BREAKING NEWS
latest

Kuwait Visa - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Visa செய்திகள், கட்டுரைகள், Kuwait Visa புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, December 7, 2022

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

எகிப்தில் இருந்து குவைத்திற்கு வருகின்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக எகிப்து அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் எதிரொலி

Image: Kuwait Airport

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

குவைத் எகிப்து தொழிலாளர்களுக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது. உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இருந்து அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தொடரும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் எகிப்தில் இருந்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை எகிப்திய தூதரகம் நிர்ணயித்துள்ளது. இந்த நிபந்தனைகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எகிப்தியர்களுக்கான பணி அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு முதல் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அவர்கள் உத்தரவிட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்து தூதரகம் விதித்துள்ள நிபந்தனைகள் குவைத் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிகிறது.

இதன் காரணமாகவே குவைத் கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் எகிப்தில் இருந்து குடும்ப விசாவில் குவைத் வருபவர்களுக்கான ஸ்டாம்பிங் கட்டணத்தை எகிப்தில் உள்ள குவைத் தூதரகம் கடந்த தினத்தில் ஒரேயடியாக மூன்று மடங்கு உயர்த்தியது. இதேபோல் இரு நாடுகளிலும் Online வழியான பணியாளர்கள் தேர்வு அமைப்பு நடைமுறை ரத்து செய்யப்பட்டன. குவைத்தில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் இரண்டாவது பெரிய வெளிநாட்டு சமூகமாக நாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

Kuwait Banned | News Visa | Kuwait Visa

Add your comments to Search results for Kuwait Visa

Monday, February 5, 2024

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது

Image : Kuwait Airport

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

வெளிநாட்டினருக்கு குடும்ப விசிட் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இந்த முடிவு பிப்ரவரி-7,2024 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். METTA தளத்தின் மூலம் விசா பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான பின்வரும் நிபந்தனைகள் கட்டாயமாகும். மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விசிட் விசா பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மாத சம்பளம் 400 தினார் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 800 தினார் சம்பளம் உள்ளவர்களுக்கு, மற்ற உறவினர்கள் (சகோதரர்கள், மனைவியின் தாய் தந்தை, மனைவி/உடன்பிறப்புகள்) ஆகியோருக்கான விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குவைத்திற்கு சொந்தமான எதாவது ஒரு தேசிய விமான நிறுவனத்தில் விசிட் வந்தவர்கள் வருவதற்கும், திரும்ப செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுத்து கொண்டு மட்டுமே நாட்டை(குவைத்தை) அடைய வேண்டும். மேலும் விசிட் விசாவை வசிப்பிட(Residence Permit) விசாவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும் விசிட் வந்துள்ள நேரத்தில் எதாவது காரணத்தால் சிகிச்சை தேவை என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். விசிட் விசா காலம் முடிந்தும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தால் விசிட் வந்த நபர் மற்றும் அவருக்கு விசா எடுத்த ஸ்பான்சர் ஆகியோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்டவை மற்ற நிபந்தனைகள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Visit Visa | Kuwait Visa | Visit Kuwait

Add your comments to Search results for Kuwait Visa

Sunday, February 4, 2024

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வணிக சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : Kuwait City

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப விசா வழங்கப்படுவது நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து வகையான விசிட் விசாக்களும் விரைவில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சீராக்கல் போன்ற காரணங்களால் வணிக, சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அனுமதியுடன் சிறிய அளவிலான விசாக்கள் மட்டுமே சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தடையை நீக்குவதன் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எந்த வகையிலும் குவைத் வருகைக்கான வழியை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் மற்ற GCC நாடுகளின் தாராளமயக் கொள்கையை இந்த விஷயத்தில் பின்பற்றவும் குவைத் நாட்டின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் ஆதாயங்களை மேம்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு சமூக மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு விசிட்டிங் விசாக்களுக்கான கதவுகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.

அதேசமயம், மின்னணு இணைப்புத்துறையில் உள்துறை அமைச்சகம் செய்து சாதனை, டிஜிட்டல் வேலைகளுக்கான முன்னேற்றம் நாட்டுக்கு வருகின்ற பார்வையாளர்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல் என்பதை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் ஷேக் முகமது அல் சபா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டம் குடும்ப வருகை விசாக்களை தாராளமயமாக்கல் என்ற கண்ணோட்டதை நடைமுறை படுத்த காரணமாக அமைத்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | FamilyVisa | Kuwait Visit

Add your comments to Search results for Kuwait Visa

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to Search results for Kuwait Visa

Thursday, September 12, 2024

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் 20ம் நம்பர் விசா 18ம் நம்பருக்கு மாற்ற வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவிப்பு

Image : குவைத் வேலை வாய்ப்பு மைய‌ம்

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள்(Article-20) தங்களுடைய விசாவை தனியார்(Article-18) துறைக்கு மாற்றுவது தொடர்பான 2024 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்-6 இன்று(12/09/2024) வியாழக்கிழமையும் காலாவதியாகிறது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி(அதாவது இன்று வரையில்) ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இந்த கால அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல முதலாளிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரையில் விசா மாற்றம் பெற விண்ணப்பம் அளித்தவர்களின் பரிவர்த்தனைகள்(மனுக்கள்) பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏற்கனவே சுமார் ஐம்பதாயிரம் பேர் இந்த அறிவிப்பு மூலம் விசா மாற்றம் செய்து பயனடைந்துள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | Visit Visa

