BREAKING NEWS
latest

AbuDhabi Police - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் AbuDhabi Police செய்திகள், கட்டுரைகள், AbuDhabi Police புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Saturday, January 16, 2021

அமீரகத்தில் 100 கோடி திர்ஹாம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்;வெளிநாட்டவர்கள் உட்பட 22 பேர் கைது


(Photo:Abudhabi Police Official Source)

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 100 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான போதைப் பொருள் குவியல்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.மேலும் இது தொடர்பான வெளிநாட்டினர் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டன என்று அபுதாபி காவ‌ல்துறை செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான அபுதாபி காவ‌ல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், 100 கோடி திர்ஹாம் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 பேர் அபுதாபியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.041 டன் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,இந்த சொதனையின் போது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர்கள் பலரையும் கைது செய்ததாகவும் போலீசார் வெள்ளிக்கிழமை(நேற்று) தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பல்வேறு வழிகளில் நாட்டைவிட்டு வெளியேற்றும் பணிகளை செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.காவல்துறைக்கு கிடைத்த பல்வேறுபட்ட இரகசிய தகவல்கள் அடிபடையில், கிடைத்த தகவல்களின் உண்மை தன்மையினை முழுமையான விசாரணை செய்த பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனைகளில் இந்த மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர்.

அபுதாபி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு இயக்குநரகத்தின் தலைவர் கர்னல் தாஹிர் கரிப் அல்-தாஹிரி கூறுகையில், அமீரகத்திற்கு வெளியே உள்ள பல்வேறு போதைப்பொருள் கடத்தல் குழுக்களும்,இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும்,அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


<a href="/search?q=Seizure+Drugs">Seizure Drugs</a> | 

<a href="/search?q=100Crore+Dirhams">100Crore Dirhams</a> | 

<a href="/search?q=Abudhabi+Police+">Abudhabi Police </a> 

Add your comments to Search results for AbuDhabi Police

Sunday, January 17, 2021

அபுதாபியில் நுழைய புதிய நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டன;இன்று முதல் நடைமுறையில் வந்துள்ளது

(AbuDhabi Road)

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த சில நாட்களாக கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அபுதாபியில்  நுழையும் நபர்களுக்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று(18/01/21) ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வந்துள்ளது. இதையடுத்து அபுதாபியில் நுழைவதற்காக இன்று முதல் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அபுதாபி அவசரகால மீட்பு மற்றும் பேரிடர் குழு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி அபுதாபியில் நுழைவோர் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட  பி.சி.ஆர் எதிர்மறை( Nagative) சோதனை முடிவு சான்றிதழ் அல்லது டிபிஐ சோதனை முடிவு  சான்றிதழோ சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளை சமர்ப்பித்தால் போதுமானதாக இருந்தது. இது தவிர, அங்கு தங்கியிருப்பவர்கள் மீண்டும் நான்காவது நாளிலும், பின்னர் எட்டாம் நாளிலும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இந்த நடைமுறை நீங்கள் அபுதாபியில் நுழைந்த நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. முன்னதாக அபுதாபியில் நுழைந்து ஆறாவது நாளில் எடுக்கப்படும் பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் மட்டுமே போதுமானதாக இருந்தது.

இந்த புதிய விதிமுறைகள் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு பிரசார நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுக்கொண்ட நபர்கள் மற்றும் மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி பிரசாரத்தில் கலந்துக்கொண்டு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

AbuDhabi Police | New Rules | Today Starting

Add your comments to Search results for AbuDhabi Police

Saturday, January 30, 2021

அபுதாபியில் நுழைய கடுமையான புதிய கட்டுபாடுகள்;பிப்ரவரி-1 முதல் நடைமுறையில்

அபுதாபியில் நுழைய கடுமையான புதிய கட்டுபாடுகள்;48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் தேவை, உள்ளிட்ட நடைமுறை பிப்ரவரி-1 முதல்

