(AbuDhabi Road)
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த சில நாட்களாக கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அபுதாபியில் நுழையும் நபர்களுக்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று(18/01/21) ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வந்துள்ளது. இதையடுத்து அபுதாபியில் நுழைவதற்காக இன்று முதல் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அபுதாபி அவசரகால மீட்பு மற்றும் பேரிடர் குழு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி அபுதாபியில் நுழைவோர் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் எதிர்மறை( Nagative) சோதனை முடிவு சான்றிதழ் அல்லது டிபிஐ சோதனை முடிவு சான்றிதழோ சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளை சமர்ப்பித்தால் போதுமானதாக இருந்தது. இது தவிர, அங்கு தங்கியிருப்பவர்கள் மீண்டும் நான்காவது நாளிலும், பின்னர் எட்டாம் நாளிலும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இந்த நடைமுறை நீங்கள் அபுதாபியில் நுழைந்த நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. முன்னதாக அபுதாபியில் நுழைந்து ஆறாவது நாளில் எடுக்கப்படும் பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் மட்டுமே போதுமானதாக இருந்தது.
இந்த புதிய விதிமுறைகள் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு பிரசார நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுக்கொண்ட நபர்கள் மற்றும் மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி பிரசாரத்தில் கலந்துக்கொண்டு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
AbuDhabi Police | New Rules | Today Starting