Add your comments to Search results for Kuwait Visa

Thursday, January 18, 2024

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்தி விசாவை சட்டபூர்வமாக்க அனுமதி

குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு குவைத் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது

Image credit: சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்கள்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்தி விசாவை சட்டபூர்வமாக்க அனுமதி

குவைத்தில் வேலைக்காக வந்து 2020க்கு முன்பு பல்வேறு காரணங்களால் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் குறிபிட்ட அபராதம் செலுத்தினால், குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குடியிருப்பு அனுமதி இல்லாமல் அல்லது குடியிருப்பு அனுமதியின் காலாவதி ஆகியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டை வீட்டு வெளியேற்ற வேண்டும் என்ற வரையறை செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை குவைத் தினசரி நாளிதழ் இன்று(18/01/24) வியாழக்கிழமை மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேதிப்படி இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 600 தினார் அபராதம் செலுத்தி. அந்த ரசீதுடன் வேலை செய்யப்பட்ட நிறுவனம் இருக்கிற கவர்னரேட்டில் உள்ள சம்பந்தப்பட்ட துறையை அணுகி போதுமான ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுடைய குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதன் மூலம் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு புதிய முடிவு பயனளிக்கும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Kuwait Residency | Visa Status

Add your comments to Search results for Kuwait Visa

Friday, January 26, 2024

குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

குவைத்தில் புதிய குடும்ப விசா நிபந்தனையில் இருந்து குறிப்பிட்ட சில பிரிவினருக்கு நிபந்தனை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளன

Image credit: குவைத் உள்துறை

குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

குவைத்தில் குடும்ப விசா பெற விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பள வரம்பு 800 தினார்கள் மற்றும், பல்கலைக்கழக பட்டம் போன்ற விதிமுறையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஆக்டிங் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகள் உடைய ஃபஹத் அல் யூசெப் அவர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் என்று குவைத்தின் தினசரி நாளிதழ் இன்று(26/01/24) சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. பின்வரும் பிரிவினருக்கு இந்தத் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  1. அரசுத் துறையில் வேலை செய்கின்ற ஆலோசகர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள் 
  2. மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள் 
  3. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள்
  4. பள்ளி முதல்வர்கள், அவர்களின் பிரதிநிதிகள், கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை துறையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் உட்பட அரசுத்துறையில் வேலை செய்கின்ற ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள் 
  5. நிதி ஆலோசகர்கள் 
  6. பொறியாளர்கள்
  7. இமாம்கள், போதகர்கள், மசூதிகளில் பாங்கு அழைப்பவர்கள், குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள்
  8. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வேலை செய்கின்ற நூலகர்கள்
  9. செவிலியர்கள், துணை மருத்துவர்கள், அதே துறையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் வேலை செய்பவர்கள், அத்துடன் சமூக சேவை வேலை செய்கின்ற அமைச்சகத்தின் கீழ் நர்சிங் துறையில் வேலை செய்கின்ற ஊழியர்கள் 
  10. அரசுத் துறையில் வேலை செய்கின்ற சமூகப் பணியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் 
  11. பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் நிருபர்கள்
  12. கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் 
  13. விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் 
  14. கல்லறை தோட்டங்களில் இறந்த உடல்களை பராமரிப்பவர்கள் மற்றும் தகனம் செய்பவர்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Family Visa | Kuwait Visa | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Visa

Thursday, January 21, 2021

குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படாது

குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படாது; இதுபோல் சில மதங்களுக்கு முன்பு 60-வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களின் விசா புதுப்பித்தல்

Image credit: Kuna Agency

குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படாது

குவைத்தில் வேலை செய்யும் 70-வயதான வெளிநாட்டினர் இகாமாவை(Work Permit) புதுப்பிக்கப்படாது என்று மனிதவள மேன்பாட்டுத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இளங்கலை கல்விக்கு தகுதி இருந்தாலும் 70-வயதுக்கு மேற்பட்டவர்களின் பணி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் சில மதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி மனிதவள ஆணையம் 60-வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களுக்கு,இந்த ஜனவரி 3 முதல் பணி அனுமதி பத்திரங்களை புதுப்பித்து வழங்கவில்லை.இதற்கிடைய நாட்டில் உள்ள 70 வயதுடையவர்களின் இகாமாவை புதுப்பிக்க வேண்டாம் என்ற புதிய முடிவை மனிதவள ஆணையம் எடுத்துள்ளது.

மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது அதற்குக் குறைவான கல்வித்தகுதி உள்ள வெளிநாட்டினருக்கு 60 வயதிற்குப் பிறகு பணி அனுமதி புதுப்பிக்க வேண்டாம் என்று கடந்த ஆகஸ்டில், மனிதவள ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் சில காரணங்களால் சிக்கியுள்ள நபர்களுக்கு மட்டும்,பதிலுக்கு அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காலகட்டத்தில், பட்டதாரி கல்வித்தகுதி பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிதான சிறப்பு அமர்வு கல்விக்கு தகுதி பெற்றிருந்தால் புதுப்பிக்கப்படும். மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் போன்ற நாட்டிற்கு தேவையான தகுதி வாய்ந்தவர்களுக்கு, வீட்டுவசதித் துறையின் கீழ் உள்ள செயலாளரின் சிறப்பு அனுமதியுடன் பணி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கலாம்.

Kuwait Indians | Kuwait Visa | Residency Renewal

Add your comments to Search results for Kuwait Visa

Tuesday, September 24, 2024

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது

Image : புதிய கட்டணம் வசூலிக்கப்பட்ட ரசீது

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

குவைத்துக்கான விசா ஸ்டாம்பிங் செயல்முறைக்கு முன்னால் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை கட்டணம் 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 4500 ஆக இருந்தது. புதிய கட்டணம் கடந்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. மேலும் கடந்த வாரம் முதல் மருத்துவ பரிசோதனை செய்தவர்களிடம் இருந்து புதிய கட்டணத்தின்படி தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றன.

குவைத் சட்டப்படி கட்டணத்தை உயர்த்தும் போது குவைத் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் கட்டாயம் என்பது விதிமுறை ஆகும். ஆனால் அமைச்சகம் அப்படியொரு புதிய கட்டண உயர்வு தொடர்பான முடிவை எடுத்ததாக தெரியவில்லை. குவைத்துக்கு விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு முன் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படும் 70 சதவீதம் பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பரவலான புகார்களும் நிலுவையில் உள்ளன.

இதில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள சில மருத்துவ பரிசோதனை மையங்கள் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு சட்டவிரோதமாக 35,000 முதல் 70,000 வரையில் வாங்கி கொண்டு மருத்துவ தகுதி சான்றிதழ்களை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படும் நபர்கள் முன்கூட்டி கட்டணம் செலுத்தினாலும், அதில் குறிப்பிட்ட சதவீதம் தொகையாவது திரும்ப வழங்கும் நடைமுறையும் பின்பற்றப்படுவது இல்லை, இதற்கிடையே இந்த மருத்துவ சோதனைக்கட்டணம் மீண்டும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகுறித்து குவைத்தில் உள்ள இந்திய அமைப்புகள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | New Fees

Add your comments to Search results for Kuwait Visa

Sunday, October 29, 2023

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் நாட்டிற்கு வெளியே உள்ள வீட்டு தொழிலாளர்(வீட்டுப் பணியாளர்கள்) பிரிவை சேர்ந்த அனைவரின் பணி அனுமதியையும் 3 மாதங்களுக்குப் பிறகு, ஸ்பான்சர் ரத்து செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

Image : துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் உள்துறை அமைச்சகம் இன்று(29/10/23) ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் நாட்டிலிருந்து வெளியேறிய வீட்டுப் பணியாளரின்(Article-20) குடியிருப்பு அனுமதியை(விசாவை) 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஸ்பான்சர்(குவைத்தி) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகின்ற நவம்பர்-5,2023 முதல் இது அமலுக்கு வரும் என்று முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் அஹ்மத் அல் சபாவை மேற்கோள்காட்டி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'SAHAL' செயலி மூலம் தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யலாம். அது முடியாவிட்டால், குடியிருப்பு விவகாரத் துறையின் அலுவலகம் ஒன்றுக்கு சென்று தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். விசா Validity உள்ள ஒரு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறி 6 மாதங்களுக்குப் பிறகு குவைத்தில் நுழையத் தவறினால், தொழிலாளியின் குடியிருப்பு அனுமதி தானாக(Automatically) முன்வந்து ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய உத்தரவு 6 மாத கால தாமதத்தை தவிர்க்க உதவும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதில் பிரச்சனை என்னவென்றால், பணம் கொடுத்து வெளியே விசா அடித்து சட்டவிரோதமாக(இப்படி செய்வது தொழில் சட்டவிரோதமான செயல்) ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் குவைத்தில் வேலை செய்து வருகி்ன்றனர். இந்த வகை விசா உள்ள நபர்கள் குவைத் விமான நிலையம் வழியாக தாயகம் செல்லும் போது சம்பந்தப்பட்ட ஸ்பான்சருக்கு(குவைத்திக்கு) குறுந்தகவல் போகும். புதிய உத்தரவை பயன்படுத்தி 90 நாட்களுக்குள் நீங்கள் திரும்பவில்லை என்றால் உங்கள் விசாவை ஸ்பான்சர் கேன்சல் செய்தால் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

