வெளிநாட்டிலிருந்து குவைத்துக்கு வரும் பயணிகளின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த(குறைக்க) சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கலாம் என்று, சம்மந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் அரபு செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் இது தொடர்பான ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று செய்தித்தாள் கூறியுள்ளது.குவைத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளின்படி,வெளிநாட்டு பயணிகள் குவைத்தில் நுழைந்தால் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
முன்னதாக, பி.சி.ஆர் சான்றிதழுடன் ஒவ்வொரு விமானங்கள் மூலம் குவைத் விமான நிலையத்தில் வந்து தரையிறங்கும் பயணிகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே தோராயமாக தேர்வு செய்யப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் இரண்டு வாரங்கள் முடிக்கும் விதத்தில் விதிமுறை இருந்தது. ஆனால் மரபணு மாற்றப்பட்ட கொரோனா பரவல் துவங்கிய பிறகு ஆதாவது தற்போது, விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதையடுத்து புதிய அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் பயணியின் பரிசோதனை முடிவு எதிர்மறையாக(Nagative) அமைந்தால், ஒரு வாரத்திற்குள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இதன் முடிவும் மீண்டும் எதிர்மறையாக(Nagative) இருந்தால், தனிமைப்படுத்தல் அன்றுடன் காலாவதியாகும் ஒரு புதிய முறையை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தப் போகிறது. இதன் மூலம் பயணிகள் தனிமைப்படுத்தலை 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்க முடியும்.
இருப்பினும், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் பயணியின் பரிசோதனை முடிவு நேர்மறையாக(Positive) அமைத்தால் இரண்டு வாரங்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்க வேண்டும். மேலும் விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு கண்டறியப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எத்தனை நாட்களாக....??? சுருக்குவது என்ற இறுதி முடிவை சுகாதரத்துறை எடுத்த பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், துபாய் போன்ற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத் திரும்பும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் நிம்மதியடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Kuwait Heath | Reduce Quarantine | PCR Test