BREAKING NEWS
latest

Kuwait Minister - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Minister செய்திகள், கட்டுரைகள், Kuwait Minister புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, September 17, 2024

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்தனர் நாட்டின் சட்டங்களுக்கு அனைவரும் சமமே

Image : அமீர், இளவரசர் மற்றும் பிரதமர்

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

குவைத் நாட்டின் சட்டங்கள் மற்றும் இறையாண்மை மேல் யாரும் பெரியவர்கள் இல்லை என்ற செய்தி ஒருமுறை கூட அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா நாட்டு மக்களுக்கு காட்டும் விதமாக நாட்டின் அனைத்து குடிமக்களும் பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று சட்டத்தின்படி இன்று பயான் அரண்மனையில் துணைப் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல் யூசுப் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் பயோமெட்ரிக் கைரேகை செயல்முறையை முடித்தார்.

இதேபோல் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் மற்றும் நாட்டின் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா அவர்களும் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை பயான் அரண்மனையில் வைத்து முடித்தனர்.

மேலும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இம்மாதம் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்கவும் மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நாட்டில் வசிக்கின்ற வெளிநாட்டினர் அனைவரும் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Kuwait Update

Add your comments to Search results for Kuwait Minister

Sunday, November 10, 2024

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது

Image credit:இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தின் புகைப்படம்

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெண்கலயுகத்தில் தில்முன் கலாச்சாரத்திற்கு முந்தைய காலத்தில் அங்கிருந்ததாக நம்பப்படும் ஒரு கோவிலின் எச்சங்களை குவைத்தின் ஃபைலாகா தீவு பகுதியிலிருந்து டேனிஷ் தொல்பொருள் ஆய்வுக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

அரேபிய வளைகுடாவில், முக்கியமான கலாச்சார, வர்த்தகம் மற்றும் சமூக பாரம்பரியத்தை புதிய கண்டுபிடிப்பு எடுத்துக்காட்டுகிறது. குவைத் தேசிய கலாச்சார, கலை மற்றும் இலக்கிய கவுன்சிலின்(என்.சி.சி.ஏ.எல்) உதவி பொதுச்செயலாளர் முஹம்மது பின் ரேடா ஒரு செய்திக்குறிப்பில் நேற்று(09/11/2024) சனிக்கிழமை மாலையில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

ஃபைலாகா தீவில் அமைந்துள்ள பழமையான அரண்மனையின் கிழக்குப்பகுதியில் நடத்திய தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த கோயிலின் எச்சங்கள்(சிதைந்த பாகங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. முன்னதாக, மற்றொரு கோவிலின் எச்சங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்முன் என்பது கிருஸ்துவுக்கு முன்பு(கிமு)3 மில்லினியத்தில் இருந்து கிழக்கு அரேபியாவில் பண்டைய செமிடிக் மொழி பேசும் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

அவர்களின் மதம் மற்றும் பாரம்பரியமான பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதில் புதிய கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குணாவும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait News | Kuwait Temple

Add your comments to Search results for Kuwait Minister

Tuesday, November 12, 2024

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

குவைத்தில் விசா ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது

Image : குவைத் அமீர்

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவியான இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை(வாழ்நாள் முழுவதும் சிறை) பெற்று குவைத்தில் சிறையில் இருந்தார். குவைத் அமீரின் கருணையால், ராஜராஜன் என்ற அந்த இளைஞர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, ராஜராஜன் நாடு திரும்ப உள்ளார். கடந்த அக்டோபர்-26,2016 அன்று,ஒரு முகவர் மூலம் ராஜராஜன் குவைத்தில் வேலைக்காக வந்தார்.

இது ராஜராஜனின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஆனால் குவைத்துக்கு வந்த அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராஜராஜன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, குவைத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் வரை அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இந்தியா, தமிழ்நாடு, திருச்சி ஸ்ரீரங்கம் அயிலப்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜராஜன்.

தனது நண்பர் அப்துல்லா மூலம், குமரேசன் என்ற முகவர் வழியாக, ராஜராஜன் குவைத்துக்கு காதீம்(வீட்டு வேலை) விசாவை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-22, 2016 அன்று, குமரேசனுடன் குவைத் வருவதற்காக சென்னை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாள் குமரேசன் ராஜராஜனின் உடைமைகள் இருந்த பைகளுக்குப் பதிலாக புதிய பெட்டியில் பொருட்கள் நிரப்பப்பட்டு, அத்துடன் கைப்பையையும் வழங்கினார். இதுகுறித்து ராஜராஜன் சந்தேகம் தெரிவித்தபோது,பழைய பெட்டி மோசமாக இருக்கிறது, வெளிநாடு செல்கிறாயே எனவே புதிய பெட்டியை கொடுத்ததாக குமரேசன் பதிலளித்தார். இதை தொடர்ந்து கைப்பையைத் திறந்து பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டைக் காட்டினார்.