எனவே இப்படிப்பட்ட நபர்கள் குவைத் திரும்பும் முன்னர் உங்கள் விசா Validity ஐ சோதனை செய்த பிறகு குவைத் திருப்புவது நல்லது. இல்லை என்றால் குவைத் விமான நிலையம் வரையில் வந்து குவைத்தில் நுழைய முடியாமல் மீண்டும் டிக்கெட் போட்டு தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்...இல்லை ஏற்படுகிறது. உங்களுக்கு இப்படி வெளியே விசா அடித்து தருகின்ற நபர்கள் இப்படி பலரை ஏமாற்றுகின்றனர். இதிலும் ஒருபடி மேலே சென்று உங்கள் மேல் வழக்கு பதிவும் செய்கின்றனர். அப்படிப்பட்ட நபர்கள் என்றால் கைது செய்து Finger வைத்தே அனுப்புவார்கள். பிறகு குவைத் வரவே முடியாது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Domestic Worker | Kuwait Visa | Visa Cancel

Add your comments to Search results for Kuwait Visa

Tuesday, December 13, 2022

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் பெற விண்ணப்பம் பெறப்படுகிறது

Image : செய்தி பதிவுக்காக மட்டுமே

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. குடும்ப விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதன் காரணமாக இப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் தாய்நாடுகளில் சிக்கிக்கொண்டனர். இப்படி குவைத்திற்கு வர முடியாமல் தவித்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் தினசரி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசா வழங்குவது மீண்டும் துவங்கியது முதல் விசாவுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருந்தாலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளின் குடிமக்களும் இந்த விசா வழங்குவதற்கான முடிவைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப விசாக்கள் வழங்குவதை கடந்த நவம்பர்-20,2022 முதல் மீண்டும் தொடங்க அமைச்சகம் முடிவு செய்தது.

அதே நேரத்தில் மனைவி,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகளுக்கான குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்குவது மீண்டும் தொடங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kuwait Visa | Indian Worker | Family Visa

Add your comments to Search results for Kuwait Visa

Tuesday, January 26, 2021

குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு, 18-ஆம் நம்பர் விசா நபர்கள் ஆன்லைன் வழியாக ஸ்பான்சர்ஷிப் மாற்றலாம்

குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு, 18-ஆம் நம்பர் விசா நபர்கள் ஆன்லைன் வழியாக ஸ்பான்சர்ஷிப் மாற்றலாம்;இன்று செவ்வாய்க்கிழமை(01/26/2021) முதல் துவக்குகிறது

குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு, 18-ஆம் நம்பர் விசா நபர்கள் ஆன்லைன் வழியாக ஸ்பான்சர்ஷிப் மாற்றலாம்

குவைத் தகவல் அமைப்புகளுக்கான பொது நிர்வாகம், ரெசிடென்சி விவகாரத்துறையின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன், உள்துறை அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தின் ஆன்லைன் சேவை மூலம் Article-18 க்கான(விசா நம்பர்-18) ஸ்பான்சர்ஷிப் மாற்றும் சேவையை இன்று செவ்வாய்க்கிழமை(01/26/2021) முதல் துவக்குகிறது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உறவுகள் துறை மற்றும் ஊடகங்களுக்கான பொது நிர்வாகம் துறை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக விண்ணப்பிக்கும் நபரின் நேரத்தையும், உழைப்பு, வழங்கப்படும் சேவையின் வேகத்தையும் மிச்சப்படுத்தும் வகையிலும்,உள்துறை அமைச்சக இணைய தளத்தின் வழியாக வழங்கும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான உள்துறை அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் என்று பொதுத்துறை கூறியது. தகவல் அமைப்புகளுக்காக பொது நிர்வாகம் மற்றும் ரெசிடென்சி விவகாரத் துறையின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் Article-18 க்கான(விசா நம்பர்-18) ஸ்பான்சர்ஷிப் பரிமாற்ற சேவையை, ஒரு ஸ்பான்சரிடமிருந்து, ஒரு தனியார் துறைக்கு வேலை மாற்றத்தை உள்துறை அமைச்சக வலைத்தளம் (www.moi.gov.kw) வழியாக ஒரு ஸ்பான்சருக்கு வழங்க முடியும் மற்றும் இந்த சேவை இன்று(01/26/2021) செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்றும் உள்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சக இணையதளத்தின் வழியாக தொடங்கப்பட்ட பல மின்னணு சேவைகளின் தொடர்ச்சியாக இந்த சேவையைத் தொடங்குவதாக நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. குடிமக்களுக்கும் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் சேவை செய்வதற்காக அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்படும் பல்வேறுபட்ட சேவைகளை எளிதாக்குவதும், எளிமைப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் அரசு சார்ந்த சம்பந்தப்பட்ட துறையின் சேவைகள் முழுவதும் தானியங்கி முறைக்கு மாற்றுவதன் முயற்சியாக ஜனவரி 1 முதல் 11 வரையில் தற்காலிக விசா சேவைகள் நிறுத்தி வைக்கபட்ட பின்னர், மீண்டும் ஜனவரி-12 முதல் விசா புதுப்பித்தல்,கேன்சல் உள்ளிட்ட பல சேவைகள் தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டதன் தொடர்சியாக நேற்று இரவு இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kuwait Visa | Article18 Visa | Moi Starting

Add your comments to Search results for Kuwait Visa

Sunday, August 25, 2019

குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா எடுக்க முடியும்....


குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா
எடுக்க முடியும்.....


கேள்வி:
குவைத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் கேள்வி நான்  மாதத்திற்கு 430 தினார் சம்பளம் வாங்கி வருகிறேன்... நான் வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்....??????

பதில்:

தற்போது( இன்று காலை) வரையில்  நடைமுறையில் உள்ள விசா சட்டத்தின் கீழ் நீங்கள் மனைவி மற்றும் குழந்தைக்கு ஒருமுறை விசா எடுத்து அவர்கள் குவைத்திற்கு வந்தால். அவர்கள்  எந்த தேதியில் கடைசியாக குவைத்திலிருந்து  தாயகம் திருப்புகிறார்களோ அந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அடுத்த சுற்றுலா விசா( Visit Visa) எடுக்க முடியும். ஆக ஒரு வருடத்தில்  இரண்டு முறை இந்த விசா எடுக்க முடியும்.

மேலும் ஒரு Youtube தளம் பதிவு செய்துள்ள வீடியோவில் சாதாரணமாக ஒருவர் சுற்றுலா விசாவில் குவைத்தில் வந்தால் 3 மாதங்கள் வரையில் குவைத்தில் தங்க முடியும் என்று பதிவு செய்துள்ளது பார்க்க முடிந்தது அது முற்றிலும் தவறானது. 1 மாதங்கள் மட்டுமே தங்க முடியும் இதுதான் சட்டம்.

கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைக்கு மட்டுமே 3 மாதங்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா எடுக்க முடியும், மற்ற இரத்த சொந்தங்கள் தனிப்பட்ட நபர் யார் வந்தாலும், அந்த விசாவின் காலாவதி 1 மாதம் மட்டுமே.

மேலும் வேலைக்காக வரும் நபர்களுக்கு வழங்கபடும் எந்தவொரு உள்நுழைவு விசாவும் 3 மாதங்கள் செல்லுபடியாகும் விதத்தில் இருக்கும். அந்த நபர் குவைத் வந்து இங்குள்ள மெடிக்கல் முடித்து  தகுதி சான்றிதழ்கள் பெற்ற பிறகு மட்டுமே நிரந்தர விசா அடிப்பார்கள்( அதுவும் கம்பெனிகளை பொறுத்து ஒரு வருடமோ(அல்லது)  இரண்டு வருடமோ அடிப்பார்கள்)

இதை தவிர குவைத்தில் உள்ள  கம்பெனிகள் சில  தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்.....
ShareAll......
Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Kuwait Visa

Wednesday, September 22, 2021

குவைத்தில் ஆன்லைன் வழியாக விசா ரத்து செய்யலாம் என்று மனித வளங்களுக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் ஆன்லைன் வழியாக பணி அனுமதியை(Work Permit) ரத்து செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Image : Kuwait Visa Copy

குவைத்தில் ஆன்லைன் வழியாக விசா ரத்து செய்யலாம் என்று மனித வளங்களுக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் இனிமுதல் Sponsor(முதலாளிகள்/அரபிகள்) தொழிலாளர்களின் பணி அனுமதியை(Work Permit) ஆன்லைன் வழியாக ரத்து செய்யலாம் எனவும், இந்த வசதி தற்போது நடைமுறையில் வந்துள்ளதாக மனித வளங்களுக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு எதிராக இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டால் ஸ்பான்சர் தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்வதற்கான வசதி ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது.

இதற்காக தொழிலாளி தொடர்பான தேவையான முக்கிய ஆவணங்களும் மற்றும் பிற ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், ஸ்பான்சர் Authority யை பார்வையிட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விசாவை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்துடன், 250 தினார்கள் நிதி உத்தரவாதத்தை ஆன்லைன் மூலம் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் தொகை முதலாளிக்குத் திருப்பித் தரப்படுமா என்பது குறித்த தெளிவான விளக்கம் அறிக்கையில் வெளியிடவில்லை.

Add your comments to Search results for Kuwait Visa

Tuesday, July 27, 2021

குவைத்துக்குள் ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டினர் நுழைய தேவையான நிபந்தனைகள் தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விரிவாக வெளியிட்டுள்ளது

குவைத்துக்குள் ஆகஸ்ட் 1 முதல் நுழையும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களுக்கான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது

Image : KuwaitCity

குவைத்துக்குள் ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டினர் நுழைய தேவையான நிபந்தனைகள் தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விரிவாக வெளியிட்டுள்ளது

குவைத்துக்குள் ஆகஸ்ட்-1,2021 முதல் நுழையும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களுக்கான நிபந்தனைகள் தொடர்பாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விரிவான வழிகாட்டுதல்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. குவைத்துக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்வருமாறு:

