BREAKING NEWS
latest

Jaber Bridge - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Jaber Bridge செய்திகள், கட்டுரைகள், Jaber Bridge புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, December 4, 2022

குவைத்தின் ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை:

குவைத்தின் பிரபலமான கடல்வழி ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன

Image : Kuwait Jaber Bridge

குவைத்தின் ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை

குவைத்தின் பிரபலமான கடல்வழியான ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளன. பாலத்தின் குறுக்கே சுமார் 470 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் பாலத்தில் உள்ள மின் மாற்றி பழுதடைந்ததால் கேமராக்கள் எதுவும் இயங்கவில்லை. கேமராக்கள் இயங்காமல் உள்ளத்தை சரி செய்யுமாறு மின்வாரியத்துக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இருப்பினும், இது அவர்களின் அதிகார வரம்பிற்குள் இல்லை எனவும் மற்றும் ரோட்ஸ் பொது ஆணையத்தின் பொறுப்பாகும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மின்சார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பழுதை சரிசெய்ய சுமார் 40,000 தினார் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஜாபர் பாலம் வழியாக பயணிக்கின்றனர். நாட்டின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான இந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயலிழப்பு பல பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Jaber Bridge | Camera Down | Kuwait Sea

Add your comments to Search results for Jaber Bridge

Wednesday, October 13, 2021

குவைத்தின் ஷேக் ஜாபர் அல் அகமது பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

குவைத்தின் Jaber Bridge இருந்து குதித்து ஒருவர் தற்கொலை முயற்சி;கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image : மீட்கப்பட்ட காட்சி

குவைத்தின் ஷேக் ஜாபர் அல் அகமது பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

குவைத்தின் பிரபலமான Jaber கடல்வழி பாலத்தின் மேல் இருந்து நேற்று(12/10/21) இரவு குதித்து ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். இதையடுத்து அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை கடலில் இருத்து மீட்டனர். ஆனா‌ல் அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடலில் குதித்த நபர் ஒரு வாடகை காரில் வந்தார் எனவும், பாலத்தின் மேலே வந்ததும் காரை நிறுத்தும்படி கூறினார் எனவும், அவர் கடலை பார்ப்பதற்காக வாகனத்தை நிறுத்த சொன்னார் என்று வானத்தை நிறுத்தினேன், ஆனால் அந்த நபர் திடிரென கடலில் குதித்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று வாகனத்தின் ஓட்டுநர் தெரிவித்தார். கடலில் குதித்த நபர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Add your comments to Search results for Jaber Bridge

Tuesday, December 20, 2022

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடல் வழி பாலத்தில் இருந்து குதித்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது

Image : மீட்கப்பட்ட சிறுமி

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தின் பிரபலமான Jaber கடல் பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஒரு சிறுமி பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்ததை பார்த்த சிலர் உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த கடலோர காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை சேர்ந்து பத்திரமாக 10 நிமிடத்தில் அந்த குழந்தையை மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த குழந்தை எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளதாக இரகசிய பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வது தொடர்கதை ஆனதால் பாலத்தின் ரோந்து வாகனங்களின் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டு இருந்ததால் தற்கொலை தொடர்பான முயற்சிகள் குறைந்திருந்தது குறி்ப்பிடத்தக்கது.

Kuwait Police | Jaber Bridge | Save Girl

Add your comments to Search results for Jaber Bridge

Monday, August 30, 2021

குவைத்தில் டெலிவரி வேலை செய்கின்ற தொழிலாளர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளன

குவைத்தில் அக்டோபர் 3 முதல் முக்கிய சாலைகளில் டெலிவரி பைக்குகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Image credit: குவைத்தின் முக்கிய சாலை

குவைத்தில் டெலிவரி வேலை செய்கின்ற தொழிலாளர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளன

குவைத் நெடுஞ்சாலைகள்(Highways) மற்றும் வளைய சாலைகளில்(Rong Road) டெலிவரி பைக்குகளை இயக்க தடை அமலுக்கு வருகின்றன. இந்த புதிய முடிவு அக்டோபர்-3,2021 முதல் நடைமுறையில் வருகின்றன என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக நாட்டின் முக்கியமான First Ring Road, Fourth Ring Road, Fifth Ring Road, Sixth Ring Road, Seventh Ring Road, King Abdul Aziz Road 30, King Fahd Bin Abdulaziz Road 40, King Faisal bin Abdulaziz Road 50, Al-Ghazali Road 60, Jahra Road, Gamal Abdel Nasser Road (Upper Bridge) மற்றும் Jaber Bridge ஆகிய சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் குறுக்குவெட்டு பகுதிகளையும், ரவுண்டானாவையும் பயன்படுத்தலாம்.

முன்னதாக நாட்டின் போக்குவரத்து மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல்-சயீக் அவர்கள் டெலிவரி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உரையாற்றினார். அப்போது சாலைகளில் டெலிவரி பைக்குகள் தொடர்பாக ஏற்ப்படும் விபத்துகள் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தார். அதேபோல் டெலிவரி பைக்குகளில் பொருட்கள் எடுத்துச்செல்ல இணைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமிக்ஞை விளக்குகள் இணைக்க வேண்டும், அதேபோல் பெட்டிகளுக்குப் பின்னால் இரவில் பிரதிபலிப்பு Stickers ஒட்டவும் வேண்டும் மற்றும் வாகன ஓட்டி கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்ட கூடாது எனவும் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு பைக் ஓட்டுபவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Add your comments to Search results for Jaber Bridge