BREAKING NEWS
latest

Kuwait MOH - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait MOH செய்திகள், கட்டுரைகள், Kuwait MOH புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, September 16, 2024

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் தின்னர் குடித்த வெளிநாட்டவரான தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image: Kuwait Police

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தின் ஜஹ்ரா மருத்துவமனையில் தற்செயலாக பெயின்ட் தின்னரை குடித்ததாக வெளிநாட்டவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருடன் வந்த வெளிநாட்டவரான நபர் கூற்றுப்படி இந்த சம்பவம் குவைத்தின் முட்டலா குடியிருப்பு பகுதி, N7, பிளாக் 3-இல் நடந்ததாக கூறினார். இது தற்செயலாக நடந்ததா இல்லை தற்கொலை முயற்சியா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆனால் தொழிலாளி எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நபிதின விடுமுறை நாளான நேற்று(15/09/24) ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to Search results for Kuwait MOH

Thursday, January 21, 2021

குவைத்தில் கொரோனா போராட்டத்தில் மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவைதி உயிழந்தார்

குவைத்தில் கொரோனா போராட்டத்தில் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவதி உயிழந்தார் என்று சுகாதரத்துறை....

Image credit:Official Soure

குவைத்தில் கொரோனா போராட்டத்தில் மருத்துவ பெண்மணி ஆயிஷா-அல்-அவதி உயிழந்தார்

குவைத் அல்-சலாம் சுகாதார மையத்தின் மருத்துவரான ஆயிஷா அல்-அவைதியை கொரோனா வைரஸ் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நாட்டில் COVID-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரதுறை ஊழியர்களின் தியாகங்கள் தொடர்கின்றன. குவைத் சுகாதரத்துறையில் வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த பலரும் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டியது கடமையாகும்.

டாக்டர் அல்-அவைதி சுகாதார மையத்தில் பொதுமக்களை பரிசோதிப்பதில் முன் வரிசையில் பணிபுரிந்தபோது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.அவர் நோய்தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பின்னர்,ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா தொற்றுநோயை முன் வரிசையில் எதிர்கொண்டு வருகின்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார். இதையடுத்து பல்வேறு செய்தி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக குவைத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் டாக்டர்.அல்-அவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kuwait Moh | Kuwait Doctor | Kuwait Covid19

Add your comments to Search results for Kuwait MOH

Tuesday, December 20, 2022

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு கண்டனம் எழுந்துள்ளது:

வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குவைத் மனித உரிமை ஆணையம்

Image : கண்டனம்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு கண்டனம் எழுந்துள்ளது:

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்துள்ளது. குடியுரிமை பெறாதவர்களின் குடியிருப்பு ஆவணத்தைப் புதுப்பிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் சிறப்பு மருந்து கட்டணம் வசூலிக்க முடிவு அனுமதிக்க முடியாது என்று குவைத் தேசிய மனித உரிமைக் குழுவின் உறுப்பினரும் ஆலோசகருமான ஹம்தான் அல் நிம்ஷான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கும். புதிய கட்டணத்தை செலுத்த முடியாத வெளிநாட்டு தொழிலாளிகள் நோய் வாய்ப்பாட்டு வேதனையையும் அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். முற்றிலும் மனித உரிமை மீறலான இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றார.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுகாதார‌த்துறை அமைச்சர் டாக்டர். அகமது அல் அவாடி புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது சுகாதார நிலையங்களிலும், பாலிகிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் வெளிநாட்டவர்களுக்கு 5 தினார்களும், வெளிநோயாளர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுபவர்கள் மருந்து கட்டணமாக 10 தினார்களும் செலுத்த வேண்டும். பொது சுகாதார நிலையங்களில் தற்போது 2 தினார்கள் வெளிநோயாளிளுக்கு வசூலிக்கப்படுகிறது கிளினிக்குகளில் வசூலிக்கப்படும் 10 தினார்களுக்கு கூடுதலாக மருந்துக்கான இந்த புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to Search results for Kuwait MOH