  1.  குவைத்திலிருந்து தடுப்பூசி போட்ட பிறகு நாட்டிலிருந்து வெளியே சென்று திரும்பி வருபவர்களின் Immune Application / Kuwait Mobile I'd யின் நிறம் பச்சை நிறமாக இருக்க வேண்டும்.
  2.  நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணிநேரத்திற்குள் செல்லுபடியாகும் விதத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சான்றிதழ் எடுத்துவர வேண்டும். கோவிட் நோய்தொற்று தொடர்பான எந்த அறிகுறியும் பயணியிடம் இருக்க கூடாது.
  3. குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர்(Pfizer), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா(Oxford-AstraZeneca), மாடர்னா(Moderna) தடுப்பூசி என்றால் இரண்டு டோஸ் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது ஜான்சன் & ஜான்சனின்(Johnson & Johnson) தடுப்பூசி என்றால், நீங்கள் ஒரு டோஸ் மட்டுமே எடுத்திருந்தாலும் போதுமானதாக இருக்கும் 
  4. தாயகத்தில் தடுப்பூசி 2 டோஸ் எடுத்தவர்கள்  QR-CODE உள்ள சான்றிதழை இந்திய சுகாதாரத்துறையின் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றிய பிற்கு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  5.   Shlonik Application மற்றும் Kuwait- Mosafer தளத்திலும் பயணிகள் தங்கள் தகவல்களை பதிவு(Register) செய்ய வேண்டும்.
  6.  நாட்டிற்கு  வந்து சேரும் பயணிகள் விமான நிலையத்தில்  பி. சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் தனிமைப்படுத்தலை முடிக்க விரும்புவோர் தங்கள் சொந்த செலவில் சில தினங்களுக்கு பிறகு பி.சி.ஆர்  பரிசோதனை செய்து முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால், தனிமைப்படுத்தலை முடிக்கலாம்.

கடந்த மாதம் 17-ஆம் தேதி வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட்-1,2021 முதல் நாட்டில் நுழைவதற்கு அனுமதி அளித்து அமைச்சரவையின் முடிவு வெளியாகியிருந்தது. ஆனால் இன்று(27/08/21) செவ்வாய்க்கிழமை இதுவரை வெளிநாட்டவர்கள் நேரடியாக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்களா....??? என்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவிவந்தது. இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புதிய முடிவின்படி, செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி(Validity Visa) உள்ள எவரும் மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் நேரடியாக நாட்டிற்குள் நுழையலாம். இருப்பினும், தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவு செய்தவர்களில் இந்தியர்கள் உட்பட பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர்களின் சான்றிதழ்களுக்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த பிரச்சனை தீர்க்கப்படும்போது மட்டுமே வெளிநாட்டினரின் வருகை முழுமையாக சாத்தியமாகும்.

Add your comments to Search results for Kuwait Visa

Thursday, August 19, 2021

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் குவைத்தில் நேரடியாக நுழைய முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தி நேற்று மாலையில் வெளியானது அனைவரும் அறிந்ததே

இந்தியாவில் இருந்து குவைத்தில் ஆகஸ்டு-22 முதல் நேரடி நுழைவு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,நிபந்தனைகள் பின்வருமாறு

Image : KuwaitCity

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் குவைத்தில் நேரடியாக நுழைய முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தி நேற்று மாலையில் வெளியானது அனைவரும் அறிந்ததே

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு நேரடி விமானங்களின் சேவைகள் ஆகஸ்ட்-22,2021 ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதிக்கப்படும் என்று நேற்று(18/08/21) புதன்கிழமை மாலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து குவைத்துக்கு நேரடியாக வருகின்ற பயணிகள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் நாட்டில் அனுமதிக்கப்படுவார்கள்.

  1. குவைத் சுகாதரத்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியின் 2 டோஸ் முடித்து 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும்
  2. குவைத் சுகாதாரத்துறையின் Immune Application-யில் பயணியின் நிலைமை பச்சையாக வைத்திருக்க வேண்டும்(Green Signal)
  3. உடன் எடுத்து வருகின்றன தடுப்பூசி சான்றிதழில் உள்ள பெயர் பொருந்தும் விதத்தில் பாஸ்போர்ட், தடுப்பூசியின் வகை, தடுப்பூசி டோஸ் எடுக்கும் தேதிகள், தடுப்பூசி போட்ட இடம், QR குறியீடு மின்னணு முறையில் சரிபார்ப்புக்கு விதத்தில் இருக்க வேண்டும்
  4. 72 மணி நேரத்திற்குள் செல்லுபடியாகும் விதத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சான்றிதழை பயணத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
  5. குவைத்தின் முசாபர் மற்றும் ஷிலோனக்  செயல்களிலும் பதிவு செய்ய வேண்டும்.
  6. தடுப்பூசி எடுத்துக்கொண்டு வருபவர்கள் குவைத் வந்த பிறகு ஒரு வார வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக் கொள்ள வேண்டும்.( 7 Days Home Quarantine)
  7.  மேலும் உங்கள் னிமைப்படுத்தலை முடிக்க விரும்பினால், குவைத்தில் நுழைந்த பிறகு  7 நாட்களுக்குள் ஒரு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். மேலும் அவர்கள் வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் தனிமைப்படுத்தலை முடித்து கொள்ள முடியும்.
  8. குவைத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஃபைசர்(Pfizer), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா(Oxford-AstraZeneca), மாடர்னா(Moderna) மற்றும் ஜான்சன் & ஜான்சனின்(Johnson & Johnson) ஆகியவை ஆகும். இதில் Oxford-AstraZeneca தான் இந்தியாவில் Covishield(கோவிஷீல்ட்) என்ற பெயரில் வழங்கபடுகிறது. எனவே இந்தியர்கள் குவைத் திரும்ப பிரச்சனை இல்லை, Covishield-க்கு குவைத் சுகாதரத்துறை சார்பில் அனுமதியும் வழங்கியுள்ளது. ஆனால் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி பூர்த்தி செய்த நபர்கள் அதற்கான சான்றிதழை குவைத் சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ள தளத்தில் பதிவு செய்து அதற்கு அனுமதி வழங்கினால் மட்டுமே Immune செயலியில் Green Signal ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அதன் பிறகு மட்டுமே பயணத்திற்காக Ticket உள்ளிட்டவை எடுங்கள். அதேபோல் முதல்கட்டமாக Validity Visa  உள்ள நபர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் பின்பற்றி குவைத்தில் நுழைய முடியும்.

