BREAKING NEWS
latest

Srilanka News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Srilanka News News, Articles, Srilanka News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Wednesday, July 7, 2021

இலங்கை ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் இல்லாமல் அவசர அவசரமாக தரையிறங்கியது

இலங்கை ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் இல்லாமல் அவசர அவசரமாக தரையிறங்கிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது

இலங்கை ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் இல்லாமல் அவசர அவசரமாக தரையிறங்கியது

இலங்கை ஏர்வேஸ் விமானம் UL504 திருவனந்தபுரத்தில் எரிபொருள் காலியான நிலையில் அவசர அவசரமாக தரையிறங்கியது என்றும், இந்த விமானம் லண்டனில் இருந்து கொழும்பு விமான நிலையம் நோக்கி இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை முடித்துக் கொண்டு திரும்பிய கிரிக்கெட் வீரர்களுடன் பறந்த நிலையில் இவ்வாறு தரையிறங்கியது என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்காக விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறைக்கு அவசர செய்தி அனுப்பினார். முதலில் ஓமானின் மஸ்கட்டில் விமானத்தை தரையிறக்க முயற்சிகள் செய்தனர்,ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சூழ்நிலையை புரிந்துகொண்ட விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் அடுத்த சில நிமிடங்களில் ஓடுபாதையில் அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் தயாராக நின்றனர். இதன் பின்னர் விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து விமானம் நேற்று(06/07/21) பிற்பகல் சரியாக 1.32 மணிக்கு ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது. இந்நிலையில் இது தொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து எரிபொருள் நிரப்பிய பின்னர், பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விமானம் கொழும்புக்கு பறந்தது. தரையிறங்குவதற்கு அனுமதி வழங்க தாமதமாகி இருந்தால் ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும். பைலட் அனுப்பிய அவசர செய்தியின் அடிப்படையில் திருவனந்தபுர விமான நிலைய போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Add your comments to Srilanka News

Thursday, July 1, 2021

இலங்கை வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இரண்டு வாரத்திற்கு விதித்த பயணத்தடையை ரத்து செய்தது

இலங்கை வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்காக விதித்த இரண்டு வார பயணத்தடை முடிவை ரத்து செய்து; புதிய நிபந்தனைகளுடன் நுழைய அனுமதி வழங்கியுள்ளது

இலங்கை வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இரண்டு வாரத்திற்கு விதித்த பயணத்தடையை ரத்து செய்தது

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஜூலை-1 முதல் ஜூலை-13 வரையில் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) நேற்று அறிவித்திருந்தது. வ‌ளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் பலருக்கும் நோய்தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இந்த முடிவை ரத்து செய்துள்ள இலங்கை, சில நிபந்தனைகளுடன் வளைகுடாவில் இருத்து நாட்டில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளது.

CAASL இன் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தெமியா அபேவிக்ரமா கூறுகையில், “சுகாதார அமைச்சகம் மற்றும் COVID-19 வெடிப்பைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி கத்தார், ஓமான் பயணிகள் கட்டுப்பாடு. பஹ்ரைன், அமீரகம், சவுதி மற்றும் குவைத் பயணிகள் பின்வரும் நிபந்தனைகளுடனும் பயணிக்க முடியும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கைகாக் வரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பயணிகளில் ஏறுவதற்கு முன்பு இதை விமான நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும் ஆன்டிஜென் பரிசோதனை போர்டிங் செய்வதற்கான புறப்படுவதற்கு முந்தைய சோதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மேலும் பி.சி.ஆர் சோதனை அந்தந்த நாட்டில் உள்ள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை அல்லது ஆய்வகத்திலிருந்து கியூஆர் கோட் அல்லது பார் கோட் மூலம் வழங்கப்பட வேண்டும். பயணிகள் வழங்கிய சோதனை அறிக்கைகளின் நம்பகத்தன்மையுடன் விமான நிறுவனங்கள் தங்களை திருப்திப்படுத்த வேண்டும். பயணிகள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும் அல்லது இலங்கை சுற்றுலா துறையின் பயோ-பப்பில் திட்டம வழியாகவோ மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

Add your comments to Srilanka News

Tuesday, June 29, 2021

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்வதற்கு தற்காலிகமாக தடை விதித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது

Image : Srilankan Airport

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் கோவிட் -19 பரவல் தடுப்பு (NOCPCO) குழுவிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க, சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் கேப்டன் தெமியா அபேவிக்ரமா அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் நாட்டில் நிலவியுள்ள கோவிட் பரவலை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குவைத், சவுதி, கத்தார், துபாய், மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிருந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலி தடை வருகின்ற ஜூலை 1,2021 அதிகாலை 00.01 முதல் ஜூலை-13,2021 இரவு 23:59 வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது . அதே நேரத்தில் Connection விமானம் மூலம் இந்த நாடுகள் வழியாக இலங்கை வருபவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit : Official Soure

Add your comments to Srilanka News

Tuesday, May 4, 2021

அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார்

அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : முகமது மிஷ்பக்(வயது-36)

அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார்

துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முகமது மிஷ்பக்(வயது-36) மெகா ஜாக்பாட்டை வென்றார். மிஷ்பக் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இந்த வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய மொபைலில் வந்தது என்று அவர் கூறியுள்ளார். மிஷ்பக் தான் வென்ற டிக்கெட்டை மற்ற 20 பேருடன் பகிர்ந்து கொள்கிறார் எனவும்,இதில் எனது பங்கு சுமார் 600,000 திர்ஹம் ஆகும்,நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

என்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்,இந்த பணம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தான் மாதம் 7000 திர்ஹம் சம்பாதிக்கும் விற்பனை துறையில் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் எடுக்க பங்களித்த மற்ற நண்பர்களும் என்னைப் போலவே மிகவும் உற்சாகமாக உள்ளனர். சீக்கிரம் பணத்தை பெற்றுகொள்ள சொல்லும்படி அவர்கள் என்னை அமைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மே-3 திங்கள் அன்றைய பிக் டிக்கெட் ஒன்று அல்ல மூன்று புதிய மில்லியனர்களை உருவாக்கியுள்ளது அவர்களின் விபரங்கள்.

1 வது பரிசு தொகை வெற்றியாளர் டிக்கெட் எண் கிராண்ட் பரிசு 12,000,000 மொஹமட் மிஷ்பாக் 054978 இலங்கை, 2 வது பரிசு 3,000,000 அபு மம்மன் பாபு 232268 இந்தியன், 3 வது பரிசு 1,000 000 அனுஜ் தியாகராஜன் 263556 இந்தியன், 4 வது பரிசு 100,000 முகமது அல்ஷேஹி 108273 ஐக்கிய அரபு அமீரகம், 5 வது பரிசு 90 000 நஜீத் உல்லா 151521 பாகிஸ்தான், 6 வது பரிசு 80 000 விஜயகுமார் ஜெயசித்தையா 115126 இந்தியா, 7 வது பரிசு 70 000 மரியா எலெனா பெனாவிடெஸ் 201405 பிலிப்பைன்ஸ், 8 வது பரிசு 60 000 சனில் கிமர் ஜனார்த்தனன் 170681 இந்தியா, 9 ட்ரீம் கார் போர்ஷே 718 கட்டுபாய் ஹக்கிமுடின்பாய் ராஜன்பூர்வாலா 009630 இந்தியன்

மேலும் முகமது மிஷ்பக் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசிப்பவர்.தனது நண்பர்களுடன் தங்கியிருக்கிறார், அதே நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இலங்கையில் வசித்து வருகின்றனர். மிஷ்பக் தனது 20 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிக் டிக்கெட்டை வாங்குகிறார் என்றார். பிக் டிக்கெட்டில் பங்கேற்க அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாக பணம் திட்டுவார்கள். வென்ற பணத்தின் பெரும்பகுதி தனது குடும்பத்தின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என்றார்.

Add your comments to Srilanka News

Tuesday, March 9, 2021

குவைத் இலங்கை தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு;பின்வரும் நபர்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்

குவைத் இலங்கை தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு;பின்வரும் நபர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை வேலை நேரத்தில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம்

Image : Kuwait Srilankan Embassy

குவைத் இலங்கை தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு;பின்வரும் நபர்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்

குவைத் இலங்கை தூதரகம் இன்று(09/03/21) மதியம் வெளியிட்டுள்ள செய்தியில் கீழ்வரும் இலக்கங்களையுடைய விண்ணப்பதாரிகளின் கடவுச்சீட்டுகள் மாத்திரம் தற்போது தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ளலாம் . கடவுச்சீட்டைப் பெற மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.அத்தோடு தற்காலிக கடவுச்சீட்டொன்று உங்கள் வசம் இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் . பிள்ளைகளின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் தாய் அல்லது தந்தை , தனது கடவுச்சீட்டை எடுத்து வருவதோடு மஞ்சள் நிற பற்றுச்சீட்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருவது அவசியமாகும். அத்தோடு தற்போது பிள்ளையிடம் தற்காலிக அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .கடவுச்சீட்டுகள் அதன் உரிமையாளர்களிடம் மட்டுமே கையளிக்கப்படும் என்பதனை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும். இலங்கை தூதரகம் – குவைத்(09 -03- 2021)

