குவைத் கடல் எல்லையில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 6 பேரை காணவில்லை
Image : விபத்தில் சிக்கிய அமல்
3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது
குவைத் கடல் எல்லையில் Ara Bakhtar-1 என்ற ஈரானிய வர்த்தக எண்ணெய் கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் கப்பலில் இருந்த 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் காணாமல் போன நிலையில் 3 பேர் உடலை குவைத் கடலோர காவல்படை வீரர்கள் மீட்ட நிலையில், மீதமுள்ள 3 பேரை கடலோர காவல்படை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காணாமல் போன 3 பேரில் ஒருவரான இந்தியா, கேரளா மாநிலம் கண்ணூரை அடுத்த ஆலக்கோடு பகுதியை சேர்ந்த அமல் என்ற கப்பல் ஊழியரையும் காணவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்ற 3 பேர் ஈரானிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான கூடுதல் விபரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்