Wednesday, October 4, 2023

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத் துணைப் பிரதமரின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் 34 இந்தியர்கள் உட்பட 60 செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்ட நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள்

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத்தில் கடந்த 23 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட 34 இந்தியர்கள் உட்பட 60 சுகாதாரப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, இன்று(04/10/23) புதன்கிழமை பிற்பகல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த செவிலியர்களின் உறவினர்கள் தங்களது சிறு குழந்தைகளுடன் நேற்று இரவு உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அமைச்சரின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து இன்று பர்வானியா குடியிருப்புத்துறை அமைச்சகத்தில் 60 பேரின் குடும்பத்தினர் ஆவணங்களுடன் விடுவிப்பதற்கான நடைமுறைகளை முடிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் தலையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவர்கள் கைதானத்திற்கான காரணம் பின்வருமாறு:

குவைத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் மருத்துவமனை சார்ந்த சில ஆவணங்கள் சட்டப்படி இல்லை என்று 34 இந்தியர்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் பிலிப்பைன்ஸ், ஈரான் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் கடந்த 3 முதல் 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஈரானிய குடிமகன் ஒருவரின் உரிமையின் கீழ் பல ஆண்டுகளாக மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் உறவினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களும் இந்த நிறுவனத்தில் சட்டப்படி பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் Sponsorship யில் சட்டப்படி தான் வேலை செய்து வந்தனர்.

இந்த செவிலியர்களில் 5 பேர் பாலூட்டும் தாய்மார்கள்.இதில், இந்திய கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஆன குழந்தை இருந்தது. மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அப்பாசியாவில் உள்ள குடியிருப்பில் கணவர் பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால், குழந்தைகளுக்கு சிறையில் கொண்டு சென்று தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை குவைத் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் பல குழந்தைகளுக்கு தாயிடமிருந்து உண்மையான கவனிப்பு கிடைக்காத காரணத்தால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் மனிதாபிமான அடிப்படையிலான தலையீடு மூலம் அனைவரும் விடுதலை ஆகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Kuwait MOH | Kuwait Minister

Add your comments to Search results for Kuwait MOH

Thursday, September 23, 2021

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் திருத்தப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வருகின்றன

குவைத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு அதிகபட்சமாக 14 தினார்கள் என்று திருத்தப்பட்ட புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது

Image : Kuwait MOH

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் திருத்தப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வருகின்றன

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் திருத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை அறிவித்துள்ளது. இதன்படி இனிமுதல் நாட்டில் பிசிஆர் பரிசோதனைக்கான அதிகபட்சமாக கட்டணம் 14 தினார்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர்-26) முதல் அமலுக்கு வருகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சக துணைச் செயலாளர் பாத்திமா அல்-நஜ்ஜார் தெரிவித்தார்.அதேபோல் ஆன்டிஜென் பரிசோதனைக்கு அதிகபட்சமாக 3 தினார்கள் கட்டணம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் 16 தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to Search results for Kuwait MOH

Monday, May 3, 2021

குவைத்தில் தடுப்பூசி பெறுவது தொடர்பாக சுகாதரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத்தில் தடுப்பூசி பெறுவது தொடர்பாக சுகாதரத்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image : Kuwait Moh

குவைத்தில் தடுப்பூசி பெறுவது தொடர்பாக சுகாதரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத்தில் கோவிட் பாதுகாப்பு தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் அஸ்ட்ரா செனெகா ஆகியவற்றின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இடையேயான இடைவெளி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி ஃபைசர் பயோடெக் தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இடையேயான இடைவெளி 6 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 60- வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட கால நோயாளிகள் போன்றவர்களுக்கு இந்த இடைவெளி காலம் 3 வாரங்களாக தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

அஸ்ட்ரா செனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இடைவெளி கால அளவு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் தடுப்பூசியின் முதல் டோஸ் பெறுபவர்களுக்கு பொருந்தும். தற்போது தடுப்பூசிக்காக பதிவுசெய்யப்பட்டவர்களுக்கும், முதல் டோஸ் பெற்று, இரண்டாவது டோஸுக்காகக் காத்திருப்பவர்களுக்கும் ஊசி போடும் மையம், நாள், நேரம் போன்றவற்றைத் தெரிவிக்கும் குறுஞ்செய்தி(Massage) அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Add your comments to Search results for Kuwait MOH

