குவைத்தில் விசா ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது
Image : குவைத் அமீர்
குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை
இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவியான இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை(வாழ்நாள் முழுவதும் சிறை) பெற்று குவைத்தில் சிறையில் இருந்தார். குவைத் அமீரின் கருணையால், ராஜராஜன் என்ற அந்த இளைஞர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, ராஜராஜன் நாடு திரும்ப உள்ளார். கடந்த அக்டோபர்-26,2016 அன்று,ஒரு முகவர் மூலம் ராஜராஜன் குவைத்தில் வேலைக்காக வந்தார்.
இது ராஜராஜனின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஆனால் குவைத்துக்கு வந்த அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராஜராஜன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, குவைத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் வரை அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இந்தியா, தமிழ்நாடு, திருச்சி ஸ்ரீரங்கம் அயிலப்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜராஜன்.
தனது நண்பர் அப்துல்லா மூலம், குமரேசன் என்ற முகவர் வழியாக, ராஜராஜன் குவைத்துக்கு காதீம்(வீட்டு வேலை) விசாவை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-22, 2016 அன்று, குமரேசனுடன் குவைத் வருவதற்காக சென்னை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாள் குமரேசன் ராஜராஜனின் உடைமைகள் இருந்த பைகளுக்குப் பதிலாக புதிய பெட்டியில் பொருட்கள் நிரப்பப்பட்டு, அத்துடன் கைப்பையையும் வழங்கினார். இதுகுறித்து ராஜராஜன் சந்தேகம் தெரிவித்தபோது,பழைய பெட்டி மோசமாக இருக்கிறது, வெளிநாடு செல்கிறாயே எனவே புதிய பெட்டியை கொடுத்ததாக குமரேசன் பதிலளித்தார். இதை தொடர்ந்து கைப்பையைத் திறந்து பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டைக் காட்டினார்.
இதை தொடர்ந்து குமரேசன் ராஜராஜன் பொருட்கள் இருந்த பையில் ராஜராஜனின் உடைமைகள் தான் இருக்கிறது என்பதை லக்கேஜ் பையை திறந்து காட்ட தயாராக இருக்கவில்லை, இதற்க்கு அவர் கூறிய காரணம் விமானம் புறப்பட நேரமாகி விட்டதால் லக்கேஜ் பையைத் திறக்க நேரமில்லை என்று ராஜராஜனிடம் கூறினார். அன்று மாலையே ராஜராஜன் சென்னையில் இருந்து குவைத் திரும்பினார். மறுநாள் குவைத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜராஜன் பெட்டியில் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் நாட்டில் தான் கைது செய்யப்பட்டது தெரிந்தது. ராஜராஜனுக்கு என்ன நடந்தது என்றோ, எதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்தார்கள் என்றோ புரியவில்லை. ராஜராஜனுக்கு விஷயங்கள் புரிய இரண்டு வாரங்கள் ஆனது. உடனே நாட்டில் உள்ள தன்னுடைய ஒரே தங்கையான அன்பரசியை அழைத்து தன் நிலையை விளக்கினார். குமரேசன் வீட்டிற்கு சென்றாள் ஆனால் அது பூட்டியிருந்தது. அவரது மாமா பழனியின் வீட்டிற்குமு தேடி சென்றார் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு குமரேசன் தான் காரணம் எனக் கூறி, நண்பர் அப்துல்லாவும் கைவிரித்தார்.ராஜராஜனின் சகோதரி அன்பரசி சென்னையில் உள்ள வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளையை அணுகினார். அவர்களின் ஒத்துழைப்புடன், தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரின் விடுதலைக்காக குவைத் மனித உரிமைச் சங்கத்திடம் அவர் முறையிட்டார்.
தமிழக அரசின் துணைச் செயலாளர் செந்தில் குமார், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். குவைத்துக்கான அப்போதைய இந்திய தூதர் ஜீவா சாகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதன்மை செயலாளரும், சமூக நலத்துறை அதிகாரியுமான பி.பி.நாராயணனுக்கு உத்தரவிட்டார். பி.பி.நாராயணன் குவைத் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய குவைத் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ராஜராஜன் நிரபராதி என நம்ப வைக்க தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பலனாக, 2017ல், சிறைக் கைதிகளுக்கு அமீர் வழங்கிய தளர்வு பட்டியலில், ராஜராஜனும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆயுள் தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்
மேலும் ராஜராஜன் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை அறிக்கைகளும், அவரது தண்டனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுத்தன.தற்போது அவரை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூதரகத்திலிருந்து அவுட்பாஸும் வழங்கப்பட்டது. கடந்த நாள், ராஜராஜன் நாட்டு கடத்தல் மையத்தில் இருந்து தனது சகோதரிக்கு போன் செய்து தான் வீடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவித்தார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்,எட்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு குவைத் அமீரின் தயவில் ராஜராஜன் விரைவில் அடுத்த சில தினங்களில் தாயகம் திரும்புவார்.
குவைத்தில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிக்கு தண்டனைகள் பின்வருமாறு வழங்கபடும். இதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு அதிகபட்ச தண்டனையை குவைத் நீதித்துறை வழங்குகிறது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை(வாழ்க்கையின் இறுதி வரை சிறையில்) , மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கபடுகிறது. இந்த பட்டியலில் உள்ள வழக்கில் தான் சேர்க்கப்பட்டார் ராஜராஜனும். மேலும், போதை மருந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.
ராஜராஜனை சிக்கவைத்த இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முகவர் மீது எந்த வழக்கும் இல்லை, அதேபோல் முக்கிய குற்றவாளியான குமரேசன், அப்துல்லா மீதும் எந்த வழக்கு இல்லை. அண்ணனை பொய் வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அன்பரசி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிக செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குவைத் மனித உரிமைகள் சங்கத்தின் உறுப்பினரான ஆல்வின் ஜோஸ், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆன்லைனில் புகார் செய்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் இவர்கள் மீது இதுவரை எடுக்கப்படவில்லை. பிறகு எப்படி ஊரில் உள்ள இதுபோன்ற போலியான ஏஜென்சிகளை நடத்தும் நபர்களுக்கு எப்படி பயம் வரும். இப்படி சிக்க வைக்கின்ற தாயகத்தில் உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதமான மனசாட்சியற்ற செயல்கள் ஓரளவாவது குறையும்.
ஒருவருக்கு மரணதண்டனை வரையில் கிடைக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்கின்ற நபர்களுக்கும் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கு வளைகுடா நாடுகளில் வழங்குகின்ற அதே தண்டனையை தாயகத்தில் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரதும் வேண்டுகோளாக உள்ளளது. இதுபோன்ற வழக்குகளில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அப்பாவிகளான தன்னுடைய உடன் பிறப்புகளை சட்டபடி மீட்க புகார்களுடன் பலர் அணுகுகிறார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுப்பதில்லை, இது வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடு செல்பவர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதை மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Minister |
Kuwait Emir |
Indian Worker
Add your comments to Search results for Indian Worker