BREAKING NEWS
latest

Kuwait Arrival - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Arrival செய்திகள், கட்டுரைகள், Kuwait Arrival புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, July 16, 2023

பயோமெட்ரிக் கைரேகை சேகரிப்பு தொடர்கிறது தாயகம் செல்ல தேவையில்லை திரும்பும் போது கட்டாயம்

குவைத்தில் கைரேகை சேகரிப்பதற்காக வணிக வளாகங்கள் மற்றும் அமைச்சக வளாகங்களில் புதிய மையங்கள் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Image credit : உள்துறை அமைச்சகம்

பயோமெட்ரிக் கைரேகை சேகரிப்பு தொடர்கிறது தாயகம் செல்ல தேவையில்லை திரும்பும் போது கட்டாயம்

குவைத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின்(வெளிநாட்டினர்) பயோமெட்ரிக் கைரேகைகளை சேகரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைரேகையை எடுக்காமல் குவைத்தை விட்டு வெளியேறலாம், ஆனால் திரும்பும் போது இது கட்டாயம்(விமான நிலையத்தில் எடுக்கப்படும்) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைரேகை சேகரிப்பதற்காக வணிக வளாகங்கள் மற்றும் அமைச்சக வளாகங்களில் இதற்காக புதிய மையங்கள் திறக்கப்படும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் புதிய நுட்பத்தை புகுத்துவதற்கும் கைரேகை சேகரிப்பது தானியங்கி முறையில் செயல்படுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் நாட்டிற்குள் நுழைபவர்களின் அடையாளத்தை எளிதாக சரிபார்க்க முடியும். நாட்டின் குடிமக்கள், வ‌ளைகுடா நாடுகளை சேர்ந்த குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள்(வெளிநாட்டினர்) இந்த நோக்கத்திற்காக இயங்கி வருகின்ற மையங்களுக்குச் சென்று தகவல் கொடுக்கலாம்.

குவைத்திகள் மற்றும் GCC நாட்டினருக்கு ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மதி, ஜஹ்ரா மற்றும் முபாரக் அல் கபீர் ஆகிய இடங்களுக்கு சென்று தகவல்களை வழங்கலாம். அலி சபா அல் சலாம் பகுதியிலுள்ள அடையாளம் எடுக்கும் மையம்(Identification Centre) மற்றும் ஜஹ்ராவில் உள்ள அடையாளம் எடுக்கும் மையம் ஆகிய இரண்டு மையங்கள் வெளிநாட்டவர்களுக்காக இயங்குகின்றன. இவை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்று பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடக பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு(செல்வதற்கான அனுமதி) META இணைய தளம் அல்லது உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே எடுக்க வேண்டும். இதற்கிடையில், பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்ய மேலும் ஐந்து மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 360 மால், அவென்யூஸ், அல் அசிமா மால், அல் குட் போன்ற வணிக வளாகங்களிலும் உள்துறை அமைச்சக வளாகத்திலும் புதிய பயோமெட்ரிக் கைரேகை மையங்கள் திறக்கப்படும். புதிய மையங்களில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் முன் அனுமதி இல்லாமல் பயோமெட்ரிக் கைரேகைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BioMatric Scan | Kuwait Travelling | Kuwait Arrival

Add your comments to Search results for Kuwait Arrival

Saturday, January 2, 2021

குவைத், சிக்கித் தவிக்கும் மக்களை அழைத்துவர கூடுதல் நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது


குவைத்  சிவில் ஏவியேஷன் துபாய், தோஹா, துருக்கி மற்றும் பஹ்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் மக்களைத் திரும்பி அழைத்துவர கூடுதல் விமானங்களை அனுமதிக்கிறது என்ற செய்தி வெளியிட்டுள்ளது. 