இதை தொடர்ந்து குமரேசன் ராஜராஜன் பொருட்கள் இருந்த பையில் ராஜராஜனின் உடைமைகள் தான் இருக்கிறது என்பதை லக்கேஜ் பையை திறந்து காட்ட தயாராக இருக்கவில்லை, இதற்க்கு அவர் கூறிய காரணம் விமானம் புறப்பட நேரமாகி விட்டதால் லக்கேஜ் பையைத் திறக்க நேரமில்லை என்று ராஜராஜனிடம் கூறினார். அன்று மாலையே ராஜராஜன் சென்னையில் இருந்து குவைத் திரும்பினார். மறுநாள் குவைத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜராஜன் பெட்டியில் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் நாட்டில் தான் கைது செய்யப்பட்டது தெரிந்தது. ராஜராஜனுக்கு என்ன நடந்தது என்றோ, எதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்தார்கள் என்றோ புரியவில்லை. ராஜராஜனுக்கு விஷயங்கள் புரிய இரண்டு வாரங்கள் ஆனது. உடனே நாட்டில் உள்ள தன்னுடைய ஒரே தங்கையான அன்பரசியை அழைத்து தன் நிலையை விளக்கினார். குமரேசன் வீட்டிற்கு சென்றாள் ஆனால் அது பூட்டியிருந்தது. அவரது மாமா பழனியின் வீட்டிற்குமு தேடி சென்றார் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு குமரேசன் தான் காரணம் எனக் கூறி, நண்பர் அப்துல்லாவும் கைவிரித்தார்.ராஜராஜனின் சகோதரி அன்பரசி சென்னையில் உள்ள வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளையை அணுகினார். அவர்களின் ஒத்துழைப்புடன், தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரின் விடுதலைக்காக குவைத் மனித உரிமைச் சங்கத்திடம் அவர் முறையிட்டார்.

தமிழக அரசின் துணைச் செயலாளர் செந்தில் குமார், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். குவைத்துக்கான அப்போதைய இந்திய தூதர் ஜீவா சாகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதன்மை செயலாளரும், சமூக நலத்துறை அதிகாரியுமான பி.பி.நாராயணனுக்கு உத்தரவிட்டார். பி.பி.நாராயணன் குவைத் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய குவைத் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ராஜராஜன் நிரபராதி என நம்ப வைக்க தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பலனாக, 2017ல், சிறைக் கைதிகளுக்கு அமீர் வழங்கிய தளர்வு பட்டியலில், ராஜராஜனும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆயுள் தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்

மேலும் ராஜராஜன் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை அறிக்கைகளும், அவரது தண்டனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுத்தன.தற்போது அவரை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூதரகத்திலிருந்து அவுட்பாஸும் வழங்கப்பட்டது. கடந்த நாள், ராஜராஜன் நாட்டு கடத்தல் மையத்தில் இருந்து தனது சகோதரிக்கு போன் செய்து தான் வீடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவித்தார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்,எட்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு குவைத் அமீரின் தயவில் ராஜராஜன் விரைவில் அடுத்த சில தினங்களில் தாயகம் திரும்புவார்.

குவைத்தில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிக்கு தண்டனைகள் பின்வருமாறு வழங்கபடும். இதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு அதிகபட்ச தண்டனையை குவைத் நீதித்துறை வழங்குகிறது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை(வாழ்க்கையின் இறுதி வரை சிறையில்) , மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கபடுகிறது. இந்த பட்டியலில் உள்ள வழக்கில் தான் சேர்க்கப்பட்டார் ராஜராஜனும். மேலும், போதை மருந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ராஜராஜனை சிக்கவைத்த இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முகவர் மீது எந்த வழக்கும் இல்லை, அதேபோல் முக்கிய குற்றவாளியான குமரேசன், அப்துல்லா மீதும் எந்த வழக்கு இல்லை. அண்ணனை பொய் வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அன்பரசி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிக செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குவைத் மனித உரிமைகள் சங்கத்தின் உறுப்பினரான ஆல்வின் ஜோஸ், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆன்லைனில் புகார் செய்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் இவர்கள் மீது இதுவரை எடுக்கப்படவில்லை. பிறகு எப்படி ஊரில் உள்ள இதுபோன்ற போலியான ஏஜென்சிகளை நடத்தும் நபர்களுக்கு எப்படி பயம் வரும். இப்படி சிக்க வைக்கின்ற தாயகத்தில் உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதமான மனசாட்சியற்ற செயல்கள் ஓரளவாவது குறையும்.