පහත අංක සඳහන් අයදුම්පත්වලට අදාළ නව ගමන් බලපත්‍ර පමණක් තානාපති කාර්යාලය වෙත ලැබී ඇත. එය ලබා ගැනීම සඳහා කාර්යාල දිනවල උදෑසන 8.30 සිට දහවල් 12.30 අතර කාලය තුළ අදාළ කහ පැහැති රිසිට්පත සහ ඔබ සතු ගමන් බලපත්‍රය ද රැගෙන ආ යුතුය. ඊට අමතරව තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඔබ සතුව ඇත්නම් එයද අනිවාර්යයෙන්ම රැගෙන ආ යුතුය. දරුවන්ගේ ගමන් බලපත්‍ර ලබා ගැනීමට පැමිණෙන මව හෝ පියා කහ පැහැති රිසිට්පත සමග තමාගේ ගමන් බලපත්‍රය සහ දරුවාගේ උප්පැන්න සහතිකය ද රැගෙන ආ යුතුය‍. එසේම දරුවෙකුට දැනටමත් වලංගු ගමන් බලපත්‍රයක් හෝ තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඇත්නම් එයද රැගෙන ආ යුතුය.ගමන් බලපත්‍රය නිකුත් කරනු ලබන්නේ අදාළ හිමිකරුට පමණක් බව කාරුණිකව සලකන්න.ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය-කුවේට්(09-03-2021)

Image : PAGE-1

Image : PAGE-2

Image : PAGE-3

Image : PAGE-4

Image : PAGE-5

Add your comments to Srilanka News

Wednesday, February 17, 2021

குவைத் இலங்கை தூதரகம் கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது

குவைத் இலங்கை தூதரகம் கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது;கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ளலாம்

Image : Kuwait Srilankan Embassy

குவைத் இலங்கை தூதரகம் கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது

குவைத் இலங்கை தூதரகம் நேற்று(16/02/21) மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்வரும் இலக்கங்களையுடைய விண்ணப்பதாரிகளின் கடவுச்சீட்டுகள் மாத்திரம் தற்போது தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ளலாம். கடவுச்சீட்டைப் பெற மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். அத்தோடு தற்காலிக கடவுச்சீட்டொன்று உங்கள் வசம் இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும். பிள்ளைகளின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் தாய் அல்லது தந்தை , தனது கடவுச்சீட்டை எடுத்து வருவதோடு மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருவது அவசியமாகும். அத்தோடு தற்போது பிள்ளையிடம் தற்காலிக அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும். கடவுச்சீட்டுகள் அதன் உரிமையாளர்களிடம் மட்டுமே கையளிக்கப்படும் என்பதனை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும். இலங்கை தூதரகம்,குவைத்(16 -02- 2021).

පහත අංක සඳහන් අයදුම්පත්වලට අදාළ නව ගමන් බලපත්‍ර පමණක් තානාපති කාර්යාලය වෙත ලැබී ඇත.එය ලබා ගැනීම සඳහා කාර්යාල දිනවල උදෑසන 8.30 සිට දහවල් 12.30 අතර කාලය තුළ අදාළ කහ පැහැති රිසිට්පත සහ ඔබ සතු ගමන් බලපත්‍රය ද රැගෙන ආ යුතුය. ඊට අමතරව තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඔබ සතුව ඇත්නම් එයද අනිවාර්යයෙන්ම රැගෙන ආ යුතුය. දරුවන්ගේ ගමන් බලපත්‍ර ලබා ගැනීමට පැමිණෙන මව හෝ පියා කහ පැහැති රිසිට්පත සමග තමාගේ ගමන් බලපත්‍රය සහ දරුවාගේ උප්පැන්න සහතිකය ද රැගෙන ආ යුතුය‍. එසේම දරුවෙකුට දැනටමත් වලංගු ගමන් බලපත්‍රයක් හෝ තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඇත්නම් එයද රැගෙන ආ යුතුය.ගමන් බලපත්‍රය නිකුත් කරනු ලබන්නේ අදාළ හිමිකරුට පමණක් බව කාරුණිකව සලකන්න.ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය-කුවේට්(16-02-2021)

