BREAKING NEWS
latest

Sunday, March 23, 2025

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத் காவல்துறை அதிரடி நடவடிக்கையின் விளைவாக கடந்த வாரம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தொழிலாளியை கொலை செய்த குடிமகன் கைது செய்யப்பட்டார்

Image: தொழிலாளி வண்டி ஏற்றி கொலை செய்யபட்ட இடம்

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத்தின் முட்லா பகுதியில் மொபைல் பக்காலாவில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தாமல் வாகனத்தில் கடக்க முற்பட்டபோது தடுக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர் வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் குவைத் குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இது தொடர்பான செய்தி கடந்த வாரம் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம் வாசகர் பல படித்திருப்பீர்கள்.

நாட்டின் குற்றப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஹமீத் அல்-தவாஸ் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை நடத்தி விசாரணையில், ஒரே வாரத்தில் குற்றவாளி பிடிபட்டார். குற்றவாளி குவைத் குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் பக்கலாவை(கடைகளை) குறிவைத்து கடந்த காலங்களில் இது போன்ற பல குற்றங்களைச் செய்திருப்பதும் விசாரணை யில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த குற்ற சம்பவங்களில் எதுவிலும் ஊழியர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுத்தவில்லை. பலருக்கும் காயத்தை இவர் ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி ஜஹ்ரா கவர்னரேட்டின் அல்-முட்லா பகுதியில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி, உயிரிழந்த தொழிலாளி வேலை செய்யும் மொபைல் பக்காலாவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். இதையடுத்து கடையின் ஊழியர் குற்றவாளியை தடுத்து நிறுத்த வாகனத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் குற்றவாளி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் ஊழியர் வாகனத்தின் நடுவில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஜஹாரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களும் தெரியவில்லை.

இதையடுத்து குற்றவாளி சில்வர் நிற நான்கு சக்கர வாகனத்தில் பக்காலாவில் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவானது. நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் 15 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சுலைபியா பகுதியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் ஜஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி இதுவரை செய்த குற்றங்கள் தொடர்பாக தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

Add your comments to குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

« PREV
NEXT »