சிக்கித் தவிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்(தொழிலாளர்களை) திரும்பி வருவதற்கு வசதியாக, துபாய், தோஹா, துருக்கி, பஹ்ரைன் மற்றும் வேறு சில தலைநகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம்,விமான நிறுவனங்களை அனுமதித்ததாக நம்பகமான ஆதாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை(02/01/21) சனிக்கிழமை,அதிகாலை 4 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வணிக விமானங்களின் இயக்கம் தொடங்கும் என்றும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் மூடப்பட்ட பிறகு நாளை முதல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதை இது குறிக்கிறது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் சிவில் ஏவியேஷன் விமானத்தின் சேவைகளை அதிகரிக்க செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக நாட்டிற்கு திரும்பும் விமானங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்காலிக புகலிடங்களில்  உள்ளவர்கள் குவைத்தில் நுழையும் பொது கடைபிடிக்க வேண்டிய சிவில் ஏவியேஷன் நேற்று வெளியிட்டுள்ள நிபந்தனைகளை இங்கே படிக்கவும் Link:https://www.arabtamildaily.com/2020/12/conditions-for-departure-arrival-passengers-at-kuwait.html

Add your comments to Search results for Kuwait Arrival

Tuesday, May 25, 2021

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் விமான நிலைய‌ம் வந்தடைந்தனர்

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் குவைத் சர்வதேச விமான நிலைய‌ம் வந்தடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : Arrival On Kuwait Airport

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் மீதான தடையை நீக்கிய பின்னர் முதல் குழுவினர் விமான நிலைய‌ம் வந்தடைந்தனர்

குவைத்திற்கு வீட்டு தொழிலாளர்களின் முதல் குழுவினர் பிலிப்பைன்ஸிலிருந்து குவைத்திற்கு சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். வீட்டுத் தொழிலாளர்களை குவைத்துக்கு அனுப்புவதற்கான தடையை பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள தொழிலாளர் துறை அமைச்சகம் நீக்கிய பிறகு இந்த முதல் குழுவினர் குவைத்திற்கு வந்துள்ளனர். வருகை தந்துள்ள பெண்தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பாஷம்-அல்-ஷம்மாரி தெரிவித்தார். பிலிப்பைன்ஸிலிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குவைத் ஏர்வேஸ் இரட்டிப்பாகும்போது,வரும் நாட்களில் அதிகமான தொழிலாளர்கள் குவைத் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவினர் நேற்றே(24/05/21) குவைத் வந்தடைந்த நிலையில் இன்று இது தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது. தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் ஒப்பிடும்போது பிலிப்பைன்ஸ் இப்போது அனுப்ப அனுமதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று அல்-ஷம்மாரி உறுதிப்படுத்தினார், இந்த தொழிலாளிகள் நாட்டிற்கு வந்ததிலிருந்து ஒப்பந்த காலத்தின் இறுதி வரை அவர்களின் முழு உரிமைகளையும் பாதுகாத்தல் என்பது தங்களுடைய பொறுப்பாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Add your comments to Search results for Kuwait Arrival

Tuesday, February 2, 2021

குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை

குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை;கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து நிலையில்

Image: Kuwait Airport Arrival

குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை

குவைத்தில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து இன்று கடந்த பல மாதங்களாக இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் சுகாதரத்துறை அமைச்சகம் மற்றும் விமான நிலைய சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் இடையே வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினசரி நாளிதழ் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழுடன் நாட்டிற்கு வரும் பயணிகளும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் வைரஸ் பாதிப்பு அதிகளவில் கண்டறியப்படும் சூழ்நிலையில் இவற்றைக் கையாள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக தற்போதைய நடைமுறைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் இதில் அடங்கும்.

அரசின் சுகாதார நெறிமுறைகளை மீறி திருமணம்,விருந்துகள் மற்றும் கூட்டங்கள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்வதால் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன. நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமை கவலை அளிக்கிறது. நோய்த்தொற்று வழக்குகள் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நாட்டின் குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்தால், பூட்டுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு திரும்புவோம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Add your comments to Search results for Kuwait Arrival