இதற்கிடையே குவைத் அங்கிகாரம் வழங்காத Sinopharm, Sputnik உள்ளிட்ட பிற தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட நபர்கள் குவைத்தில் நுழைய முன்றாவது டோஸ் தடுப்பூசியாக குவைத் சுகாதரத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ள 4 தடுப்பூசிகளில் எதாவது ஒரு தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்ற தகவலும் நேற்றைய அறிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும் குவைத்தில் இருந்து தடுப்பூசி எடுத்து தாயகம் சென்ற நபர்கள் மீண்டும் குவைத் திரும்புகிற நேரத்தில் Immune செயலியில் Green Signal தெரிய வேண்டும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. குவைத் விமான நிலையம் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸின் Second wave மூலம் நோய்தொற்று அதிகரித்த நிலையில் இரண்டாவது முறையாக மூடப்பட்டது. தொடர்ந்து இந்த மாதம் ஆகஸ்ட்-1,2021 முதல் வெளிநாட்டினர் நாட்டில் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது என்றாலும், இந்தியா உட்பட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நுழைவதில் நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இந்நிலையில் அமைச்சரவையின் நேற்றைய புதிய முடிவு மூலம் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாக குவைத் திரும்புவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

Kuwait Airport | Return Kuwait | August 22

Add your comments to Search results for Kuwait Visa

Sunday, September 8, 2019

குவைத்தில் குடும்ப விசாவுக்கு(Dependent Visa)500 தினார் மாத சம்பளம் இருந்தாலும் சிலருக்கு குடும்ப விசா பெற முடியாது என்று செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் குடும்ப விசாவுக்கு(Dependent Visa)500 தினார் மாத சம்பளம் இருந்தாலும் சிலருக்கு குடும்ப விசா பெற முடியாது என்று செய்தி வெளியிட்டுள்ளது:


குவைத்தில் குடும்ப விசாவுக்கு 500 தினார் மாத சம்பளம் என்ற புதிய வரம்பை நிர்ணயித்து  உத்தரவை இரண்டு வாரங்களுக்கு முன்பு  குடியுரிமை துறை அமைச்சகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 500 தினார் மாத சம்பளம் இருந்தாலும் சிலருக்கு குடும்ப விசா பெற முடியாது என்று சம்மந்தப்பட்ட துறையை மேற்கொள் காட்டி புதிய செய்தியை குவைத்தின் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது. இந்த புதிய நிபந்தனை அடிப்படையில் Marginal Profession,s தொழிலாளர்கள் மாத சம்பளம் 500 தினார் இருந்தாலும் அவர்கள் குடும்ப விசா பெற முடியாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

குவைத்திலோ அல்லது பிற நாடுகளில் படிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தின் சம்மந்தப்பட்ட சான்றிதழ்கள் சமர்ப்பித்தால் அவர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்கபடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இதுபோல் 12 வயது கடந்த வெளிநாட்டினர் குழந்தைகளுக்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்கப்பட மாட்டாது என்று வெளியாகியுள்ள செய்தியும் ஆதாரம் அற்றவை என்றும் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் விசிட்டிங் விசா பெறுவதற்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 250 தினார்கள் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் 200 தினார்கள் மாத சம்பளம் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரை அழைத்துவர விசிட்டிங் விசா வழங்கபடுவதா...)) வேண்டாமா...?? என்பதை அந்த மாகாணத்தில் சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிட்டுள்ள விசிட்டிங் விசா காலாவதி மனைவி மற்றும் குழந்தைக்கு 3 மாதங்களுக்கும், பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு 1 மாதமும்  வழங்கபடும்.இது எந்த காரணத்திற்காகவும் நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி  உங்கள்

Reporting by: Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Kuwait Visa

Saturday, January 16, 2021

குவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் விசா புதுப்பிக்க கல்வித்தகுதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்


(Kuwait Manpower Authority Building)