Friday, July 2, 2021

குவைத்தில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளா

குவைத்தில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதாக கோவிட் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

Image : Kuwait Moh

குவைத்தில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்

குவைத்தின் கோவிட் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் காலித் ஜாரல்லா அவர்கள் நாட்டில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்று கூறினார். கோவிட் பரவல் அதிகமாக இருப்பதால் நாட்டின் நிலைமை தற்போது அசாதாரணமான நிலைக்கு செல்கிறது எனவும், சுகாதாரத்துறை ஊழியர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் எனவும், நோயை தடுப்பதற்காக கைகொள்ளும் நடவடிக்கைகளுக்காக நமது சுகாதாரப் போராளிகளை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுகாதார விதிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி எடுப்பதற்கான முன்பதிவு செய்வது உள்ளிட்டவை மேற்கொள்வது நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளரின் பொறுப்பு என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

Add your comments to Search results for Kuwait MOH

Tuesday, September 14, 2021

மூன்றாவது டோஸ்யாக பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் இணையதளத்தில் பதிவு செய்த 100 % பேருக்கும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

Image : Kuwait MOH

மூன்றாவது டோஸ்யாக பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத் சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் 100 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அப்படி பதிவு செய்து தடுப்பூசியின் முதல் டோஸ் கூட கிடைக்காத யாராவது இருந்தால் Comment செய்யவும்(Note: சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை தவிர்த்து). அதேபோல் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான செயல்முறைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த அறிக்கையில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள், நீண்டகால நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். மூன்றாவது டோஸ்யாக பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் டெல்டா வகையை எதிர்த்துப் போராடுவதே இதன் குறிக்கோள் ஆகும். அதேநேரம் மாணவர்களுக்காக செலுத்தப்படும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையேயான இடைவெளி ஆறிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comments to Search results for Kuwait MOH

Tuesday, March 23, 2021

குவைத் வருகின்ற நபர்களில்,தாயகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு,நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

குவைத் வருகின்ற நபர்களில்,தாயகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு,நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : Kuwait Moh Staff

குவைத் வருகின்ற நபர்களில்,தாயகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு,நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மூன்று பிரிவினருக்கு குவைத்தில் தற்போது நடைமுறையில் உள்ள நிறுவன தனிமைப்படுத்தலில்(Institutional Isolation) இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற குவைத் அமைச்சரவையின் முடிவு, குவைத்துக்கு வெளியே வேறு நாட்டிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தொடர்பாக தெளிவில்லாமல் இருந்த நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குவைத்துக்கு வெளியே வேறு நாட்டிலிருந்து எடுத்துக்கொண்ட தடுப்பூசி குவைத் சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

குவைத்தில் வசிக்கின்ற மக்களுக்கு தற்போது ஃபைசர் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. குவைத் திரும்பும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொசாஃபிர் பயன்பாட்டு செயலியில் தற்போது தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்கான Option வழங்கப்பட்டுள்ளன. இதன் வழியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட விபரங்கள் தெளிவாக வழங்குகின்ற நபர்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இவர்கள் புறப்பட்ட நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்,அத்துடன் ஒரு வாரகால வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், தொடர்ந்து ஒரு வாரம் முடிந்ததும், நீங்கள் மீண்டும் குவைத்தில் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கோவிட் எதிர்மறை சான்றிதழை பெற வேண்டும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Kuwait MOH

Friday, July 26, 2019

குவைத்தில் விசா புதுப்பித்தலுக்கு முன்புள்ள மருத்து காப்பீட்டுத் கட்டணம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்:

குவைத்தில் விசா புதுப்பித்தலுக்கு முன்புள்ள மருத்து காப்பீட்டுத் கட்டணம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்:

குவைத்தில் வெளிநாட்டினர் எந்த துறையில் வேலை செய்தாலும் விசா தேவையாகும்.அதுபோல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முக்கியமாக மருத்துவ காப்பீடு ( Medical Insurance) தேவை.இந்த மருந்து காப்பீடு ஒவ்வொரு முறையும் விசா(Work permit) புதுப்பித்தல் செய்யும் நேரத்தில் புதுப்பித்தல் செய்ய வேண்டும். அப்படியானால் மட்டுமே புதிய விசா அடிக்கமுடியும்.

