BREAKING NEWS
latest

Staying UAE - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Staying UAE செய்திகள், கட்டுரைகள், Staying UAE புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, September 6, 2021

அமீரகம் நெருக்கடியான சூழ்நிலையில் வேலை இழந்த வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் வரை அபராதம் இன்றி நாட்டில் தங்க அனுமதிக்கும் புதிய முடிவை வெளியிட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை இழந்த வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் வரை அபராதம் இன்றி நாட்டில் தங்கலாம்

Image : அழகிய அமீரகம்

அமீரகம் நெருக்கடியான சூழ்நிலையில் வேலை இழந்த வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் வரை அபராதம் இன்றி நாட்டில் தங்க அனுமதிக்கும் புதிய முடிவை வெளியிட்டுள்ளது

அமீரகத்தில் விசா காலாவதியான பிறகும் வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்குவதற்கான சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி சலுகைக் காலம் 90 முதல் 180 நாட்கள் வரையில் என்ற விகிதத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் தானி பின் அகமது அல் சியுடி அறிவித்தார். தற்போது நடைமுறையிலுள்ள சட்டப்படி வேலை இழந்த அல்லது விசா கேன்சல் செய்யப்பட்ட வெளிநாட்டினர் எந்த விதமான அபராதமும் இல்லாமல் 30 நாட்கள் நாட்டில் தங்கியிருக்க அனுமதி உள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு இன்று(06/09/21) திங்கள்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த புதிய முடிவு வேலை இழந்த இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும். ஆறு மாத காலம் நாட்டில் தங்கியிருப்பதன் மூலம் வாழ்வாதாரத்துக்காக நீங்கள் ஒரு புதிய வேலையை கண்டுபிடிக்க இது பெரும் உதவியாக இருக்கும், மேலும் இந்த கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்த புதிய அறிவிப்பு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Job Loss | Without Fine | Staying UAE

Add your comments to Search results for Staying UAE