குவைத்தில் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Image credit:இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தின் புகைப்படம்
குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெண்கலயுகத்தில் தில்முன் கலாச்சாரத்திற்கு முந்தைய காலத்தில் அங்கிருந்ததாக நம்பப்படும் ஒரு கோவிலின் எச்சங்களை குவைத்தின் ஃபைலாகா தீவு பகுதியிலிருந்து டேனிஷ் தொல்பொருள் ஆய்வுக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்
அரேபிய வளைகுடாவில், முக்கியமான கலாச்சார, வர்த்தகம் மற்றும் சமூக பாரம்பரியத்தை புதிய கண்டுபிடிப்பு எடுத்துக்காட்டுகிறது. குவைத் தேசிய கலாச்சார, கலை மற்றும் இலக்கிய கவுன்சிலின்(என்.சி.சி.ஏ.எல்) உதவி பொதுச்செயலாளர் முஹம்மது பின் ரேடா ஒரு செய்திக்குறிப்பில் நேற்று(09/11/2024) சனிக்கிழமை மாலையில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்
ஃபைலாகா தீவில் அமைந்துள்ள பழமையான அரண்மனையின் கிழக்குப்பகுதியில் நடத்திய தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த கோயிலின் எச்சங்கள்(சிதைந்த பாகங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. முன்னதாக, மற்றொரு கோவிலின் எச்சங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்முன் என்பது கிருஸ்துவுக்கு முன்பு(கிமு)3 மில்லினியத்தில் இருந்து கிழக்கு அரேபியாவில் பண்டைய செமிடிக் மொழி பேசும் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்
அவர்களின் மதம் மற்றும் பாரம்பரியமான பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதில் புதிய கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குணாவும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Minister | Kuwait News | Kuwait Temple