விசா புதுப்பித்தலுக்கு முன்பு மருத்து காப்பீட்டுத் தொகை நேரடியாக சம்மந்தப்பட்ட  இன்சூரன்ஸ் அலுவலகத்தில் செலுத்தும் நடைமுறையில் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளது.ஆனால் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜூலை-28,2019) ஆன்லைன் மூலம் மட்டுமே  மருந்து காப்பீட்டு தொகையை செலுத்த முடியும். இந்த திட்டம் ஜனவரி 1,2019 அன்று அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும்  ஞாயிற்றுக்கிழமை முதல் இது முழுக்க முழுக்க ஆன்லைன் முறைக்கு மாறுகிறது.

இதற்காக சுகாதார துறை புதியதாக அறிமுகம் செய்துள்ள INS Online என்ற இணையதளம் மூலம் இன்சூரன்ஸ் கட்டண தொகை இனிமுதல் செலுத்தி இன்சூரன்ஸ் நடவடிக்கைகள் எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் தொகை செலுத்தும் இணைய தளத்தின் முகவரிகள்
பின்வருமாறு:


http://insonline.moh.gov.logaction/insurance/kw

https://insonline.moh.gov.kw/ Insurance/logaction

https://insonline.moh.gov.kw/Insurance/onlineLogin.jsp ;



இந்த செய்தியை குவைத்தின் பிரபலமான தினசரி நாளிதழ் Al-Anba வெளியிட்டுள்ளது.

அரசு துறை தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப விசாவில் உள்ள நபர்கள் உள்ளிட்ட அனைத்து பகிர்வு விசாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இனிமுதல் இன்சூரன்ஸ் தொகை இதன் வழியாக எளிதாக செலுத்த முடியும்.இந்த செய்தியை குவைத்தன் பிரபல தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team





Add your comments to Search results for Kuwait MOH

Sunday, September 26, 2021

பூஸ்டர் டோஸ் எடுக்க புதியதாக தனித்தனியாக யாரும் பதிவு செய்ய வேண்டியதில்லை

குவைத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அக்டோபர் முதல் வழங்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : Kuwait MOH Hospital

பூஸ்டர் டோஸ் எடுக்க புதியதாக தனித்தனியாக யாரும் பதிவு செய்ய வேண்டியதில்லை

குவைத்தில் Fizer கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்(மூன்றாவது டோஸ்) தடுப்பூசி அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும்,இதற்கான நடவடிக்கைகளை சுகாதரத்துறை அமைச்சகம் துவங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முதல்கட்டமாக வயதானவர்கள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சத்தி குறைவாக உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது டோஸுக்கு தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மூன்றாவது டோஸ் வழங்கப்படும்.

மேலும் முதல்கட்டமாக தகுதியானவர்களுக்கு தடுப்பூசி எடுக்க செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தியாக நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்காக முன்னர் பதிவு செய்துள்ள கைபேசி எண்ணுக்கே அனுப்பப்படும். இதற்காக யாரும் புதியதாக தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. இரண்டாவது டோஸ் எடுத்து ஆறு மாதங்கள் கடந்தவர்களில் முதல் கட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்படும்.