Image credit: Abudhabi Police Official

அபுதாபியில் நுழைய கடுமையான புதிய கட்டுபாடுகள்;பிப்ரவரி-1 முதல் நடைமுறையில்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்வேறு அமீரகங்களில் வசிப்பவர்களுக்கு அபுதாபியில் நுழைவதற்கான நடைமுறைகள் இரண்டாவது முறையாக மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவானது அபுதாபியில் நுழைவதற்கான நடைமுறைகள் குறித்த விவரங்களை இன்று(30/01/21) சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.பிப்ரவரி 1 திங்கள்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கட்டுபடுத்தும் வகையில் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பி.சி.ஆர் பரிசோதனையின் எதிர்மறை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அபுதாபியில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நான்கு நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அபுதாபியில் தங்கியிருந்தால், நான்காவது மற்றும் எட்டாம் நாளில் கோவிட் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின்படி, ஒரு நபர் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட டிபிஐ சோதனையின் எதிர்மறை சான்றிதழுடன் அபுதாபியில் நுழைய முடியும். இருப்பினும், டிபிஐ பரிசோதனை முடிவுகளைக் காண்பிப்பதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு முறை அபுதாபியில் நுழைய முடியாது. டிபிஐ சோதனை முடிவுகளுடன் அபுதாபியில் நுழைவோர் 48 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தங்கியிருந்தால் மூன்றாம் நாளில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதுபோல் நீங்கள் ஏழு நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள்அபுதாபியில் தங்கியிருந்தால், ஏழாம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்து ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கும் ,குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், சோதனை அடிப்படையில் நடைபெற்ற தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் நாட்டின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் அல்-ஹொசைன் பயன்பாட்டில் செயலில் Active I-con பெற்றவர்களுக்கும் விலக்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for AbuDhabi Police

Sunday, March 7, 2021

அமீரகத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி;சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்

அமீரகத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி;சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : Abudhabi Police

அமீரகத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி;சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்

அபுதாபில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற நிறுவனத்தின் அதிகாரிகளை அபுதாபி போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான தகவலை காவல்துறை அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்துள்ளது. போலிஸ் அதிகாரி ஒருவர் ஒரு வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக தவறான தகவல்களை உயர் அதிகாரிக்கு சமர்ப்பிக்க லஞ்சம் கொடுக்க முயன்றனர். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின் போது அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். அபுதாபி போலீஸின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் லெப்டினல் கேணல் மாதர் மடாத் அல் முஹைரி இதை தெரிவித்துள்ளார்.மேலும் காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் ஃபரிஸ் கலஃப் அல் மஸ்ரூய், அபுதாபி காவல்துறையின் நேர்மையையும், சட்டத்தை மீறுபவர்களை நேர்மையான சட்டத்தின் முன்பு கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளையும் பாராட்டினார். ஊழல் குறித்த தகவல்களை பொதுமக்கள் 8002626 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் அல்லது 2828 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Add your comments to Search results for AbuDhabi Police

Sunday, February 7, 2021

அபுதாபியில் கோவிட் சூழ்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அபுதாபியில் கோவிட் சூழ்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன;புதிய விதிமுறைகள் இன்று(பிப்ரவரி 7) முதல் நடைமுறைக்கு வரும்

Image: Abudhabi Police

அபுதாபியில் கோவிட் சூழ்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அபுதாபியில் கோவிட் பரவலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அபுதாபி அவசர மற்றும் நெருக்கடி மற்றும் பேரழிவுக்குழு பார்டிகள் மற்றும் பொது நிகழ்வுகளை தடை விதித்துள்ளது.திருமண மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்ளலாம். புதிய விதிமுறைகள் இன்று(பிப்ரவரி 7) முதல் நடைமுறைக்கு வரும்.

திருமணங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இறுதிச்சடங்கில் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளக் கூடாணு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மால்கள், உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் தனியார் மற்றும் பொது கடற்கரை பீச்சுகளில் மக்களை அனுமதிக்கு நபர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. ஷாப்பிங் மால்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க முடியும். உணவகங்கள், கஃபேக்கள், ஹோட்டல்கள், பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு அனுமதி கிடையாது. தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்களில் 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 50 சதவீத மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட முடியும். சுமார் 45 சதவீதம் பேர் டாக்சிகளிலும், 75 சதவீத பேருந்துகளும் அனுமதிக்கப்படுவார்கள். மேலதிக அறிவிப்பு வரும் வரை திரைப்பட தியேட்டர்கள் இனி மூடப்பட்டு இருக்கும்.

Add your comments to Search results for AbuDhabi Police