Image: Page 1

Image : Page 2

Image : Page 3

Image : Page 4

Image : Page 5

Image : Page 6

Image : Page 7

Image : Page 8

Image : Page 9

Image : Page 10

Image : Page 11

Image : Page 12

Add your comments to Srilanka News

Monday, February 15, 2021

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற பெரும் துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தின் Sabah Al-Nasser பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அறையில் குளிருக்காக கரி பயன்படுத்தியதால் எதிர்பாராதவிதமாக இரண்டு வீட்டுப் பணிப்பெண்கள் இன்று(15/02/21) உயிரிழந்தனர் என்ற பெரும் துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பணிப்பெண்கள் பிலிப்பைன்ஸ்(வயது-46) மற்றும் இலங்கை(வயது-51) நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஸ்பான்சர்(அரபி) கூறுகையில் பணிப்பெண்கள் தங்கியிருந்த அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராத காரணத்தால் ஒருமுறைக்கு பலமுறை கதவைத் தட்டினார் எனவும் எந்த பதிலும்வராத காரணத்தால். சந்தேகமடைந்து வீட்டில் உள்ள மற்றவர்கள் உதவியுடன் கதவை உடைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பணிப்பெண்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை கண்டார் எனவும், பின்னர் அவர் இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து விரைந்து வந்த தடயவியல் அதாகாரிகள் மரணத்திற்கான காரணம் தொடர்பான ஆய்வு செய்ததில் மூடிய அறையில் நிலக்கரியை எரிந்ததால் அதிலிருந்து எழுந்த கார்பன் டை ஆக்சைடு மூலம் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add your comments to Srilanka News

Saturday, February 13, 2021

குவைத்தில் இருந்து இலங்கைக்கு ஜசீரா ஏர்வேஸ் நேரடி விமான சேவையினை துவங்குகிறது

குவைத்தில் இருந்து இலங்கைக்கு ஜசீரா ஏர்வேஸ் நேரடி விமான சேவையினை துவங்குகிறது;தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் ராமச்சந்திரன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்

Image credit : Jazzera Airline Official

குவைத்தில் இருந்து இலங்கைக்கு ஜசீரா ஏர்வேஸ் நேரடி விமான சேவையினை துவங்குகிறது

இலங்கையின் தலைநகருக்கு(கொழும்பு) புதிய நேரடி விமான சேவைகளை குவைத் அரசு விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜசீரா ஏர்வேஸ் தொடங்குவதாக அறிவித்துள்ளது.வாரத்திற்கு இரண்டு விமானங்கள் இரு திசைகளுக்கும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜசீரா ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் ராமச்சந்திரன் கூறியதாவது, உலகளாவிய பயண சேவையினை துவங்குவதற்கான திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டிற்கான எங்கள் முதல் புதிய விமான சேவைகளை நாங்கள் தொடங்குகிறோம் என்றார். இதுபோல் இலங்கையின் தலைநகரில் இருந்து இரண்டு விமான சேவைகள் வீதம் வளைகுடாவின் அனைத்து இடங்களுக்கும் வழங்க உள்ளதாக அவர் தெரிந்துள்ளார். இதுபோல் இந்த ஆண்டில் கொழும்புக்கு விமானங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க ஜசீரா ஏர்வேஸ் விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

குவைத்திலிருந்து கொழும்பு செல்லும் விமான அட்டவணை பின்வருமாறு இருக்கும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான எண்(J9 551), குவைத்திலிருந்து கொழும்பு சேவையினை வழங்கும், இதுபோல் திருப்பி விமான எண்(J 9 552) திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பிலிருந்து குவைத்திற்கு சேவையினை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். கொழும்பிற்கான விமான சேவைக்கு புதிய ஏர்பஸ் ஏ 320 விமானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள இலங்கை சமூகத்தினருக்கும், இந்த நாட்டிற்கு வருகை தர விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நாங்கள் இப்போது இந்த புதிய முடிவு மூலம் சேவை செய்ய முடிகிறது, பயணிகள் அவர்கள் பயணிப்பதற்கு முன்பு குவைத் அரசு மற்றும் இலங்கை அரசு விதித்துள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக ஜசீரா ஏர்வேஸ் நிர்வாகம் தனது விமானத்திலும், குவைத்தில் உள்ள ஜசீரா விமானங்கள் இயக்கப்படும் முனையம் T5 பயணிகளின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கையினை எடுத்துள்ளது.இதுபோல் சவுதியில் இருந்து Gulf Air விமான நிறுவனம் இலங்கையின் தலைநகருக்கு(கொழும்பு) வாரத்தில் இரண்டு சேவைகளை வருகின்ற 15/02/21 முதல் துவங்கவுள்ளது என்ற செய்தியினையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Add your comments to Srilanka News

