எகிப்தில் இருந்து குவைத்திற்கு வருகின்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக எகிப்து அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் எதிரொலி

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:
குவைத் எகிப்து தொழிலாளர்களுக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது. உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இருந்து அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தொடரும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் எகிப்தில் இருந்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை எகிப்திய தூதரகம் நிர்ணயித்துள்ளது. இந்த நிபந்தனைகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எகிப்தியர்களுக்கான பணி அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு முதல் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அவர்கள் உத்தரவிட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்து தூதரகம் விதித்துள்ள நிபந்தனைகள் குவைத் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிகிறது.
இதன் காரணமாகவே குவைத் கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் எகிப்தில் இருந்து குடும்ப விசாவில் குவைத் வருபவர்களுக்கான ஸ்டாம்பிங் கட்டணத்தை எகிப்தில் உள்ள குவைத் தூதரகம் கடந்த தினத்தில் ஒரேயடியாக மூன்று மடங்கு உயர்த்தியது. இதேபோல் இரு நாடுகளிலும் Online வழியான பணியாளர்கள் தேர்வு அமைப்பு நடைமுறை ரத்து செய்யப்பட்டன. குவைத்தில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் இரண்டாவது பெரிய வெளிநாட்டு சமூகமாக நாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
Kuwait Banned | News Visa | Kuwait Visa