Add your comments to Search results for Kuwait MOH

Friday, May 28, 2021

குவைத்தில் கோவிட் போராட்டத்தில் முன்நிரையில் சேவை செய்த ஊழியர்களுக்கு 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்கப்படும்

குவைத்தில் கோவிட் போராட்டத்தில் முன்நிரையில் சேவை செய்த ஊழியர்களுக்கு 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

Image : Kuwait Moh Nurses

குவைத்தில் கோவிட் போராட்டத்தில் முன்நிரையில் சேவை செய்த ஊழியர்களுக்கு 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்கப்படும்

குவைத்தில் கோவிட் நோய்க்கு எதிரான போராட்டத்தில் போராளிகளாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்க தேவையான நிதிக்கு குவைத் நாடாளுமன்றம் இன்று(27/05/21) ஒப்புதல் அளித்துள்ளது. பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்குவதற்காக ஒப்புதல் அளித்தது. கொரோனா குவைத்தில் கண்டறியப்பட்ட பிப்ரவரி 24,2020 முதல் மே 31,2020 வரையிலான கால அளவு போனஸ் கணக்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. போனஸுக்கு தகுதியான சுகாதார ஊழியர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களில் உள்ள முன்னணி ஊழியர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் கமிஷனின் கீழ் உள்ள அரசு நிறுவனங்களின் ஊழியர்கள், கோவிட் தடுப்பு நடவடிக்கையில் ஆதரவு வழங்கிய ஊழியர்கள் என்று மூன்று வகையாக தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தில் சேவை செய்யும் போது உயிரிழந்த ஊழியர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் மற்றும் உயிரிழந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சம்பளத்தின் 10 மடங்கு போனஸாக வழங்கப்படும். வேலையின் ஒரு பகுதியாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் பாதிப்பில் இருந்து மீளும் வரையில் அவர்களின் சம்பளத்தின் இரண்டு மடங்கு அல்லது 8,000 தினார்கள் அல்லது இவற்றில் எந்த தொகை அதிகமோ அந்த தொகை வழங்கபடும்.முதல் பிரிவில் அதிக ஆபத்து உள்ள ஊழியர்களுக்கு, தினசரி ஊதியத்தின் இரண்டரை மடங்கும்,சராசரி ஆபத்து உள்ள ஊழியர்களுக்கு தங்களின் தினசரி சம்பளத்தின் ஒன்றரை மடங்கும் போனஸ் ஆக வழங்கபடும்.

இரண்டாவது பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு அதிக ஆபத்து உள்ள ஊழியர்களுக்கு வழங்கபடும் போனஸின் 50 சதவீதமும், மூன்றாம் பிரிவில் உள்ளவர்களுக்கு போனஸின் 25 சதவீதம் வழங்கபடும். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கோவிட் போராளிகளுக்கு வழங்க வேண்டிய இந்த நிதிக்காக 65 உறுப்பினர்களில் 61 பேரின் ஆதரவுடன் போனஸ் வழங்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் பயனடைவார்கள்.

Add your comments to Search results for Kuwait MOH

Tuesday, September 14, 2021

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கும் தடுப்பூசி வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிடுகிறது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு தூதரகங்கள் உதவியுடன் தடுப்பூசி வழங்க அமைச்சகம் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : Kuwait MOH

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கும் தடுப்பூசி வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிடுகிறது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. நாடு ஒவ்வொரு நாளும் முழுமையான சமூக பாதுகாப்பு என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகின்ற சூழ்நிலையிலும், சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடாமல் உள்ளதால், நாட்டில் மீண்டும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் கவலை கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இணையதள பதிவு நடைமுறை மூலம் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது நடைமுறை படுத்த முடியாத காரியமாக கருதப்படுகிறது. சட்ட நடவடிக்கைக்கு பயந்து யாரும் முன் வரமாட்டார்கள் என்பதே இதற்கு முக்கிய தடையாக உள்ளது. இந்த சூழலில், அந்தந்த நாடுகளின் தூதரகங்களின் உதவியுடன், தூதரக வளாகத்தைப் பயன்படுத்தி இவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

Add your comments to Search results for Kuwait MOH

Friday, August 20, 2021

குவைத்தில் நுழைய தடை நீக்கப்பட்ட நிலையில் பயணிகள் நேரடியாக நுழைய தேவையான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விதிமுறைகள்

குவைத்தில் நுழைய தடை நீக்கப்பட்ட நிலையில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்:

Image : KuwaitCity

குவைத்தில் நுழைய தடை நீக்கப்பட்ட நிலையில் பயணிகள் நேரடியாக நுழைய தேவையான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விதிமுறைகள்

இந்தியா,இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து விமானங்கள் ஆகஸ்டு-22,2021 முதல் நேரடியாக இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கோவிட் அவசரக் குழு நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே நாட்டில் நுழைய முடியும். அரசாங்க தகவல் தொடர்பு துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விதிமுறைகள் பின்வருமாறு:

குவைத் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர், அஸ்ட்ராஜெனேகா /கோவ்ஷீல்ட், மோடெனா, ஜான்சன் & ஜான்சன் (ஒரு டோஸ்) தடுப்பூசிகளில் ஒன்றைப் நாட்டிற்கு நுழையும் பயணி கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும்.( Note:இதில் அஸ்ட்ராஜெனேகா தான் இந்தியாவில் கோவ்ஷீல்ட் என்ற பெயரில் வழங்கபடுகிறது). மேலும் குவைத்தால் அங்கீகரிக்கப்படாத சினோஃபார்ம், ஸ்புட்னிக் மற்றும் சினோவாக் தடுப்பூசி போடப்பட்டவர்கள், குவைத்தில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளில் எதாவது ஒரு டோஸை மூன்றாவதாக பூஸ்டர் டோஸ்யாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் குவைத்திலிருந்து தடுப்பூசி எடுத்து தாயகம் சென்றுள்ள நிலையில் அவர்கள் குவைத் திரும்ப இம்யூன்-ஆப் அல்லது மொபைல் ஐடி செயலியை பதிவிறக்கம் செய்யும் போது Green Signal காட்ட வேண்டும்.

குவைத்துக்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டவர்கள் அவர்களின் பாஸ்போர்டில் உள்ளவாறு பொருந்திய பெயர், தடுப்பூசி பெயர், தடுப்பூசி தேதி, தடுப்பூசி போடப்பட்ட இடம் மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடு ஆகியவை அடங்கிய தடுப்பூசி சான்றிதழை பயணத்தின் போது எடுத்துச் வர வேண்டும். QR குறியீட்டை ஸ்கேனிங் செய்ய முடியவில்லை என்றால் சான்றிதழை சுகாதார அமைச்சகத்தின் பின்வரும் இணைய இணைப்புக்கு சென்று https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_Extern_Registration.aspx இல் பதிவேற்றி அதற்கு அங்கீகராம் பெற வேண்டும். மேலும் மீதியுள்ள நிபந்தனைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவினர்:

  1. தடுப்பூசி முடித்த குடிமக்கள் மற்றும் இகாமா உள்ள வெளிநாட்டினர்
  2. 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
  3. ஸ்லோனிக் ஆப்பில் Registration செய்ய வேண்டும்
  4. ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல்(PCR  பரிசோதனை செய்து எதிர்மறை என்று  நிரூபிப்பதன் மூலம் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிக்க முடியும்)

இரண்டாவது பிரிவினர்:

  1. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி முடித்து புதிய விசாவில் வருகின்றவர்கள்(இதற்கான அர்த்தம் சிவில் ஐடி எண் பெறாதவர்கள்)
  2. 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
  3. நீங்கள் வந்த பிறகு குவைத்திலிருந்து சிம் கார்டை எடுத்து ஷ்லோனிக் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்வதாக ஒப்புதல் அளிக்க வேண்டும்
  4. ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல்(PCR  பரிசோதனை செய்து எதிர்மறை என்று  நிரூபிப்பதன் மூலம் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிக்க முடியும்)
  5. அதேபோல் குவைத் வந்து 24 மணி நேரத்திற்குள் PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும்

மூன்றாவது பிரிவினர்:

  1. தடுப்பூசி போடப்படாத நபர்கள் ஆனால் குவைத் அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்றவர்கள்
  2. 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் எதிர்மறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
  3. ஸ்லோனிக் ஆப்பில் Registration செய்ய வேண்டும்
  4. ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தல்(institutional quarantine )
  5. அதன் பிறகு ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல்
  6. குவைத் வந்த முதல் மற்றும் ஆறாவது நாளில் PCR பரிசோதனை செய்ய வேண்டிய கட்டணத் தொகையை குவைத் வருவதற்கு முன் குவைத் முசாபர் ஆப் மூலம் செலுத்த வேண்டும்.