Thursday, January 28, 2021

இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்

இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்;இந்த தகவலை குவைத் தினசரி நாளிதழ் மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது

Image credit: Kuwait Airways

இலங்கையில் இருந்து 197 வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் விமானம் குவைத் வந்துள்ளதாக தகவல்

இலங்கையில் இருந்து இன்று(28/01/2021) வியாழக்கிழமை காலையில் வீட்டுத் தொழிலாளர்களுடன் முதல் குவைத் ஏர்வேஸ் விமானம்,குவைத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர அறிமுகம் செய்யப்பட்ட தளத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் இருந்து முதல்கட்டமாக இந்த 197 வீட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு வந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.<\p>

இலங்கையிலிருந்து குவைத்துக்கு வரும் வீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒதுக்கீட்டை ஏற்படுத்துவது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இலங்கை பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. எனவே இலங்கை விமான நிறுவனங்களில் ஒன்று வீட்டுப் பணியாளர்களை அழைத்துவரும் ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபடும் என்று தெரிகிறது. இலங்கையில் இருந்து இரண்டாவது விமானம் பிப்ரவரி,8-ஆம் தேதி புறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை குவைத் தினசரி நாளிதழ் மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Add your comments to Srilanka News

Thursday, January 7, 2021

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார்

(ஜெயசங்கர் சந்திப்பு புகைப்படம்)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை சென்றார். இதையடுத்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே, வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள், மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் சந்திப்பில் கூறியதாவது: 

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசியை சர்வதேச நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை அடிபடையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு இலங்கை அரசு எல்லைகளை மீறியதற்காக கைது செய்திருக்கும் இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது எனவும், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, 13 அரசியல் சாசன திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுகள் இலங்கையின் எதிர்கால நலனுக்கு உகந்தது என்றார். 

மேலும் இரண்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் தலைமையில் பல்வேறு பிரச்சினைகள், ஒத்துழைப்பு உள்ளிடவை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.




Add your comments to Srilanka News

Sunday, December 20, 2020

குவைத் இலங்கை தூதரகம் இன்று சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:

Dec-20,2020

எமது முன்னைய அறிவித்தலின் பிரகாரம் கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் கொன்சியுலர் சேவைகளைப் ( பிறப்பு / இறப்பு / திருமண பதிவுகள் / குடியுரிமைச் சான்றிதழ் / வாகன ஓட்டுனர் உரிமம் / அடோர்னி அதிகார ஆவண உறுதிப்படுத்தல் போன்றன ) பெற்றுக் கொள்ள வருகை தருவோர் முற்கூட்டியே நேரமொன்றை ஒதுக்கிக் கொள்வது அவசியமாகும்.

முற்கூட்டியே நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டு தூதரகத்துக்கு வருகை தர விரும்பினால் slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக எம்மைத் தொடர்பு கொண்டு நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியும் . 2020.12.20 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் கொன்சியுலர் சேவைகளைப் பெற வருகை தருவோர் முற்கூட்டியே நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியாதவிடத்து நேரடியாக வருகை தர முடியும் என்பதனையும் அறியத் தருகிறோம் . 

கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் கொன்சியுலர் பிரிவின் சேவைகள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை காலை 08.30 முதல் நண்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ள முடியும். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்து கடவுச்சீட்டைப் பெற விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தமது கடவுச்சீட்டின் பிரதியை 61682 , எனும் இலக்கத்துக்கு வட்ஸ்அப் ( WhatsApp ) வழியாக அனுப்பி வைக்கவும் .

பதிவு நடவடிக்கைகள் தொடர்பிலான விபரங்கள் உங்களுக்கு வட்ஸ்அப் ( WhatsApp ) வாயிலாக அனுப்பி வைக்கப்படுவதோடு பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூதரகத்துக்கு வருகை தர பொருத்தமான ஒரு நேரமும் வழங்கப்படும் என்பதனையும் அறியத் தருகிறோம்.