ஒருவருக்கு மரணதண்டனை வரையில் கிடைக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்கின்ற நபர்களுக்கும் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கு வ‌ளைகுடா நாடுகளில் வழங்குகின்ற அதே தண்டனையை தாயகத்தில் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரதும் வேண்டுகோளாக உள்ளளது. இதுபோன்ற வழக்குகளில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அப்பாவிகளான தன்னுடைய உடன் பிறப்புகளை சட்டபடி மீட்க புகார்களுடன் பலர் அணுகுகிறார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுப்பதில்லை, இது வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடு செல்பவர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதை மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait Emir | Indian Worker

Add your comments to Search results for Kuwait Minister

Wednesday, October 4, 2023

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத் துணைப் பிரதமரின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் 34 இந்தியர்கள் உட்பட 60 செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்ட நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள்

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத்தில் கடந்த 23 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட 34 இந்தியர்கள் உட்பட 60 சுகாதாரப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, இன்று(04/10/23) புதன்கிழமை பிற்பகல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த செவிலியர்களின் உறவினர்கள் தங்களது சிறு குழந்தைகளுடன் நேற்று இரவு உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அமைச்சரின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து இன்று பர்வானியா குடியிருப்புத்துறை அமைச்சகத்தில் 60 பேரின் குடும்பத்தினர் ஆவணங்களுடன் விடுவிப்பதற்கான நடைமுறைகளை முடிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் தலையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவர்கள் கைதானத்திற்கான காரணம் பின்வருமாறு:

குவைத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் மருத்துவமனை சார்ந்த சில ஆவணங்கள் சட்டப்படி இல்லை என்று 34 இந்தியர்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் பிலிப்பைன்ஸ், ஈரான் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் கடந்த 3 முதல் 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஈரானிய குடிமகன் ஒருவரின் உரிமையின் கீழ் பல ஆண்டுகளாக மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் உறவினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களும் இந்த நிறுவனத்தில் சட்டப்படி பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் Sponsorship யில் சட்டப்படி தான் வேலை செய்து வந்தனர்.

இந்த செவிலியர்களில் 5 பேர் பாலூட்டும் தாய்மார்கள்.இதில், இந்திய கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஆன குழந்தை இருந்தது. மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அப்பாசியாவில் உள்ள குடியிருப்பில் கணவர் பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால், குழந்தைகளுக்கு சிறையில் கொண்டு சென்று தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை குவைத் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் பல குழந்தைகளுக்கு தாயிடமிருந்து உண்மையான கவனிப்பு கிடைக்காத காரணத்தால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் மனிதாபிமான அடிப்படையிலான தலையீடு மூலம் அனைவரும் விடுதலை ஆகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Kuwait MOH | Kuwait Minister

Add your comments to Search results for Kuwait Minister

Saturday, September 14, 2024

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,அரசர் குடும்பத்தினருமான ஷேக் ஜாபர் அல்-முபாரக் இன்று காலமானார்

Image : மறைந்த ஷேக் ஜாபர் அல்-முபாரக்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று(14/09/2024) சனிக்கிழமை தன்னுடைய 82-வது வயதில் காலமானார். கடந்த நவம்பர்-28,2011 முதல் 2019 வரை 8 ஆண்டுகள் குவைத்தின் பிரதமராக இருந்த அவர், ஜனவரி-4,1942 இல் பிறந்தார்.

1968 முதல் அமிரி திவானில் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களின் கண்காணிப்பாளர் நிர்வாக இயக்குனர் பதவிகள் வகித்த அவர். மார்ச் 1979 இல் நாட்டின் Hawally ஆளுநராக நியமிக்கப்பட்டார், தொடர்ந்து Ahamdi அஹ்மதி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சமூக விவகாரங்கள், தொழிலாளர் துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

பிப்ரவரி-14,2001அன்று ஷேக் ஜாபர் அல்-முபாரக் துணைப் பிரதமரும்,பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி-9,2006 அன்று முதல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அத்துடன் உள்துறை, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளையும் கவனித்து வந்தார். 2019ல் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Death Update

Add your comments to Search results for Kuwait Minister

Saturday, May 25, 2019

குவைத்தில் மாரடைப்பு சம்மந்தப்பட்ட அவசரகால சிகிச்சைக்கு கட்டண சலுகை சுகாதார துறை அமைச்சர் தகவல்:


குவைத்தில் மாரடைப்பு சம்மந்தப்பட்ட அவசரகால சிகிச்சைக்கு கட்டண சலுகை சுகாதார துறை அமைச்சர் தகவல்:
            
    குவைத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனை கட்டணங்களை முக்கிய மருத்துவமனைகளில் 2 தினார் கட்டணம் 5 தினாராக அதிகரித்த நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தது, இதுபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 தினார் கட்டணம் 2 தினாராக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Health Minister Sheikh Dr. Bassil Al-Sabah 

