குவைத்தின் பிரபலமான கடல்வழி ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன

குவைத்தின் ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை
குவைத்தின் பிரபலமான கடல்வழியான ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளன. பாலத்தின் குறுக்கே சுமார் 470 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் பாலத்தில் உள்ள மின் மாற்றி பழுதடைந்ததால் கேமராக்கள் எதுவும் இயங்கவில்லை. கேமராக்கள் இயங்காமல் உள்ளத்தை சரி செய்யுமாறு மின்வாரியத்துக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இருப்பினும், இது அவர்களின் அதிகார வரம்பிற்குள் இல்லை எனவும் மற்றும் ரோட்ஸ் பொது ஆணையத்தின் பொறுப்பாகும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மின்சார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பழுதை சரிசெய்ய சுமார் 40,000 தினார் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஜாபர் பாலம் வழியாக பயணிக்கின்றனர். நாட்டின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான இந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயலிழப்பு பல பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Jaber Bridge | Camera Down | Kuwait Sea