Add your comments to Srilanka News

Friday, December 18, 2020

குவைத் இலங்கை தூதரகம் கீழ்வரும் இலக்கங்களையுடைய நபர்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளது:

(Kuwait Srilankan Embassy)

Dec-18,2020

குவைத் இலங்கை தூதரகம் 17/12/2020 அன்று கீழ்வரும் இலக்கங்களையுடைய விண்ணப்பதாரிகளின் கடவுச்சீட்டுகள் மாத்திரம் தற்போது தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை  பெற்றுக் கொள்ளலாம் . கடவுச்சீட்டைப் பெற மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். அத்தோடு தற்காலிக கடவுச்சீட்டொன்று உங்கள் வசம் இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும்.

பிள்ளைகளின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் தாய் அல்லது தந்தை , தனது கடவுச்சீட்டை எடுத்து வருவதோடு மஞ்சள் நிற பற்றுச்சீட்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருவது அவசியமாகும் அத்தோடு தற்போது பிள்ளையிடம் தற்காலிக அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் . கடவுச்சீட்டுகள் அதன்  உரிமையாளர்களிடம் மட்டுமே கையளிக்கப்படும் என்பதனை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.

——————————————————————————

පහත අංක සඳහන් අයදුම්පත්වලට අදාළ නව ගමන් බලපත්‍ර පමණක් තානාපති කාර්යාලය වෙත ලැබී ඇත.

එය ලබා ගැනීම සඳහා කාර්යාල  දිනවල උදෑසන 8.30 සිට දහවල් 12.30 අතර කාලය තුළ අදාළ කහ පැහැති රිසිට්පත සහ ඔබ සතු ගමන් බලපත්‍රය ද රැගෙන ආ යුතුය. ඊට අමතරව තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඔබ සතුව ඇත්නම් එයද අනිවාර්යයෙන්ම රැගෙන ආ යුතුය. 

දරුවන්ගේ ගමන් බලපත්‍ර ලබා ගැනීමට පැමිණෙන මව හෝ පියා කහ පැහැති රිසිට්පත සමග තමාගේ ගමන් බලපත්‍රය සහ දරුවාගේ උප්පැන්න සහතිකය ද රැගෙන ආ යුතුය‍. එසේම දරුවෙකුට දැනටමත් වලංගු ගමන් බලපත්‍රයක් හෝ තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඇත්නම් එයද රැගෙන ආ යුතුය.

ගමන් බලපත්‍රය නිකුත් කරනු ලබන්නේ අදාළ හිමිකරුට පමණක් බව කාරුණිකව සලකන්න.



Add your comments to Srilanka News

Friday, October 16, 2020

குவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் அந்நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தல்

குவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் அந்நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தல்:

குவைத்,அக்-16,2020


நாம் ஏலவே அறியத்தந்தது போன்று குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு அனுப்ப முடியாமல் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ள காப்பகத்தில் நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டுள்ள 160 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை  உறுதி செய்யப்பட்டுள்ளது.  

எனவே மேற்குறித்த காரணத்தை  அடிப்படையாகக் கொண்டும் இடப்பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டும்  இனி  வரும் நாட்களில் எந்தவொரு புலம் பெயர் பெண் தொழிலாளரும் தூதரக காப்பகத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 

அதே நேரம் இலங்கை அரசின் தீர்மானத்தின் பிரகாரம் குவைத் இலங்கை தூதரகத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் நலன்புரி பிரிவின் பெரும்பாலான   அதிகாரிகளின் சேவைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

