BREAKING NEWS
latest

Foreign-Minister - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Foreign-Minister செய்திகள், கட்டுரைகள், Foreign-Minister புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, December 14, 2020

குவைத்தின் புதிய அமைச்சரவை நியமன ஆணையில் மன்னர் கையெழுத்திட்டார்:

 


Dec-14,2020

குவைத்தின் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்ட ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு ஒப்புதல் அளிக்கும் ஆணையில் இன்று(14/12/20) திங்கள்க்கிழமை அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா கையெழுத்திட்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தியை குவைத் அரசு ஏஜென்சி செய்தியாக வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய 15 உறுப்பினர்களின் தரவரிசை பின்வருமாறு:

1) Deputy Prime Minister and Defense Minister: Hamad Jaber Al-Ali Al-Sabah.

2) Deput Prime Minister and Minister of State for Cabinet Affairs: Anas Khaled Al-Saleh.

3) Minister of Social Affairs and Minister of Awqaf and Islamic Affairs: Essa Ahmad Al-Kandari.

4) Minister of Oil and Minister of Electricity and Water: Dr. Mohammad Abdullatif Al-Fares.

5) Minister of Health: Dr. Basel Hmoud Al-Sabah.

6) Minister of Foreign Affairs: Dr. Ahmad Nasser Mohammad Al-Sabah.

7) Minister of Public Works and Minister of State for Municipal Affairs: Dr. Rana Abdullah Al-Fares.

8) Minister of State for National Assembly Affairs: Mubarak Salem Al-Harees.

9) Minister of Interior: Thamer Ali Sabah Al-Salem Al-Sabah.

10) Minister of Finance: Khalifa Musa’ad Hamada

11) Minister of Information and Minister of State for Youth Affaris: Abdulrahman Badah Al-Mutairi.

12) Minister of State for Housing Affairs and Minister of State for Services: Dr. Abdullah Abdulsamad Marafi.

13)  Minister of Education and Minister of Higher Education: Dr. Ali Fahad Al-Mudhaf.

14) Minister of Commerce and Industry: Faisal Abdulrahman Al-Medlej.

15) Minister of Justice. Dr. Nawaf Saud Al-Yassin

Source: குவைத் நியூஸ் ஏஜென்சி 


Add your comments to Search results for Foreign-Minister

Monday, March 24, 2025

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் இந்திய சமூகத்தினருடன் நெருக்கம் பேணிவந்த நபருமான காலித் அல்-ஜரல்லா காலமானார்

Image : காலித் அல்-ஜரல்லா அவர்கள்

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சருமான காலித் அல்-ஜரல்லா(வயது-78) அவர்கள் இரவு காலமானார். அவர் 1971 ஆம் ஆண்டு குவைத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தில் வேலைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் பல்வேறு வெளியுறவுத்துறை பதவிகளை வகித்ததை தொடந்து, 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் ஆவதற்கு முன்னதாக 1972 முதல் 1974 வரை லெபனானுக்கான குவைத்தின் தூதராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் குவைத்துக்குத் திரும்பிய பிறகு, வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் 1974 முதல் 1987 வரை அரபு விவகாரப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1987 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் விவகாரங்களுக்கான துறையின் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

1999 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 2021 இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்துடனும், இந்திய தூதரகத்துடனும் அவர் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த சிறந்த நபர் என்பது அமைப்புகளில் இயங்கி வருகின்ற இந்தியர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Foreign Minister | Indian Community | Kuwait Minister

Add your comments to Search results for Foreign-Minister

Monday, February 1, 2021

குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் பதவி விலகியுள்ளார்

குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் பதவி விலகியுள்ளார்; ராஜினாமாவுக்கான தெளிவான காரணம் உடனடியாக தெரியவில்லை

Image: Deputy Foreign Minister Khaled

குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் பதவி விலகியுள்ளார்

குவைத்தின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல் ஜரல்லா அவர்கள் இன்று(01/02/21) பதவி விலகியுள்ளார், தொடர்ந்து ராஜினாமாவை சமர்ப்பித்ததாக அல்-ஜரல்லா ஊடகங்களுக்கு தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் ஷேக் டாக்டர். அஹ்மத் அல் நாசர் அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இவருடைய ராஜினாமாவை தொடர்ந்து தூதர் ஜமால் அல்-கானெம் அவர்களை இடைக்கால இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.குவைத்தின் வெளியுறவு பிரச்சினைகளை தீர்ப்பதில் ஷேக் காலித் அல் ஜரல்லா முக்கிய நபராக இருந்தார். ராஜினாமாவுக்கான தெளிவான காரணம் உடனடியாக தெரியவில்லை.

Add your comments to Search results for Foreign-Minister