நான்காவது  பிரிவினர்:

  1. அதே நேரம் தடுப்பூசி போடாத Article-20(விசா எண்-20) அதாவது வீட்டுத் தொழிலாளர்கள் விசாவில் வருபவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளில் இருந்துவிலக்களிக்கப்படுகிறார்கள் ஆனால் அவர்களது முதலாளிகள் அவர்களை அழைத்துவர Belsalamah platform யில் பதிவு செய்ய வேண்டும்.

Kuwait Airport | Return Kuwait | August 22

Add your comments to Search results for Kuwait MOH

Wednesday, July 10, 2019

குவைத்தில் விசா புதுப்பித்தலுக்கு முன்புள்ள மருத்து காப்பீட்டுத் தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த திட்டம் நடைமுறையில் வருகிறது:


குவைத்தில் விசா புதுப்பித்தலுக்கு முன்புள்ள மருத்து காப்பீட்டுத் தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த திட்டம் நடைமுறையில் வருகிறது:

குவைத்தில் வெளிநாட்டினர் எந்த துறையில் வேலை செய்தாலும் விசா தேவையாகும்.அதுபோல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முக்கியமாக மருத்துவ காப்பீடு ( Medical Insurance) தேவை.இந்த மருந்து காப்பீடு ஒவ்வொரு முறையும் விசா(Work permit) புதுப்பித்தல் செய்யும் நேரத்தில் புதுப்பித்தல் செய்ய வேண்டும். அப்படியானால் மட்டுமே புதிய விசா அடிக்கமுடியும்.
விசா புதுப்பித்தலுக்கு முன்பு மருத்து காப்பீட்டுத் தொகை நேரடியாக சம்மந்தப்பட்ட  இன்சூரன்ஸ் அலுவலகத்தில் செலுத்தும் நடைமுறையில் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளது.இதில் சிறிய மாற்றம் வருகிறது அதாவது வருகிற ஜூலை-28,2019 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த மருந்து காப்பீட்டு தொகையை செலுத்த முடியும்.

இன்சூரன்ஸ் தொகை ஆன்லைன் மூலம் செலுத்தும் நடைமுறை கடந்த ஜனவரி-1,2019 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் பழைய நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூன்-28 முதல்  இது முழுக்க முழுக்க ஆன்லைன் முறைக்கு மாறுகிறது.
இதற்காக சுகாதார துறை புதியதாக அறிமுகம் செய்துள்ள INS Online என்ற இணையதளம் மூலம் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல். இந்த இணையதளம் மூலம் இன்சூரன்ஸ் கட்டண தொகை இனிமுதல் செலுத்தி இன்சூரன்ஸ் நடவடிக்கைகள் எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.

அரசு துறை தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப விசாவில் உள்ள நபர்கள் உள்ளிட்ட அனைத்து பகிர்வு விசாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இனிமுதல் இன்சூரன்ஸ் தொகை இதன் வழியாக எளிதாக செலுத்த முடியும்.இந்த செய்தியை குவைத்தன் பிரபல தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் தொகை செலுத்தும் இணைய தளத்தின் முகவரி: http://insonline.moh.gov.logaction/insurance/kw


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by Kuwait tamil pasanga team



Add your comments to Search results for Kuwait MOH

Thursday, July 22, 2021

குவைத் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத் திரும்ப காத்திருக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image : Kuwait Indian Embassy