குவைத்தில் உள்ள வெளிநாட்டினருக்கான பணி அனுமதிப்பத்திரங்களை(விசா) புதுப்பிப்பதற்கான கல்வித் தகுதிகளும் பரிசீலிக்கப்படுவதாக அல்-கபாஸ் தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான பணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான நிபந்தனையாக கல்வித் தகுதிகளின் முக்கியத்தத்தை,தொழிலாளர்களின் கல்வித் தகுதி குறித்த தேவையையும் மனிதவளத்திற்கான பொது ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கீகாரம் பெற்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆஷால் ஆன்லைன் செயலி மூலம் Sponsore(முதலாளிகள்) விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

அதே நேரத்தில் குவைத் உள்ள சொசைட்டி ஆஃப் இன்ஜினியரிங் துறையில் இருந்தோ அல்லது சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ உரிமம் அலுவலகத்தில் இருந்தோ அங்கீகாரச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிகளை நிரூபிக்க வேண்டிய இந்த புதிய உத்தரவில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட சான்றிதழ் பெறாத பிரிவுகளில் உள்ள நபர்களின் விசாகளை ஆஷால் ஆன்லைன் முறை மூலம் புதுப்பித்தல் செய்யும் நேரத்தில் தொழிலாளர்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்களில் எதாவது ஒரு நகலை Business செய்யும் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனம் நடத்தும் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visa Renewal | Sumited Certificates | Kuwait PAM

Add your comments to Search results for Kuwait Visa

Tuesday, November 26, 2019

குவைத்தில் ஓட்டுநர் உரிமம், இக்காமாவுடன்( Work Permit) இணைக்க முடிவு:

குவைத்தில் ஓட்டுநர் உரிமம், இக்காமாவுடன்( Work Permit) இணைக்க முடிவு; இக்காமா காலாவதி ஆனால் ஓட்டுநர் உரிமமும் தானாகவே ரத்தாகும் விதத்தில் மாற்றம் கொண்டுவர ஆலோசனை:



குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓட்டுநர் உரிமம், இக்காமாவுடன்( Work Permit) இணைக்கவும், இதன் மூலம் இக்காமா காலாவதி ஆனால் ஓட்டுநர் உரிமமும் தானாகவே ரத்தாகும் விதத்தில் மாற்றம் கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபோல் வெளிநாட்டு தொழிலாளர்களின்   ஓட்டுநர் உரிமங்களின் காலாவதி 5 வருடங்களாக நீடித்து வழங்கவும் ஆலோசனை நடைபெற்றது வருகிறது எனவும், ஆனால் இதற்கு இடையில் இக்காமாவுடன்( Work Permit) காலாவதி ஆனால் ஓட்டுநர் உரிமமும் தானாகவே ரத்தாகும் விதத்தில் மாற்றம் கொண்டுவரவும்  ஆலோசனை நடைபெற்றது வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுபோல் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் எதாவது நிலுவையில் இருந்தால், விசா புதுப்பித்தல்  நேரத்தில் அபராத தொகை செலுத்தினால் மட்டுமே விசா புதுப்பித்தல் செய்ய முடியும். ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பம் ஆன்லைன் மூலம் நடைமுறையில் வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த புதிய திட்டம் குறித்து போக்குவரத்து துறை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Note: இக்காமா, Work permit, Work Visa  என்பதன் பொருள் எல்லாம் ஒன்றுதான்.

Reporting by:Kuwait tamil pasanga Team Official

Add your comments to Search results for Kuwait Visa

Sunday, June 6, 2021

குவைத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்க சிவில் விமானப் போக்குவரத்து துறை பரிந்துரைகளை சமர்பித்துள்ளது

குவைத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்க சிவில் விமானப் போக்குவரத்து துறை பரிந்துரைகளை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : Kuwait Airport

குவைத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்க சிவில் விமானப் போக்குவரத்து துறை பரிந்துரைகளை சமர்பித்துள்ளது

குவைத்திற்கு திரும்பும் வெளிநாட்டினர் நாட்டில் அனுமதிப்பது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சமர்ப்பித்த பல்வேறு பரிந்துரை குறித்தும் அதன் சாத்தியக்கூறுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் சுகாதாரதுறை வரையறை செய்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்த வெளிநாட்டினரின் வருகைக்கு அனுமதி வழங்குவதற்கான ஒதுக்கீட்டை ஏற்படுத்தவும்,விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போதைய 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தவும், குவைத் சுகாதரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்ற மற்றும் செல்லுபடியாகும் குடியிருப்பு(Validity Visa) கொண்ட வெளிநாட்டவர்களை மட்டுமே அனுமதித்தல் போன்ற பரிந்துரைகள் முக்கியமானவை ஆகும்.

மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி முடித்தவர்களுக்கு, நாட்டில் நுழைந்து மூன்றாவது நாள் எடுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், முதல் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்ற பிறகு நாட்டில் வருபவர்களுக்கு ஒரு வாரம் நிறுவன தனிமைப்படுத்தலும்(Institutional Quarantine) மற்றும் இரண்டாவது வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் போன்றவையும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. அதுபோல் தடுப்பூசி போடாதவர்களை எதிர்காலத்தில் நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

Add your comments to Search results for Kuwait Visa