடம் வழங்கியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சவுதி சுங்கத்துறை மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Search_tags