குவைத் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத் திரும்ப விரும்பும் இந்தியர்கள் குவைத் அதிகாரிகளிடமிருந்து தேவையான பயண அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தூதரகம் பரிந்துரைத்துள்ளது. தாயகத்திலிருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் காரணமாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட விபரங்களை பதிவுசெய்ய அறிமுகம் செய்யபட்ட Registration Drive Link Http://docs.google.com/forms/d/e/1FAIpQLSermf7g5Im3XSS-jNfuNnA40ixPoas-AciWJjEDJmdym95_UA/viewform தொடர்பான இன்று(22/07/21) மாலையில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி குவைத் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தூதரகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கோவி ஷீல்ட் (ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ரா செனெகா) எடுத்துக்கொண்ட சரியான தடுப்பூசி சான்றிதழ் மற்றும் பயண ஆவணங்களுடன் குவைத்தில் நுழைவதில் எந்தவொரு பயணிகளுக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள் என்று தூதரகம் உறுதியளித்தது. மேலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய இணையதள பதிவில் இதுவரையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மேலும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை தடுப்பூசி சான்றிதழில் திருத்துவதற்கான வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அதற்காக இந்திய சுகாதரத்துறையின் Link : https://www.cowin.gov.in/home ஆனால் இதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் திருத்தம் செய்ய முயற்சி செய்யும்போது தவறான தகவல்களை சிலமுறை தொடர்ந்து பதிவேற்றினால் சம்பந்தப்பட்ட நபர் மேற்கொண்டு திருத்தம் செய்ய முடியாமல் போய்விடும். எனவே திருத்தங்களைச் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல் குவைத்தின் Immune Application-யில் https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_External_RegistrationModify.aspx சான்றிதழ் பதிவு செய்வது குறித்து பல விசாரணைகளை மக்கள் மேற்கொள்ள முடியும். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மட்டுமே சான்றிதழை குவைத் Immune Application-யில் பதிவேற்றினால் போதும். தடுப்பூசி சான்றிதழின் முதல் டோஸ் சான்றிதழ் ஏற்கனவே பதிவேற்றியவர்கள் அதை Modification செய்து இறுதியாக கிடைக்கப்பெற்ற தடுப்பூசி சான்றிதழை பதிவேற்ற வேண்டும். இரண்டு சான்றிதழ்களும் 500Kb க்கு குறைவாக இருக்கும் விதத்தில் pdf ஆவணமாக பதிவேற்ற முடியும் என்றும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாலில் எடுத்துக்கொண்ட தடுப்பூசி சான்றிதழ் யில் Passport Number இணைக்க வழிமுறை:

  • Login to http://cowin.gov.in . 
  • Select Raise a Issue 
  •  Select the passport option 
  • Select the person from the drop down menu 
  • Enter passport number 
  • Submit 
  • You will receive the new certificate 
மேலும் இந்த மாதம் 28 ஆம் தேதி இந்திய தூதரகம் சார்பில் நடைபெறுகின்ற Open House நிகழச்சியில் இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் எனவும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. OPEN HOUSE நிகழச்சியில் கலந்து கொள்ள தேவையான Zoom I'd மற்றும் Password இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் இருக்கும். விருப்பம் உள்ளார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

Image : Press Release Page-1

Image : Press Release Page-2

Add your comments to Search results for Kuwait MOH

Saturday, January 16, 2021

குவைத்திற்கு வரும் பயணிகளின் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பது தற்காலிக நிறுத்திவைப்பு

குவைத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பது தொடர்பான திட்டம் மேலும் ஒரு அறிவிப்பு வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் அறிவித்தார். அமைச்சரவை உத்தரவின்படி புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ தெளிவுபடுத்தியது. பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கும், நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் தனிமைப்படுத்தலுக்காகவும் விமான நிறுவனங்கள் வழியாக வசூலிக்க எடுக்கப்பட்ட முடிவே இப்படி திடீரென அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஜனவரி 17 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த கட்டணம் வசூலிக்கும் விதிமுறை ஒத்திவைக்கப்பட்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ஒழுங்குமுறை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை இது ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான சேவைகளை அதுவரையில் விமான நிலையத்தில் உள்ள குவைத் சுகாதரத்துறை அமைச்சகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது தெரிகிறது 

kuwait Airport | PCR Fees | Testing moh

Add your comments to Search results for Kuwait MOH