குவைத்தில் கொரோனா போராட்டத்தில் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவதி உயிழந்தார் என்று சுகாதரத்துறை....
Image credit:Official Soure
குவைத்தில் கொரோனா போராட்டத்தில் மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவதி உயிழந்தார்
குவைத் அல்-சலாம் சுகாதார மையத்தின் மருத்துவரான ஆயிஷா அல்-அவைதியை கொரோனா வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நாட்டில் COVID-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரதுறை ஊழியர்களின் தியாகங்கள் தொடர்கின்றன. குவைத் சுகாதரத்துறையில் வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த பலரும் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டியது கடமையாகும்.
டாக்டர் அல்-அவைதி சுகாதார மையத்தில் பொதுமக்களை பரிசோதிப்பதில் முன் வரிசையில் பணிபுரிந்தபோது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.அவர் நோய்தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பின்னர்,ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா தொற்றுநோயை முன் வரிசையில் எதிர்கொண்டு வருகின்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார். இதையடுத்து பல்வேறு செய்தி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக குவைத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் டாக்டர்.அல்-அவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Kuwait Moh | Kuwait Doctor | Kuwait Covid19