BREAKING NEWS
latest

Indian Nurse - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Indian Nurse செய்திகள், கட்டுரைகள், Indian Nurse புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, October 4, 2023

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத் துணைப் பிரதமரின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் 34 இந்தியர்கள் உட்பட 60 செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்ட நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள்

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத்தில் கடந்த 23 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட 34 இந்தியர்கள் உட்பட 60 சுகாதாரப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, இன்று(04/10/23) புதன்கிழமை பிற்பகல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த செவிலியர்களின் உறவினர்கள் தங்களது சிறு குழந்தைகளுடன் நேற்று இரவு உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அமைச்சரின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து இன்று பர்வானியா குடியிருப்புத்துறை அமைச்சகத்தில் 60 பேரின் குடும்பத்தினர் ஆவணங்களுடன் விடுவிப்பதற்கான நடைமுறைகளை முடிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் தலையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவர்கள் கைதானத்திற்கான காரணம் பின்வருமாறு:

குவைத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் மருத்துவமனை சார்ந்த சில ஆவணங்கள் சட்டப்படி இல்லை என்று 34 இந்தியர்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் பிலிப்பைன்ஸ், ஈரான் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் கடந்த 3 முதல் 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஈரானிய குடிமகன் ஒருவரின் உரிமையின் கீழ் பல ஆண்டுகளாக மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் உறவினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களும் இந்த நிறுவனத்தில் சட்டப்படி பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் Sponsorship யில் சட்டப்படி தான் வேலை செய்து வந்தனர்.

இந்த செவிலியர்களில் 5 பேர் பாலூட்டும் தாய்மார்கள்.இதில், இந்திய கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஆன குழந்தை இருந்தது. மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அப்பாசியாவில் உள்ள குடியிருப்பில் கணவர் பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால், குழந்தைகளுக்கு சிறையில் கொண்டு சென்று தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை குவைத் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் பல குழந்தைகளுக்கு தாயிடமிருந்து உண்மையான கவனிப்பு கிடைக்காத காரணத்தால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் மனிதாபிமான அடிப்படையிலான தலையீடு மூலம் அனைவரும் விடுதலை ஆகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Kuwait MOH | Kuwait Minister

Add your comments to Search results for Indian Nurse

Sunday, October 22, 2023

குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் ஒருவர் மீது இன்று பொது நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Image : பதிவுக்காக மட்டுமை

குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் ஒருவர் மீது இன்று(22/10/23) பொது நல நீதிமன்றத்தில் புகார்(வழக்கு) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியருக்கு எதிராக இந்த வழக்கு தொடர பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீன போர் துவங்கிய பிறகு இதுபோன்ற ஒரு புகார் குவைத்தில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்தற்கு ஆதரவாக செவிலியர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது இஸ்ரேல் மீதான குவைத்தின் ஆதரவான நிலைப்பாட்டிற்கு முரண்பாடானதாகவும், குவைத் அரசுக்கு சவால் விடுவதாக இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செவிலியர் குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்த செவிலியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வளைகுடா உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கும் தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன நிலையில், இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன. தங்களுடைய நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்க்கு செல்கின்ற யாராக இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் நிலைப்பாடு போன்றவற்றை அறிந்து செயல்படுவது நலம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர்.சுனில் ராவ் பஹ்ரைன் நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Social Post | Case Filed

Add your comments to Search results for Indian Nurse