எனவே மேற்சொல்லப்பட்ட காரணங்களினால்  பணி புரியும் இடங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து தனது அனுசரணையாளருக்கு (கபீல்) தெரியாது வீடுகளை விட்டு வெளியேறி தூதரகத்துக்கு வருவதனைத் தவிர்க்குமாறும் 25354633 எனும் தொலைபேசி இலக்கம் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை அறியத் தரலாம்  அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக முறைப்பாட்டை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் உங்களது அனுசரணையாளரிடம்  (கபீலிடம்) தொடர்ந்தும் உங்களுக்கு பணி புரிய விருப்பம் இல்லாத போது , அதனை அனுசரணையாளருக்கு (கபீலுக்கு) தெரியப்படுத்தி , ருமைதியாவில் அமைந்துள்ள மனித வள அதிகார சபையின் கீழ் இயங்கும் “அமாலா மன்ஸில்” ஊடாக குவைத் அரசினால் பராமரிக்கப்படும் தொழிலாளர் காப்பகத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேற்குறிப்பிடப்பட்ட முறைகளைப் பின்பற்றாது பணி புரியும் இடங்களிலிருந்து வெளியேறுபவர்கள் தமது இருப்பிடத்தை இழப்பதோடு மீண்டும் தமது அனுசரனையாளரிடமோ (கபீலிடமோ) அல்லது வேலைவாய்ப்பு முகவரிடமோ (ஏஜன்சி) திரும்பிச் செல்ல நேரிடும் அல்லது தனக்கான தங்குமிடத்தைத் தானே  தேடிக் கொள்ள நேரிடும் என்பதனை அறியத்தருகிறோம்.

இலங்கை தூதரகம் – குவைத்

16 ஒக்டோபர் 2020

—————————————————————————

විශේෂ නිවේදනය


අප විසින් මීට ප්‍රථම දැනුම් දුන් පරිදි තානාපති කාර්යාලයේ නිලධාරීන් පිරිසකට සහ තානාපති කාර්යාල යටතේ පවත්වාගෙන යනු ලබන සුරක්ෂා නිවහනේ දීර්ඝ කාලයක් තිස්සේ ශ්‍රී ලංකාවට යාමට නොහැකිව රැදී  සිටින ගෘහ සේවිකාවන් 160 දෙනාගෙන්  බහුතරයකට මේ වන විට නව කොරොනා වෛරසය ආසාදනය වී ඇති බව තහවුරු වී ඇත.

මේ අවස්ථාව වන විට සුරක්ෂා නිවහනේ ඉඩකඩ ප්‍රමාණවත් නොවන බැවින් පැමිණෙන ගෘහ සේවිකාවන් සඳහා නවාතැන් පහසුකම් සැපයීමේ ප්‍රශ්ණයක්ද මතුවී ඇත. මෙම හේතුන් මත මින් ඉදිරියට කිසිඳු ගෘහ සේවිකාවක් සුරක්ෂා නිවහනට භාර නොගැනීමට තීරණය කර ඇත. 

තවද ඔබ දන්නා පරිදි ශ්‍රී ලංකා රජය ගත් තීරණයක් මත කුවේට් තානාපති කාර්යාලයේ රැකියා හා සුභ සාධන අංශයේ නිලධාරීන්  බහුතරයක් සේවය අවසන් කර නැවත ලංකාවට යැවීමට කටයුතු කර ඇත.

එබැවින් තම සේවා ස්ථානවල යම් ගැටළුවක් මතු වුවහොත් හාම්පුතාට හොර රහසේ තානාපති කාර්යාලයට පැමිණීමෙන් වළකින ලෙසත්, 25354633 දුරකථන අංකය ඔස්සේ තානාපති කාර්යාලය අමතා හෝ විදේශ සේවා නියුක්ති කාර්යාංශය හරහා තම පැමිණිල්ල ඉදිරිපත් කර විසඳා ගැනීමට කටයුතු කරන ලෙස දන්වමි.

තවද ඔබ තම හාම්පුතා යටතේ තවදුරටත් සේවය කිරීමට අකමැති නම් හාම්පුතාට ඒ බව දන්වා ඔහු සමඟ රුමතියාහි පිහිටි මිනිස් බල අධිකාරිය යටතේ පවතින “අමාල මනිසිල්” වෙත ගොස් කුවේට් රජය මගින් පවත්වාගෙන යනු ලබන සුරක්ෂා නිවහන වෙත භාරවීමට කටයුතු කරන්න.

එසේ නොකොට සේවා ස්ථානයෙන් බැහැරව පැමිණෙන අයට තම වාසස්ථානයද අහිමි වන අතර නැවතත් තම හාම්පුතාට හෝ විදේශ රැකියා නියෝජිත ආයතනයට භාරදීමට සිදුවනු ඇත.  නැතහොත් තමාට වාසස්ථානයක් සොයා ගැනීමට සිදුවනු ඇත.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය - කුවේට්