          இந்நிலையில் குவைத் சுகாதா துறை அமைச்சர்(Health Minister) Sheikh Dr. Bassil Al-Sabah அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத்திகள் அல்லாத வெளிநாட்டினர் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சினையால் அவசரகால நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவ கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
             இந்த சலுகை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவமனை தலைமை அதிகாரி ஆகியோர் அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்.அனைத்து துறையிலும் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
      வீட்டுத் தொழிலாளர் உள்ளிட்ட 10 ற்கும் மேற்பட்ட பிரிவு தொழிலாளர்களுக்கு சுகாதார துறை முன்னரே மருத்துவ கட்டண சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னர் சுகாதாரத் துறை ஊழியர்கள்,12 வயதிற்கு கீழ் உள்ள கேன்சர் நோயாளிகள், பாதுகாப்பு மையங்கள் மற்றும் சமூக நலத் துறை அமைப்புக்கள் விடுதியில் தங்கவைக்கபட்ட நபர்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட பிரிவுகளில் சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Report by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Kuwait Minister

Friday, May 24, 2019

குவைத் மன்னர் அவர்கள் இந்தியாவில் பாஜக கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:


குவைத் மன்னர் அவர்கள் இந்தியாவில் மீண்டும் பாஜக கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:


       இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) மீண்டும் வெற்றி பெற்றதற்கு குவைத் மன்னர் Sheikh Sabah Al-Ahmad Al-Jaber  அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்ற செய்தியை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தளம் குணா வெளியிட்டுள்ளது.


Amir Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah & India Prime Minister Narendra Modi

மன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா மற்றும் குவைத் நாடுகளுக்கிடையேயான உறவில் நெருக்கம் அதிகரிக்கும் என்று நம்புவதாக
அமீர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



         இதுபோல் குவைத் இளவரசர் பட்டத்து இளவரசர் Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah மற்றும்


    His Highness the Crown Prince Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah
 குவைத் பிரதமர் Sheikh Jaber Al-Mubarak Al-Hamad Al-Sabah ஆகியோரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  His Highness the Prime Minister Sheikh Jaber Al-Mubarak Al-Hamad Al-Sabah

Report by Kuwait tamil pasanga team




Add your comments to Search results for Kuwait Minister

Friday, January 15, 2021

குவைத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்கள் மீண்டும், நாட்டில் நுழையும் பொது இந்த சலுகைகள் வழங்கப்படும்


(Kuwait heath Minister)

குவைத்திலிருந்து கொரோனா தடுப்பூசி எடுக்கொண்ட ஒருவர் மீண்டும் குவைத்தில் நுழையும் போது, மற்ற பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் சான்றிதழ் சமர்பித்தல் மற்றும் இரண்டு வார தனிமைப்படுத்தலில் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இது ஜூன் முதல் மட்டுமே சாத்தியமாகும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆனால் கோவிட் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து பெற்று நாட்டிற்குள்(குவைத்திற்குள்) வருபவர்களுக்கு இப்போதைக்கு இந்த நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படாது. தற்போது, ​​குவைத் உட்பட பல நாடுகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தடுப்பூசி எடுத்ததற்காக சான்றிதழ்களை வழங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசிய எடுக்கொண்ட சான்றிதழ் பெற்றிருந்தாலும், அதை பயன்படுத்திய மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு,பிற நாடுகளிலிருந்து தடுப்பூசி சான்றிதழ்களுடன் நாட்டிற்குள் வருபவர்களுக்கு பி.சி.ஆர் சான்றிதழ் சமர்பித்தல் மற்றும் இரண்டு வார தனிமைப்படுத்தலில் ஆகியவற்றில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி எடுக்கொண்ட சான்றிதழ்கள் மோசடி செய்யப்படுவதைத் தடுக்க உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.மேலும் தடுப்பூசிக்கு அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஒப்புதல் அளிக்க உலகளாவிய மின்னணு சான்றிதழ் வழங்கும் அமைப்பு தேவை. இதுபோல் சான்றிதழின் உண்மை தன்மையினை சரிபார்க்க அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் விதத்தில் பொதுவான மின்னணு தளம்  ஒன்றும் தேவையாக உள்ளது. இவை அனைத்தும் நடைமுறையில் வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத் அரசு சார்பில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடித்து, கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட டோஸ்  தடுப்பூசி மருந்து எடுத்துக்கொண்ட நபர்களுக்கு நேற்று முதல் மின்னணு சான்றிதழ்களை வழங்கும் பயணிகள் தொடங்கியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் அறிவித்தார்.

Add your comments to Search results for Kuwait Minister