குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்;இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவி்த்தனர்
Image: சமூக ஊடக வீடியோ
குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்
குவைத் மற்றும் குவைத் நாணயத்தை அவமதிப்பு செய்ததற்காக நான்கு பங்களாதேஷ் நாட்டினரை கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு 20 தினார் நோட்டுகளை மேலிருந்து கீழே வீசி,அதை மிதந்து ஆபாசமாக நடனமாடும் வீடியோவை எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நிலையில் அது வைரலாக பரவியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர். தொடர்ந்து அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலிசார் அவர்களை கைது செய்தனர்.
இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவி்த்தனர். இதையடுத்து குவைத் சட்டத்திற்கு தங்கள் நாட்டின் மக்கள் கட்டுப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளையும், நாட்டில் வாழும் பங்களாதேஷியர்களையும் இதுபோன்ற செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் குவைத்திற்கான பங்களாதேஷ் தூதர் முகமது ஆஷி குஸ்மான் தங்கள் நாட்டின் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரகத்தில் போலியான யூரோ நோட்டுகளை சாலையில் வீசி நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் வீடியோ ஆதாரம் அடிப்படையில் அவரை கைது செய்து திர்ஹம் அபராதமும் சிறை தண்டனையும் வழங்கியது யாரும் மறந்திருக்க வாய்பில்லை.
Kuwait Police | Kuwait Money | Bangladesh Workers