16 ඔක්තෝබර් මස 2020



Add your comments to Srilanka News

Saturday, July 27, 2019

குவைத்தில் இலங்கையை சேர்ந்தவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இலங்கையை சேர்ந்தவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிசைச் சேர்ந்தவர் இன்று(26/07/2019) மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.இவர் குவைத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார் என்று செய்தியில்தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த நபர் ஓட்டமாவடி-2ஆம் வட்டாரம், எம்.கே.வீதியைச் சேர்ந்த அபுசாலி யாகூப் (வயது 42) என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் இன்று விடுமுறை என்பதால் உறவினர் ஒருவரின் அறையில் இருக்குப்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரணமடைந்த நபரின் உடல் தற்போது குவைத் மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.உடலை நாட்டிற்கு கொண்டுச் செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Add your comments to Srilanka News

Sunday, July 21, 2019

குவைத்தில் இலங்கை பெண் துன்புறுத்தல் மற்றும் நாடுகடத்தப்பட்ட பெண் மீண்டும் நுழைய முயற்சி என்று 2 செய்திகள் வெளியாகியுள்ளன:

குவைத்தில் இலங்கை பெண் துன்புறுத்தல் மற்றும் நாடுகடத்தப்பட்ட பெண் மீண்டும் நுழைய முயற்சி என்று 2 செய்திகள் வெளியாகியுள்ளன:


குவைத்தில் வீட்டுத் தொழிலாளி அலுவலகத்தில் பணிபுரியும் இலங்கை பெண் ஒருவர், வீட்டுப் பணிப்பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட தகராறுக்காக குவைத் பெண்மணி ஒருவர் தன்னை கடுமையான தாக்கினர் என்று Fahaheel காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அந்த பெண் தனது உடலிலும் காயங்கள் இருப்பதை நிரூபிக்க மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார், இதையடுத்து சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இதுபோல் மற்றொரு சம்பவம் குவைத் சர்வதேச விமான நிலையம் நடந்துள்ளது.அதாவது முன்னர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் குவைத்தில் நுழைய முயற்சி செய்துள்ளார்.விமான நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவருடைய நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் சம்மந்தப்பட்ட துறையிடம் அந்த பெண்மணி ஒப்படைக்கப்பட்டார் என்று செய்தியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Add your comments to Srilanka News

Tuesday, July 16, 2019

குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்ட இலங்கைப் பெண் அணிந்திருந்த ஆடையுடன் தாயகம் திரும்பிய துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்ட இலங்கைப் பெண் அணிந்திருந்த ஆடையுடன் தாயகம் திரும்பிய துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் பணிப் பெண்ணாக வேலைக்கு வந்த பல இன்னல்களை சந்தித்த 4 குழந்தைகளின் தாய் நாடு திரும்பியதாக அந்நாட்டு செய்தி தளங்கள் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 குழந்தைகளின் தாய் (வயது-49) மாரிமுத்து சுலோச்சனா என்பவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.

இது குறித்து அந்த பெண்மணி கூறியதாவது

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பன்  மட்டுமே உண்பதற்கு கொடுக்கப்பட்டதுடன் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அணிந்திருந்த ஆடையுடன் நேற்று முன்தினம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை சென்றடைந்தார் என்றும், இலங்கை வெளிநாடு வேலை வாய்ப்பு பணியகம் சார்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் அவர்களின் திருமணச் செலவுக்கு பணத்தை சேர்ப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத்துக்கு வீட்டு பணிப் பெண்ணாக வந்துள்ளார்.

குவைத்தில் ஜஹரா என்ற பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கே இவர் பணிப்பெண்ணாக வந்துள்ளார்.ஆசிரியரின் மனைவியால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பன் மாத்திரமே உணவாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடுமையான சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.அதிக பசி ஏற்படும் பட்சத்தில் உணவு கேட்கும் போது குறித்த பெண் சுலோசனாவை செருப்பால் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் சுலோச்சனாவின் உடல் முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Srilanka News

Friday, June 28, 2019

குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் தீ குளித்து தற்கொலை என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் தீ குளித்து தற்கொலை என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.Saad Al-Abdullah பகுதியில் முதலாளி (Sponsor) யின் வீட்டில் வைத்து தன்னைத்தானே தீ வைத்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்மணி Jahra மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆனால் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதால் மரணமடைந்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரமான செய்தியை குவைத்தின் பிரபலமான தினசரி நாளிதழ் Al-abha செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்த பணிப்பெண் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் செய்தியில் குறிப்பிடவில்லை.இது கொலையா.....?? அல்லது தற்கொலையா.... என்பது அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.



குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

  


Reporting by Kuwait tamil pasanga team



Add your comments to Srilanka News